Category: இன்றைய சிந்தனை

நீரூற்று தரும் புதிய வாழ்வு

எசேக்கியேல் 47: 1 – 2, 8 – 9, 12 இறைவாக்கினர் எசேக்கியேலோடு கடவுள் பேசுகிறபோதெல்லாம், காட்சியை அவருக்கு வெளிப்படுத்துகிறார். காட்சிகள் வழியாக, கடவுள் சொல்ல வந்த செய்தியை சொல்கிறார். எசேக்கியேலும் அதனைப் புரிந்து கொண்டு, வெளிப்படுத்துகிறார். எசேக்கியேல் புத்தகத்தின் ஒட்டுமொத்த அதிகாரங்களையும் நாம் வாசிக்கிறபோது, ஆங்காங்கே காணப்படுகிற இந்த காட்சிகளையும், அதன் அர்த்தத்தையும் தொடர்ச்சியாக பார்த்து அறியலாம். இந்த காட்சியில் “தண்ணீர்“ முக்கியத்துவம் பெறுவதை நாம் பார்க்கலாம். விவிலியத்தில், “தண்ணீர்“ அருமையான பல அர்த்தங்களை வெளிப்படுத்துகிற வார்த்தை. அதில் இரண்டு அர்த்தங்களைப் பொருத்திப் பார்ப்பது சாலச்சிறந்தது. விவிலியத்தில் முதலாவதாக, தண்ணீர் என்கிற வார்த்தை, வாழ்விற்கு சவாலானதாக பார்க்கப்படுகிறது. உதாரணமாக, கடல். கடலில் எழுகிற அலைகள் வாழ்வின் துன்பங்களுக்கு உருவகமாகப் பார்க்கப்படுகிறது. ஆனாலும், கடவுள் அதன் மீது தன்னுடைய அதிகாரத்தை நிலைநிறுத்தியிருக்கிறார். எனவே தான், இஸ்ரயேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று வந்தபோது, கடவுளின் வல்லமையால், கடல் இரண்டாகப்...

மனமிரங்கி கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்

திருப்பாடல் 112: 1ஆ – 2, 4 – 5, 9 கடந்த மாதத்தில் திருநேல்வேலியில் கந்துவட்டி கொடுமையால் இறந்த குடும்பத்தினரின் இறப்பு தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஏழை, எளியவர்களின் வறுமையைப் பயன்படுத்தி ஒரு கும்பல் அநியாய வட்டி வாங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைப்பது இன்றைக்கும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இதற்கு துணைபோவது கலியுகத்தின் உச்சகட்டம். இப்படியிருக்கிற சூழ்நிலையில் இன்றைய திருப்பாடல், ”மனமிரங்கி கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்” என்று சொல்கிறது. கடன் என்பது ஒருவரது இக்கட்டான சூழ்நிலையில் நாம் பணமாகவோ, பொருளாகவோ கொடுத்துச் செய்கிற உதவி. இந்த கடன் கொடுப்பது எப்படிப்பட்ட மனநிலையோடு கொடுக்கிறோம் என்பது முக்கியம். இன்றைக்கு கடன் கொடுப்பது வியாபார நோக்கத்திற்கானதாக இருக்கிறது. அது ஒரு வியாபாரம். உனக்கு நான் பணம் தருகிறேன், எனக்கு நீ அதற்கான கூலியைக் கொடுத்து விட வேண்டும் என்பது தான் வியாபார கடன்....

அனைத்து ஆன்மாக்கள் திருவிழா

கல்லறைகளை கண்முன்னே வை யோவான் 6:37-40 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் அனைத்து ஆன்மாக்கள் திருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அனைத்து ஆன்மாக்களின் பரிந்துரை உங்களுக்கு இந்த நாளில் கிடைப்பதாக! இறந்தவர்களை நினைத்துப் பார்க்கும்விதமாக `அனைத்து ஆன்மாக்கள் தினம்’ அல்லது `கல்லறைத் திருநாளை” நாம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகிறாம். இறந்தவர்கள் அனைவரையும் இன்று நாம் நினைத்து அவர்களுக்காக ஜெபிக்கிறோம். நம் அன்னையாகிய திருச்சபை, மோட்சத்திலிருக்கும் தன் மக்களை நினைத்தபின் வேதனைப்படும் தன் மக்களை நினைக்கிறது. அவர்களுக்காக பரிந்து பேசுகிறது. அவர்களுக்கு தன்னாலான உதவி செய்ய முயற்சிக்கிறது. மோட்சத்தில் வாழும் தன் மக்களுடன் அவர்களை சீக்கிரம் ஒன்றிக்கும்படி மன்றாடுகிறது. இன்று ஒவ்வொரு குருவும் மூன்று திருப்பலிகள் வைக்கிறார்கள். முதல் திருப்பலி உத்தரிக்கிற ஸ்தலத்தில்...

