Category: இன்றைய சிந்தனை

கடவுளின் மக்கள்

திருமுழுக்கு யோவான் அனைவருக்கும் திருமுழுக்கு கொடுக்கிறார். திருமுழுக்கு என்பது யூதர் அல்லாத புறவினத்தவர் யூத மதத்திற்கு வருகிறபோது நிறைவேற்றக்கூடிய ஒரு சடங்கு. அந்த சடங்கை அனைவருக்கும் கொடுப்பதன் வழியாக, யூதர்களையும் அவர் புறவினத்து மக்களாக, இன்னும் கடவுளுக்குள் வராத மக்களாகவே பார்க்கிறார் என்பதை நமக்கு அறிவிக்கிறது. ஆக, வெறும் பிறப்போ, அருள் அடையாளங்களோ நம்மை கடவுளின் பிள்ளைகளாக மாற்றிவிடாது. மாறாக, உண்மையான வாழ்வே, நமக்கு கடவுளின் அருளைப் பெற்றுத்தரும். விரியன் பாம்புக்குட்டியை திருமுழுக்கு யோவான் உவமையாகச் சொல்கிறார். விரியன் பாம்புகளை ஒருவருக்கு ஒப்பிட்டுச்சொன்னால், அவரை அவதூறாகப் பேசுவதற்குச் சமம் என்ற கருத்து, மத்திய கிழக்குப் பகுதிகளில் நிலவி வந்த நம்பிக்கை. விரியன் பாம்புக்குட்டிகள் என்று சொல்வது அதைவிட மோசமான வார்த்தை. காரணம், விரியன் பாம்புக்குட்டிகள் தங்களது தாயை பிறக்கிறபோது, கொன்றுவிடும். அதேபோல யூத சமயத்தலைவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிற மக்களை, அவர்களே தவறான வாழ்க்கையை வாழக்கூறி, அவர்களை அழித்துவிடுகிறார்கள் என்று உவமையாகச் சொல்லப்படுகிறது....

புனித பிரான்சி சவேரியார் – மறைப்பணியாளர் இந்தியாவின் பாதுகாவலர் பெருவிழா

தூய பிரான்சிஸ் சேவியர் ( புனித சவேரியார் திருவிழா) ”ஒருவன் இந்த உலகம் முழுவதையும் தனதாக்கிக் கொண்டாலும், தன் ஆன்மாவை இழந்தால் அதனால் வரக்கூடிய பயன் என்ன?” என்கிற வார்த்தைகளை எப்போது நாம் கேட்டாலும், நம் நினைவுக்கு உடனடியாக வரக்கூடியவர் தூய சவேரியார். அந்த அளவுக்கு இந்த இறைவார்த்தை சவேரியாரோடு தொடர்புப்படுத்தும் அளவுக்கு, அவரோடு ஒன்றிணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சவேரியார் வாழ்வும், அவரது அர்ப்பணம் நிறைந்த போதனையும் நமக்குச் சுட்டிக்காட்டுவது என்ன? தூய சவேரியார் நற்செய்திப் பணிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். ”மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்கிற இயேசுவின் வார்த்தைகளை தனது உள்ளத்தில் ஏற்று, அதற்காக தனது வாழ்வையே அர்ப்பணித்தவர். மத்தேயு நற்செய்தியின் மலைப்பொழிவில் (5: 4), ”துயருறுவோர் பேறுபெற்றோர்” என்கிற செய்தி நமக்குத் தரப்பட்டிருக்கிறது. இந்த துயருறுவோர் யார்? வாழ்க்கையில் துன்பப்படுகிறவர்களா? ஒருவேளை சோற்றுக்கும் வழியில்லாமல் வறுமையைச் சந்திக்கிறவர்களா? வாழ்க்கையில் பல காரணங்களுக்கு துன்பங்கள் வரலாம். அல்லது அதற்கு காரணமும்...

