Category: இன்றைய சிந்தனை

கடவுள் எதிர்பார்க்கும் நேர்மை

“அந்நாட்களில் விழுந்துகிடக்கும் தாவீதின் கூடாரத்தை மீண்டும் உயர்த்துவேன்” என்று, ஆண்டவர் இறைவாக்கினர் ஆமோஸ் வழியாக கூறுகிறார். இங்கு “தாவீதின் கூடாரம்” என்கிற வார்த்தை நம்முடைய கவனத்தை ஈர்க்கிறது. வழக்கமாக, “தாவீதின் இல்லம்” என்று சொல்லப்படுவது, கூடாரமாக மாறியது எப்படி? இதனுடைய பொருள் என்ன? ஏனென்றால், கூடாரம் என்பது சாதாரணமானது, எளியது, பார்ப்பதற்கு சிறியது. ஆமோசின் காலத்தில், தாவீதின் அரசு மிகச்சிறியதாக, “இல்லம்” என்று அழைக்கப்படுவதற்கு முடியாத அளவிற்கு மாறியது. அதனால் தான், இங்கு கூடாரம் என்கிற வார்த்தையை இறைவாக்கினர் பயன்படுத்துகிறார். “இதோ நாட்கள் வருகின்றன” என்கிற வார்த்தைகள், அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பதாக இருக்கின்றன. அவர்களுக்கு விரைவில் அழிவு வரப்போகிறது. ஆனாலும், கடவுள் அவர்களை நிர்கதியாக விட்டு விட மாட்டார். அவர்களுடைய குற்றங்களுக்கு ஏற்ற தண்டனையை அனுபவித்தவுடன், அவர்கள் ஆறுதலைப் பெறுவார்கள். ஆமோஸ் இறைவாக்குரைத்த நேரத்தில், அங்கு வளமை இருந்தது. ஆனால், ஆண்டவர் இல்லை. கடவுளின் நாள் வரும் வேளையில், அங்கு வளமையும்...

நீதியுள்ளவர்களாக வாழ்வோம்

ஆமோஸ் 8: 4 – 6, 9 – 12 ஓய்வுநாள் எப்போது நிறைவுறும்? என்று எதிர்பார்க்கிறவர்களை ஆமோஸ் இறைவாக்கினர் கடுமையாகச் சாடுகிறார், “கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வுநாள் எப்பொழுது முடியும்?”. ஓய்வுநாள் என்பது வெறுமனே வழிபாட்டிற்காக மட்டும் வைத்திருக்கவில்லை. மாறாக, அது சமுதாய நீதி சார்ந்து சிந்தித்தன் வாயிலாக ஏற்படுத்தப்பட்டது என்பதுதான் உண்மை. அன்று, வீட்டு உரிமையாளருக்கு மட்டுமல்ல, அந்த வீட்டில் பணி செய்யக்கூடிய பணியாளர்கள், விலங்குகள், அடிமைகள் என அனைவருக்கும் ஓய்வு தரக்கூடிய நாளாக இருந்தது, இணைச்சட்டம் 5: 14 ” ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வுநாள். எனவே, அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும், மாடு, கழுதை, மற்றெல்லாக்கால்நடைகளும், உன் வாயில்களுக்கும் இருக்கும் அன்னியனும், யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். நீ ஓய்வெடுப்பது போல், உன் அடிமையும், அடிமைப்பெண்ணும் ஓய்வெடுக்கட்டும்”. ஆனால், வியாபாரிகள் எப்போது ஓய்வுநாள் முடியும்? என்று...

இறைவாக்கினர்களின் பணி

ஆமோஸ் 7: 10 – 17 இரண்டாவது எரோபவாமின் ஆட்சிக்காலத்தில், இஸ்ரயேலில் வளமையும், அமைதியும் நிறைந்திருந்தது. ஆனால், அதற்கு மையமாக விளங்கிய, அதற்கு காரணமாக விளங்கிய இஸ்ரயேலின் கடவுளை அவர்கள் மறந்துவிட்டனர். இன்றைய பகுதி, பெத்தேலின் குருவாகிய அமட்சியாவிற்கும், இறைவாக்கினர் ஆமோசிற்கும் இடையே நடக்கும் வாக்குவாதத்தை எடுத்துரைக்கிற நிகழ்வாக அமைகிறது. அமட்சியா, ஆமோசை பிழைப்புவாதி என்றும், பிழைப்பிற்காக இறைவாக்கு உரைக்கிறவர் என்றும் சாடுகிறார். அரசனிடமும் அவரைப்பற்றி அவதூறான வார்த்தைகளைச் சொல்கிறார். அவரை வேறு எங்காவது இறைவாக்குரைத்து, அவரது வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறுகிறார். ஆனால், ஆமோசோ அது தன்னுடைய பிழைப்பு அல்ல என்பதை உறுதிப்படுத்துகிறார், “நான் இறைவாக்கினன் இல்லை. இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை. நான் ஆடு மாடு மேய்ப்பவன். ஆண்டவர் என்னைத் தேர்ந்தெடுத்து, இறைவாக்கு உரைத்திடு என்று சொன்னார்” என்று கூறுகிறார். இப்போது அவருடைய சினம், அமட்சியாவை நோக்கி திரும்புகிறது. “இஸ்ரயேலுக்கு எதிராக இறைவாக்கு உரைக்காதே. ஈசாக்கின் வீட்டார்க்கு எதிராகப்...

