Category: இன்றைய சிந்தனை

என்றென்றும் நீர் புகழப் பெறவும் போற்றப்பெறவும் தகுதியுள்ளவர்

தானியேல்(இ) 1: 29அ,இ, 30 – 31, 32 – 33 சாத்ராக்கு, மேசாக்கு, ஆபெத்நெகோ கடவுளைத் தவிர வேறு எவரையும் வழிபட மாட்டோம் என்று சொன்னதால், நெபுகத்நேசர் அரசரால் தீச்சூளையில் தள்ளப்பட்டனர். மன்னனின் பணியாளர் அவர்களைச் சூளைக்குள் தூக்கி எறிந்தபின், சூடநீர், கீல், சணற்கூளம், சுள்ளிகள் ஆகியவற்றைச்சூளையில் போட்டு தீ வளர்த்த வண்ணம் இருந்தனர். இதனால், தீப்பிழம்பு சூளைக்கு மேல் நாற்பத்தொன்பது முழம் எழும்பிற்று. அது வெளியே பரவிச்சென்று, சூளை அருகே நின்று கொண்டிருந்த பாபிலோனியரைச் சுட்டு எறித்தது. ஆனால், இளைஞர்கள் காவல்தூதர்களின் பராமரிப்பில் பாதுகாப்பாக இருந்தனர். இக்கட்டான நேரத்தில் தங்களைக் காப்பாற்ற தூதர்களை அனுப்பிய இறைவனை அவர்கள் இணைந்து போற்றுவதுதான் இன்றைய பதிலுரைப்பாடலாக நமக்குத் தரப்பட்டிருக்கிறது. இறைவனை மூதாதையரின் கடவுளாக இளைஞர்கள் வாழ்த்துகிறார்கள். இஸ்ரயேல் மக்களுக்கு கடவுள் செய்து வந்திருக்கிற எல்லா வல்ல செயல்களையும் இஸ்ரயேலின் பிள்ளைகள் அனைவருக்கும் அவர்களுடைய மூதாதையர் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். இஸ்ரயேலின் முதுபெரும் தந்தையர்கள் கடவுளையும்,...

கிறிஸ்து அரசர் பெருவிழா

இவரைப் போல வருமா? யோவான் 18:33-37 இறையேசுவில் இனியவா்களே! கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலியை ஆர்வத்தோடும் ஆசையோடும் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். கிறிஸ்து அரசர் பெருவிழா நல்வாழ்த்துக்களை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் கிறிஸ்து அரசரின் ஆட்சி நடைபெறுவதாக! கிறிஸ்து அரசர் திருநாள், திருஅவையில் உருவாக்கப்பட்டதன் பின்னணியை நாம் சிந்திக்கும்போது, இன்னும் சில தெளிவுகள் கிடைக்கின்றன. முதலாம் உலகப்போர் முடிந்திருந்தாலும், உலகத்தில் இன்னும் பகைமை, பழிவாங்கும் வெறி ஆகியவை அடங்கவில்லை. இந்த உலகப்போருக்கு ஒரு முக்கிய காரணமாய் இருந்தது, அரசர்கள், மற்றும் தலைவர்களின் பேராசை. நாடுகளின் நிலப்பரப்பை விரிவாக்கவும், ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில் தங்கள் காலனிய ஆதிக்கத்தின் வழியே, இன்னும் பல கோடி மக்களைக் கட்டுப்படுத்தவும் வேண்டுமென்ற வெறி, ஐரோப்பிய நாடுகளை ஆட்டிப்படைத்தது....