இயேசுவின் வல்லமை

மருத்துவம் அவ்வளவாக வளர்ச்சியடையாத காலக்கட்டம். பார்வையின் மகத்துவம் தெரியாத மனித சமூகம். இவற்றிற்கு மத்தியில் அறியாமை. இதனால், இயேசு வாழ்ந்த காலத்தில் ஏராளமான போ் தங்களது கண்பார்வையை இழந்திருந்தனர். கண் பார்வை இழப்பிற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அவையனைத்துமே சாதாரண காரணங்கள் தான். சூரிய ஒளியிலிருந்து சில சமயங்களில் வரக்கூடிய கடுமையான ஒளி, சரியாக கண்களைப் பராமரிக்காமை, தொற்று போன்றவை, பார்வை இழப்பிற்கு காரணங்களாக இருந்தன. அப்படிப்பட்ட சூழ்நிலை நிலவிய காலக்கட்டத்தில், இரண்டு பார்வையற்ற மனிதர்கள் இயேசுவிடத்தில் பார்வை பெற வருகிறார்கள். இயேசு அவர்கள் கூப்பிட்டவுடன் பதில் சொல்லிவிடவில்லை. அவர்களின் தேடல் உண்மையானதா? உறுதியானதா? என்று உறுதிப்படுத்திக்கொள்கிறார். அது உண்மையானதும், உறுதியானதும் என்பதை உணர்ந்தவுடன் அவர், அவர்களுக்கு உதவி செய்கிறார். கடவுளிடத்தில் நாம் செபிக்கிறபோது, அது உண்மையானதாக, உறுதியானதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால், கடவுளிடத்தில் நாம் தொடர்ந்து சென்று கொண்டேயிருப்போம். எப்போது நாம் வெறும் தேவைக்காகச் செல்கிறோமோ, அப்போது நம்மிடத்தில்...

பாறைமீது கட்டப்பட்ட வீடு

ஆண்டவரே, ஆண்டவரே, என்று சொல்பவர், செபிப்பவர் விண்ணரசு சேரமாட்டார். மாறாக, தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வார் என்னும் ஆண்டவரின் மொழிகள் இறை நம்பிக்கையுடைய அனைவருக்கும் அறைகூவல் விடுக்கும் வசனம் இது. நமது இறைப்பற்று சொல்லில் முடங்கி விடாமல், செயல்களில் வெளிப்பட வேண்டும். செப ஆர்வலர்களுக்கும் வெல்விளியாக இச்சொல் அமைந்துள்ளது. செபக்குழுக்களில் சேர்ந்து செபிக்கிறவர்கள் தங்கள் வாழ்வு தந்தையின் விருப்பப்படி அமைய முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால், செபம் பயனற்றதாக மாறிவிடும். நமது இறைப் பற்றும் பாறைமீது கட்டப்பட்ட வீடு போல அமையட்டும். மன்றாடுவோம்: அழைத்தலின் நாயகனே இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். புனித சவேரியாரை மறைப்பணியாளராக அழைத்து, அவர் வழியாக நீர் எங்களுக்குத் தந்த விசுவாசம் என்னும் கொடைக்காக நன்றி கூறுகிறோம். அவரது எடுத்துக்காட்டாலும், பரிந்துரையாலும், எங்கள் வாழ்வும் தந்தையின் திருவுளத்திற்கேற்ப அமைவதாக! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென். ~ அருள்தந்தை குமார்ராஜா

இயேசுவின் மகிழ்ச்சியான வாழ்வு

முப்பது ஆண்டு காலம் தனது பெற்றோருடன் மகிழ்ச்சியாக, கீழ்ப்படிதலோடு வாழ்ந்த இயேசு தனது பணிவாழ்வைத் தொடங்குகிறார். சாதாரண மக்களில் ஒருவராக வாழ்ந்த இயேசு, இனி தன்னை அடையாளப்படுத்தக் கொள்ள வேண்டிய நேரம் வந்ததும், அதற்கு தன்னையே தயார்படுத்துகிறார். இதுவரை அவரது வாழ்க்கையில், கவலை ஒன்றும் இல்லை. தனது தாயோடு, தாய்க்கு நல்ல மகனாக, வாழ்வின் இனிமையை உணர்ந்து, பூரிப்போடு இருக்கிறார். வாழ்க்கை இப்படிப்போனால், அது நன்றாகத்தான் இருந்திருக்கும். ஆனால், இயேசு அதற்காக வரவில்லை. அதையும் தாண்டிச்செல்லக்கூடிய பயணம் தான் அவரது வாழ்க்கை. அதற்காகத்தான் அவர் வந்திருக்கிறார். தனது நேரம் வருமளவும் பொறுமையோடு, பணிவோடு காத்திருக்கிறர். நேரம் வந்ததும், அதற்கான முழுவீச்சில் தனது பணியை ஆரம்பிக்கிறார். முப்பது ஆண்டுகள் தனது குடும்பத்தோடு வாழ்கிறபோது, அதை மகிழ்வோடு நிறைவோடு வாழ்கிறார். மூன்று ஆண்டு காலம் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, வாழ்ந்தபோதும் மகிழ்ச்சியாக வாழ்கிறார். ஆக, எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாலும், மகிழ்வோடு வாழ்கிறார். இன்றைய நமது வாழ்க்கை...