இயேசு நம்மைவிட்டு அகலவேண்டுமா?

இன்றைய நற்செய்தி வாசகம் தரும் செய்தி நமக்குக் கொஞ்சம் வியப்பைத் தருகிறது. கதரேனர் வாழ்ந்த பகுதியில் இயேசு பேய் பிடித்த இருவரை நலப்படுத்துகிறார். அந்தப் பேய்கள் இயேசுவின் அனுமதியுடன் பன்றிகளுக்குள் புக, பன்றிகள் கடலில் வீழந்து மடிகின்றன. எனவே, “நகரினர் அனைவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டு வந்து, அவரைக் கண்டு. தங்கள் பகுதியைவிட்டு அகலுமாறு வேண்டிக்கொண்டனர்”. இயேசுவும் சற்று வியந்திருப்பார், அந்த மக்களின்மீது பரிவும் கொண்டிருப்பார். காரணம், அவர்களுக்கு விழுமியங்களின் தராதரம் தெரியவில்லை. தங்கள் பகுதியைச் சேர்ந்த இரு மனிதர்கள் பேயின் பிடியிலிருந்து நலம் பெற்றுவிட்டார்களே என்று மகிழாமல், தங்களின் பன்றிகள் மடிந்துவிட்டனவே என்று வருந்துகிறார்கள். அதனால், இயேசுவின் அருமையும் தெரியாமல் அவரையும் தங்கள் பகுதியை விட்டு அகலச் சொல்கின்றனர். அவர்களைப் பற்றி வியப்படையும் நாம் நமது வாழ்வை அலசிப் பார்த்தால், நாமும் ஒருவேளை அந்த நகரினர் போலவே நடந்திருப்போம் எனத் தெரியவரும். நாமும் இந்த உலகின் சிறிய இன்பங்கள், மகிழ்ச்சிகளுக்காக, பேரின்பமாம்,...

கடவுளுக்கு உரியவற்றை தேர்ந்தெடுப்போம்

மனித வாழ்வில் நாம் எதைத்தேர்ந்தெடுக்கிறோம் என்பது முக்கியமான ஒன்று. இன்று நாம் விழா எடுக்கும் இந்திய அப்போஸ்தலர் புனித தோமையார் நாம் எதைத்தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை தம் வாழ்வின் மூலம் நமக்குக் கற்றுத்தருகிறார். தேர்ந்தெடுத்த இரண்டுவகை: 1. கடவுளுக்கு உரியவற்றை தேர்ந்தெடுத்தல். 2. மனிதனுக்கு உரியவற்றை தேர்ந்தெடுத்தல். கடவுளுக்கு உரியவற்றை நாம் தேர்ந்தெடுக்கும்போது, நாம் சிலுவையைத்தூக்க தயாராக இருக்க வேண்டும். எப்படிப்பட்ட சிலுவை. உதாரணமாக, தன்னலம் துறந்து, பொது வாழ்க்கையிலே, பொதுநலத்தில் ஈடுபட்டு மக்களுக்காக உழைக்கும்போது, நமக்கு அவமானங்கள் மட்டுமே கிடைக்கும். போகிறவர்கள், வருகிறவர்கள் எல்லாம் நம்மைத் திட்டலாம். நம்மீது, அவமானங்களை வாரி இறைக்கலாம். நமது பெரைச் சீரழிக்கலாம். நம்மீது அபாண்டமாக, பழிகளைச் சுமத்தலாம். ஆனால், அந்த சிலுவை தான் நம் வாழ்வுக்கு மீட்பைத்தர போகிறது. நம்மேல் சிலுவையைச் சுமத்தியவர்களுக்கு அழிவைத்தரப்போகிறது. ஏனென்றால், சிலுவையிலே தான் நமக்கு, மீட்பு உண்டு. ஒருவேளை மனிதனுக்கு உரியவற்றைத் தேர்ந்தெடுத்தால், இந்த உலகத்திலே பல சொத்துக்களை...