மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து ஆண்டவரைத் தொழுவேன்
திருப்பாடல் 116: 12 – 13, 15 – 16, 17 – 18 மீட்பின் கிண்ணம் என்றால் என்ன? மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுப்பது என்பதின் பொருள் என்ன? மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுப்பது என்பது இறைவனை வழிபடக்கூடிய செயலைக் குறிக்கிறது. இறைவனை வழிபடுகிறபோது, திருப்பாடல் ஆசிரியர் இந்த பாடலை பாடுகிறார். அவர் ஆண்டவரின் ஆலயத்தில் இருக்கிறார். இறைவனுக்கான காணிக்கைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறார். இறைவனுக்கான காணிக்கைப் படைக்கிறபோது, நீர்மப்படையலும், விலங்குகளின் இறைச்சியும், பலிப்பொருட்களுமாக இணைத்துப் படைக்கப்படுகிறது. இறைவனுக்கு படைத்துவிட்டு அதனை எடுக்கிறபோது, இறைவனின் முழுமையான ஆசீர்வாதம் கிடைக்கிறது என்பது நம்பிக்கை. கிண்ணம் என்பது, “நிறைவான“ ஆசீரைக் குறிக்கக்கூடிய சொல்லாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்களின் மீட்புக்கான ஆசீர்வாதம், அதாவது வாழ்வை அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு தேவையான ஆசீர்வாதத்தை அவர்கள் நிறைவாகப் பெற்றுக்கொள்கிறார்கள் என்பது, இந்த சடங்கு உணர்த்தக்கூடிய உண்மையாகும். இறைவனிடம் வரக்கூடிய நாம் அவருடைய அருள் வரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற...