Category: இன்றைய சிந்தனை

இறைவனின் தாயுள்ளம்

ஓசேயா 11: 1 – 4, 8 – 9 இறைவாக்கினர் ஓசேயாவின் நூலில் “திருமணம்” என்கிற உறவைப்பற்றிய உருவகம் இருப்பதை நாம் இதுவரை பார்த்தோம். இஸ்ரயேலுக்கும், இறைவனுக்கும் உள்ள உறவு, இந்த திருமண உறவு போன்றது என்பதைத்தான், இறைவாக்கினர் தன்னுடைய இறைவார்த்தையில் பகிர்ந்துகொள்கிறார். ஆனால், 11 ம் அதிகாரம், சற்று மாறுபட்ட உருவகத்தை நமக்குக் கொடுத்து, இந்த அதிகாரத்திற்கான தனித்துவத்தை சிறப்பாக விளக்கிக் கூறுகிறது. இந்த அதிகாரத்தில், பெற்றோர்-பிள்ளை உருவகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த அதிகாரம் தான், இறைவனுடைய ஆழ்மனத்தை நாம் அறிவதற்கு உதவியானதாக இருக்கிறது. இறைவன் என்றாலே, அன்பும், இரக்கமும் நிறைந்தவர் என்பதை, இந்த அதிகாரத்தில் நாம் கற்றுக்கொள்ளலாம். ஒரு குழந்தையை, அந்த குழந்தையின் தாய் எப்படியெல்லாம் வளர்க்கிறாள்? என்பது நாம் அறிந்த ஒன்று. அது பேசும் மழலைச்சொல், அதுநடைபயிலும் அழகு, அதன் வளர்ச்சி ஒவ்வொன்றிலும் தாய் அகமகிழ்கிறாள். குழந்தையின் உலகமாக இருக்கிறாள். குழந்தைக்கும் தாய் தான், உலகமாக இருக்கிறது....

நேர்மை என்னும் அணிகலன்

ஓசேயா 10: 1 – 3, 7 – 8, 12 “இஸ்ரயேல் தழைத்து வளர்ந்த திராட்சைக்கொடி, அது மிகுதியான கனிகளைத் தனக்கே தாங்கி நிற்கின்றது”. இறைவன் இஸ்ரயேல் மக்களை பலவிதமான வளங்களால் நிரப்பியிருந்தார். குறிப்பாக, பொருட்செல்வத்தால் நிரப்பியிருந்தார். வளமையும், மகிழ்ச்சியும் நாட்டில் குடிகொள்ள செய்திருந்தார். எவ்வளவு அதிகமாக இறைவன் அவர்களை ஆசீர்வதித்தாரோ, அவ்வளவுக்கு வேற்றுத் தெய்வங்களுக்கு பலிபீடங்களை அவர்கள் அமைத்தனர். இது இறைவனுக்கு வருத்தத்தையும், கவலையையும் தந்தது. தான் தேர்ந்தெடுத்த மக்கள், தனக்கு எதிராக கிளர்ந்து, தன்னை மறந்து, தான் கொடுத்த செல்வங்களை சரியான வழியில் பயன்படுத்தாமல்,: வேற்றுத்தெய்வங்களை ஆராதிப்பதற்கும், தவறான வாழ்க்கை வாழ்வதற்கும் பயன்படுத்துகிறார்களே, என்று கோபம் கொள்கிறார். யாருக்கு அதிகமாக கொடுக்கப்படுகிறதோ, அவர்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கப்படும். அதுதான் இஸ்ரயேல் மக்கள் வாழ்க்கையிலும் நடந்தது. இஸ்ரயேல் மக்கள் இறைவனால் அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் வழியாக இந்த உலகத்திற்கு ஆசீரையும், மீட்பையும் வழங்க இறைவன் திட்டமிட்டிருந்தார். ஆனால், இஸ்ரயேல் மக்கள்...

கடவுளின் அழைப்பு

அழைப்பின் மகிமை இன்றைய வாசகத்தில் வெளிப்படுத்தப்படுகிறது. மக்கள் ஆயரில்லா ஆடுகள் போல இருப்பதைப்பார்த்து, அவர்கள் மீது அவர் பரிவு கொள்கிறார். அறுவடை மிகுதி, வேலையாட்களோ குறைவு என்று அவர் சொல்கிறார். ஆகையால், தேவையான வேலையாட்களை தமது அறுவடைக்கு அனுப்பும்படி, அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள், என்று இயேசு சொல்கிறார். இங்கு அழைப்பு எங்கிருந்து, யாரிடமிருந்து வருகிறது? என்பது தெளிவாகச் சொல்லப்படுகிறது. அழைப்பு கடவுளிடமிருந்து வருகிறது. அழைப்பு என்பது மனிதர்கள் தேர்வு செய்வது அல்ல. மாறாக, கடவுள் கொடுக்கிற கொடை. அவரது தாராள உள்ளத்தில் பொழியப்படக்கூடியது. ஆக, கடவுளே நம்மை அவரது பணிக்காக தேர்வு செய்கிறார் என்றால், அது எவ்வளவுக்கு மகிமைமிக்க பணி. ஒரு சாதாரண நிறுவனத்தில் நடக்கும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளும் நாம், வெற்றி பெற்றால், தேர்ந்தெடுக்கப்பட்டால், எவ்வளவுக்கு மகிழ்ச்சியடைகிறோம். சாதாரண மனிதரின் தேர்வுக்கு நாம் இவ்வளவு மகிழ்ச்சியடைகிறோம் என்றால், கடவுள் நம்மை தேர்ந்தெடுத்தால், எந்த அளவுக்கு நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். அதுதான் பெறுதற்கரிய...

