நீரூற்று தரும் புதிய வாழ்வு
எசேக்கியேல் 47: 1 – 2, 8 – 9, 12 நீரூற்று தரும் புதிய வாழ்வு இறைவாக்கினர் எசேக்கியேலோடு கடவுள் பேசுகிறபோதெல்லாம், காட்சியை அவருக்கு வெளிப்படுத்துகிறார். காட்சிகள் வழியாக, கடவுள் சொல்ல வந்த செய்தியை சொல்கிறார். எசேக்கியேலும் அதனைப் புரிந்து கொண்டு, வெளிப்படுத்துகிறார். எசேக்கியேல் புத்தகத்தின் ஒட்டுமொத்த அதிகாரங்களையும் நாம் வாசிக்கிறபோது, ஆங்காங்கே காணப்படுகிற இந்த காட்சிகளையும், அதன் அர்த்தத்தையும் தொடர்ச்சியாக பார்த்து அறியலாம். இந்த காட்சியில் “தண்ணீர்“ முக்கியத்துவம் பெறுவதை நாம் பார்க்கலாம். விவிலியத்தில், “தண்ணீர்“ அருமையான பல அர்த்தங்களை வெளிப்படுத்துகிற வார்த்தை. அதில் இரண்டு அர்த்தங்களைப் பொருத்திப் பார்ப்பது சாலச்சிறந்தது. விவிலியத்தில் முதலாவதாக, தண்ணீர் என்கிற வார்த்தை, வாழ்விற்கு சவாலானதாக பார்க்கப்படுகிறது. உதாரணமாக, கடல். கடலில் எழுகிற அலைகள் வாழ்வின் துன்பங்களுக்கு உருவகமாகப் பார்க்கப்படுகிறது. ஆனாலும், கடவுள் அதன் மீது தன்னுடைய அதிகாரத்தை நிலைநிறுத்தியிருக்கிறார். எனவே தான், இஸ்ரயேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று வந்தபோது,...