முதன்மையானது அன்பு

யூதப்பாரம்பரியத்தில் எப்போதுமே இரட்டை மனநிலை காணப்பட்டது. திருச்சட்டத்தை இன்னும் பல சட்டங்களாக விளக்கமளிக்கும் மனநிலை, இரண்டாவது திருச்சட்டம் முழுவதையும் ஒரே வாக்கியத்தில் கூறும் மனநிலை. இந்த இரட்டை மனநிலை தான், இறைவாக்கினர்களின் போதனையிலும் வேற்றுமையைக் காட்டியது. ஒரு சில இறைவாக்கினர்கள் ஏராளமான எண்ணிக்கையில் கடவுளின் திருச்சட்டங்களைக் கொடுத்தனர். ஆனால், மற்றவர்கள், விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் கடவுளின் சட்டங்களைக் கொடுத்தனர். உதாரணமாக, மோசே 613 சட்டங்களைப் பெற்றதாக சொல்லப்படுகிறது. இந்த 613 சட்டங்களை, தாவீது தன்னுடைய திருப்பாடல் 15ல், 11 ஆக குறைக்கிறார். இறைவாக்கினர் எசாயா(33: 15), இதனை மிகச்சுருக்கமாக ஆறாக, குறைக்கிறார். மீக்கா இறைவாக்கினர்(6:8) அதனை மூன்றாக குறைக்கிறார். மீண்டும் எசாயா இறைவாக்கினர், இதனை அடிப்படையில் இரண்டு திருச்சட்டங்களாக (56: 1) பிரிக்கிறார். இறுதியில் அபகூக்கு இறைவாக்கினர்(2: 4) ஒரே வரியில், “நேர்மையுடையவரோ தன் நம்பிக்கையினால் வாழ்வடைவர்” என்று, நிறைவு செய்கிறார். இவ்வாறு பழைய ஏற்பாட்டில், இறைவாக்கினர்களின் பல்வேறு விளக்கங்களுக்கும்...

ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்

திருப்பாடல் 94: 12 – 13அ, 14 – 15, 17 – 18 இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையில் எல்லோரையும் போல ஏற்ற, இறக்கங்கள் நிறைந்திருந்தது. அவர்கள் வளமையிலும் வாழ்ந்தார்கள். அதேபோல துன்பங்களும் அவர்களுடைய வாழ்வை நிறைத்திருந்தது. இந்த துன்பமான நேரத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு எழுந்த மிக்ப்பெரிய கவலை, கடவுள் நம்மோடு இருக்கிறாரா? என்பது. கடவுள் நம்மைக் கைவிட்டு விட்டாரோ? கடவுள் நம்மை விட்டுவிட்டு சென்று விட்டாரோ? என்கிற கவலை அவர்களுடைய உள்ளத்தில் நிறைந்திருந்தது. இப்படிப்பட்ட கேள்விகளுக்கான விடை தான், இன்றைய திருப்பாடல். திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார்: கடவுள் ஒருபோதும் தன்னுடைய மக்களை தள்ளிவிட மாட்டார். அதற்கு இரண்டு காரங்களை அவர் தெரிவிக்கிறார். முதல் காரணம், இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரால் தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தெரிந்தெடுக்கப்பட்ட மக்கள். அவர்கள் வழியாக இந்த உலகத்தை மீட்பதற்கும் ஆசீர்வதிப்பதற்கும் பணி இருக்கிறது. எனவே, கடவுள் அவர்களை ஒருபோதும் தள்ளிவிட மாட்டார். இரண்டாவது, இஸ்ரயேல் மக்கள்...