நம்பிக்கை வழியாக இறையாசீர் பெறுவோம்

இன்றைய நற்செய்தியில் பல ஆண்டுகளாக இரத்தப்போக்கினால் அவதியுற்ற பெண்ணை இயேசு குணப்படுத்துகிறார். யூதர்களுடைய பார்வையில் இரத்தப்போக்கு சம்பந்தப்பட்ட நோய் கொடுமையானது மற்றும் அவமானத்துக்குரியது. மக்கள் மத்தியில் அது அருவருக்கத்தக்க நோயாகக் கருதப்பட்டது. நிச்சயம் அந்தப்பெண் தாழ்வு மனப்பான்மையோடு இருந்திருக்க வேண்டும். லேவியர் 15: 25 – 27 ல் இரத்தப்போக்கு சம்பந்தப்பட்ட சட்டம் விளக்கப்படுகிறது. “பெண் ஒருத்திக்கு உரிய மாதவிலக்கு நாள்கள் கடந்தும் உதிரப்பெருக்கு நீடித்தால், அந்த நாள்கள் எல்லாம் விலக்கு நாள்களைப்போல் தீட்டானவையே. அந்த நாள்கள் எல்லாம் அவள் படுக்கும் படுக்கை அனைத்தும், விலக்குக் காலப்படுக்கைக்கு ஒத்ததே: அவள் அமரும் அனைத்தும் தீட்டுக்காலத்தைப் போன்றே விலக்காய் இருக்கும்….”. ஒட்டுமொத்தமாக, இரத்தப்போக்குடைய பெண் தீட்டுள்ளவளாகக் கருதப்பட்டாள். அவள் தொட்ட அனைத்தும் தீட்டானதாகக் கருதப்பட்டது. அந்தப்பெண் வழிபாட்டில் கலந்து கொள்வதில் இருந்து விலக்கி வைக்கப்பட்டாள். மக்களோடு மக்களாக அவள் செல்ல முடியாது. மக்கள் கூட்டத்தோடு இயேசு சென்றபோது, அவள் வந்ததே யாருக்கும் தெரிந்திருந்தால்,...

இறைவாக்குப் பணி

எசேக்கியேல் 2: 2 – 5 இறைவாக்கினர் எசேக்கியேல், கடினமான நேரத்தில் இறைவாக்குப் பணியைச் செய்ய இறைவனால் அனுப்பப்படுகிறார். கி.மு.597 ம் ஆண்டு, பாபிலோனியர்கள் யூதாவை முற்றுகையிடுகிறார்கள். வேறு வழியில்லாமல் பாபிலோனியர்களிடம் யூதர்கள் சரணடைகிறார்கள். யூதர்களுக்கு மிகப்பெரிய கப்பத்தொகையை அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டியதிருக்கிறது. செதேக்கியாவை யூதர்களின் அரசனாகவும், தங்களின் கைப்பொம்மையாகவும் பாபிலோனியர்கள் நியமனம் செய்கிறார்கள். ஆனால், பத்து ஆண்டுகளுக்குப் பின், செதேக்கியா பாபிலோனியர்களுக்கு எதிராக நிற்பதற்கு தயாராகுகிறார். எகிப்தியர்களுடன் சேர்ந்து கொண்டு, பாபிலோனியர்களை எதிர்க்கத் துணிகிறார். இது நெபுகத்நேசருக்கு கோபத்தைத் தூண்டுகிறது. கி.மு.587 ம் ஆண்டு, மீண்டும் எருசலேம் நகருக்கு படையெடுத்து வந்து, அவர்களை சின்னாபின்னமாக்குகிறார். எருசலேமை தரைமட்டமாக்குகிறார். இருக்கிற செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடிக்கிறார். மீண்டும் தன்னுடைய கைப்பொம்மையாக அரசரை நியமிப்பதில் அவருக்கு உடன்பாடில்லை. எனவே, அனைவரையும் நாடுகடத்துகிறார். இஸ்ரயேல் என்கிற நாடு இல்லாமல் போகச் செய்கிறார். இப்படிப்பட்ட மோசமான, துயரமான நேரத்தில் இறைவாக்கினர் எசேக்கியேல் இறைவாக்குப் பணியைச்...