ஆண்டவர் அளிக்கும் விடுதலையைக் குறித்து அகமகிழ்வேன்

திருப்பாடல் 9: 1 – 2, 3 & 5, 15 & 18 இறைவனை விடுதலை தருகிறவராக இந்த திருப்பாடல் அறிமுகப்படுத்துகிறது. யாரிடமிருந்து விடுதலை? எதிலிருந்து விடுதலை? மத்திய கிழக்குப் பகுதியில் நாடுகள் மற்ற நாடுகளை போரில் வென்று அடிமைப்படுத்துவதும், தங்களை வலிமையானவர்களாகக் காட்டிக்கொள்ள, அரசர்கள் பலரை வெட்டி வீழ்த்துவதும் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாக இருந்தது. இப்படிப்பட்ட பிண்ணனியில் இந்த பாடல், கடவுளை நம்புகிறவர்கள் அடிமைத்தனத்திலிருந்தும், தீமைகளில் இருந்தும், விடுதலை பெறுவார்கள் என்கிற செய்தியை அறிவிக்கிறது. இன்றைய உலகில் நாம் சந்திக்கிற பிரச்சனைகள் ஏராளம். நேர்மையாக வாழ்கிறவர்கள் துன்பங்களை அனுபவிக்கிறார்கள். கடின உழைப்பின் மூலமாக நாம் முன்னேறுகிறபோது, மற்றவர்கள் நம்மைப்பார்த்து பொறாமைப்படுகிறார்கள். நம்முடைய வளர்ச்சியில் காழ்ப்புணர்வு கொள்கிறார்கள். நம்மை பழித்துரைக்கிறார்கள். ஆனால், ஆண்டவரிடம் நம்மையே நாம் ஒப்படைக்கிறபோது, கடவுள் நம்மை பாதுகாப்பார். எல்லாவிதமான தீமைகளில் இருந்தும், அவர் நம்மை பாதுகாப்பாக வழிநடத்துவார். நமக்கு எதிராக எத்தனை பேர் எதிர்த்து நின்றாலும்,...

மாட்சிமிகு உம் பெயரை போற்றுகிறோம் ஆண்டவரே!

1குறிப்பேடு 29: 10, 11, 12 தாவீது கடவுளுக்கு ஓர் ஆலயம் கட்ட வேண்டுமென்று விரும்புகிறார். அதனை கடவுளிடத்தில் வேண்டுகோளாகவும் பணிக்கிறார். ஆனால், தாவீது பத்சேபாவுடன் செய்த தவறு, அவருடைய வாழ்க்கையில் நீங்காத கறையாக படிந்துவிடுகிறது. கடவுள் தனக்கு ஆலயம் ஒன்று, தாவீதால் கட்டப்படுவதை விரும்பவில்லை. ஏனெனில், அதற்கான தகுதியை அவர் இழந்துவிட்டார். ஆனால், தாவீது கடவுளுடைய பணிக்காக செய்த பல நல்ல பணிகளை அவர் மறக்கவில்லை. எனவே, அவருடைய மகன் சாலமோன் வழியாக, தனக்கு ஆலயம் கட்டுவதற்கு அனுமதி தருகிறார். இந்த பிண்ணனியில் தான், இந்த பாடல் பாடப்படுகிறது. ஆலயம் கட்டுவது தொடர்பான பணிகளைப் பற்றி, மக்களுக்கும், சபையோருக்கும் எடுத்துச்சொல்லிக் கொண்டிருக்கிற தாவீது அரசர், கடவுள் மீது தான் கொண்டிருக்கிற நம்பிக்கையை, தன்னுடைய ஆன்மீகத்தின் ஆழத்தை இந்த பாடல் வழியாக வெளிப்படுத்துகிறார். தாவீது கடவுளால் தண்டிக்கப்பட்டவர் தான். ஆனால், தாவீதின் உள்ளத்தில் தான், கடவுளால் தண்டிக்கப்பட்டோம் என்பதைக் காட்டிலும், கடவுளிடமிருந்து...

வழியைச் செம்மைப்படுத்துங்கள்

திருப்பாடல் 50: 1 – 2, 5 – 6, 14 – 15 செம்மைப்படுத்துதல் என்றால் என்ன? பண்படுத்துவது, தூய்மைப்படுத்துவது, நடப்பதற்கு ஏதுவாக தயார் செய்வது என்று பலவிதமான அர்த்தங்களில் நாம் இந்த வார்த்தைகளைப் புரிந்து கொள்ளலாம். திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார்: ”தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் ஆண்டவர் தரும் மீட்பைக் கண்டனர்”. மனித வாழ்க்கை நீண்டதொரு பயணம். இந்த பயணத்தில் நாம் செல்லும் பாதை முக்கியமானது. நம்முடைய பயணத்தில் பல வழிகள் இருக்கலாம். ஆனால், நாம் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சரியாக பயணிக்க வேண்டும். நம்முடைய வழிகளில் தடைகள் வரலாம், சோதனைகள் வரலாம், ஆனால், அவற்றைக் கடந்து நாம் செல்ல வேண்டும். அதைத்தான் இங்கே நாம் பார்க்கிறோம். வாழ்வில் எதை நோக்கி நம்முடைய பயணம் அமைகிறது? என்பது முக்கியமானது. கடவுள் தரும் மீட்பையும், நிறைவையும் நாம் அடைய வேண்டுமென்றால், குறிப்பிட்ட பாதையைத்தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் விருப்பப்பட்ட...