Category: இன்றைய சிந்தனை

ஆண்டவர் அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார்

திருப்பாடல் 78: 18 – 19, 23 – 24, 25 – 26, 27 – 28 “இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பான்” என்று சொல்வது பழமொழி. ஒட்டகத்திற்கு இடம் கொடுத்த கதையைக் கேட்டிருப்போம். இன்றைய திருப்பாடலை வாசிக்கிறபோது, இதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருக்கிறார்கள். அவர்கள் கண்ணீரோடு கடவுளிடம் முறையிடுகிறார்கள். அவர்களது முறையீடு எப்படி அமைந்திருக்கும்? எப்படியாவது இந்த இன்னல்களிலிருந்து கடவுள் தங்களை மீட்க வேண்டும் என்பதாகத்தான் அவர்களது மன்றாட்டு அமைந்திருக்கும். கடவுள் அவர்களை விடுவிக்கிறார். விடுதலை என்பது எளிதானது அல்ல. ஒரே இரவில் பெறக்கூடியது அல்ல. அதற்கு பலவாறு நாம் உழைக்க வேண்டும். இஸ்ரயேல் மக்களை கடவுள் விடுவிக்கக்கூடிய நிகழ்வு எவ்வளவு சவாலானது என்பது ஒவ்வொருவருக்கும் நன்றாக தெரியும். இவ்வளவு செய்த கடவுள் அவர்களை பாலைநிலத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வருகிறார். இறைவன் செய்திருக்கிற இவ்வளவு காரியங்களுக்கே இஸ்ரயேல் மக்கள் நன்றி...

யாருக்கு முன்னுரிமை

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தமது குடும்பம், தமது சீடர்கள் அடங்கிய குழுமம் இவற்றில் யாருக்கு முன்னுரிமை தருகிறார் என்பது நமக்குப் பாடமாக அமைகிறது. இரண்டு தரவுகளை நாம் மனதில் கொள்ளவேண்டும். 1. இயேசு மக்கள் கூட்டத்தோடு பேசிக்கொண்டிருந்தபோது, அவரது தாயும், சகோதரர்களும் வந்து வெளியே நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களும் சரி, இயேசுவும் சரி குடும்பம் முன்னுரிமை பெறவேண்டும் என்று எண்ணவில்லை. எனவே, இயல்பாகவே அவர்கள் வெளியே காத்துக்கொண்டிருந்தார்கள். 2. இயேசுவும் இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுபவர்களே தமது குடும்பத்தினர் என்று சொல்லி, தம்மோடு இருந்து, தமது அருளுரையைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குகின்றார். இறையாட்சியின் படிமுறையில் குடும்பத்தைவிட, சீடத்துவமே முதன்மை பெறுகிறது என்பதை நாம் கற்றுக்கொள்வோம். நமது இரத்த உறவுகளைவிட, இறையாட்சியின் உறவுகளுக்கு இயேசுவைப்போல நாமும் முன்னுரிமை கொடுக்க முன்வருவோம். நமது குடும்பத்தினரையும் இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுபவர்களாக மாற்றி. அவர்களை இறைநம்பிக்கையின் அடிப்படையிலும் நமது நெருங்கிய உறவுகளாக மாற்றுவோம். மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, நாங்கள்...

ஆண்டவரே! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது

திருப்பாடல் 63: 1, 2 – 3, 4 – 5, 7 – 8 இந்த உலகத்தில் தாகம் எடுக்காதவர்கள் என யாருமே இருக்க முடியாது. இந்த உடலுக்கு தண்ணீர் தேவை. ஏனென்றால், நம்முடைய உடல் பஞ்சபூதங்களால் இணைந்த ஒன்று. இந்த உடல் தண்ணீராலும் நிரப்பப்பட்டிருக்கிறது. தண்ணீர் அருந்துகிறபோது, நம்முடைய தாகம் தணிகிறது. இந்த தாகம் என்பதை நாம் பல வழிகளில் அறிந்து கொள்ளலாம். அதிகார தாகம், செல்வம் சேர்க்கக்கூடிய தாகம், முதல் இடம் பெற வேண்டும் என்கிற தாகம் என்று, இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இப்போது நாம் பார்த்த தாகமெல்லாம், இந்த உலகம் சார்ந்த தாகம். இன்றைய திருப்பாடலில் இந்த உலகம் சார்ந்த தாகம் குறிப்பிடப்படவில்லை. மாறாக, ஆன்மா சார்ந்த தாகம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திருப்பாடல் ஆசிரியரின் தாகம், இந்த உலகம் சார்ந்த தாகமாக இருக்கவில்லை. அவருடைய தாகம் இறையனுபவத்தைப் பெறுவதற்கான தாகமாக இருக்கிறது. இது உயர பறக்க...

வீண் கவலை வேண்டாம்

வீணாக, தேவையில்லாமல் கவலைப்பட வேண்டாம் என்பது தான், இயேசு இன்றைய நற்செய்தி வாயிலாக நமக்குக் கற்றுத்தரும் பாடம். இந்த உலகத்தில் நாம் பலவற்றை நினைத்து கவலைப்படுகிறோம். நமது பிள்ளைகளை நினைத்து, அவர்களது கல்வி வளர்ச்சியை எண்ணிப்பார்த்து, அவர்களது திருமண காரியங்களை நினைத்து, அவர்கள் நல்ல வேலையில் அமர வேண்டும் என்று, இதுபோன்று பல காரியங்களை நினைத்து நாம் கவலைப்படுகிறோம். ஆனால், இவையனைத்துமே தேவையில்லாத கவலைகள். எதற்கு நாம் கவலைப்பட வேண்டுமோ, அவற்றை நினைத்து நாம் கவலைப்படுவது கிடையாது. நமது ஆன்மீக காரியங்களில் நமக்கு உள்ள ஈடுபாடு சிறப்பாக இருக்கிறதா? நமது ஆன்மா சார்ந்த வளர்ச்சி காரியங்களில் நான் முழுமையாக பங்கெடுக்கிறேனா? பிள்ளைகள் கடவுளுக்கும், மனச்சான்றுக்கு பயந்து நடக்கிறார்களா? பெரியவர்களை மதிக்கிறார்களா? அவர்கள் கடவுள் சார்ந்த காரியங்களில் ஈடுபாட்டோடு பங்கெடுக்கிறார்களா? நேரத்தை சரியாகப் பயன்படுத்துகிறார்களா? இதைப்பற்றித்தான் நாம் அதிகமாக சிந்திக்க வேண்டும். இதைப்பற்றித்தான் நாம் அதிகமாக எண்ண வேண்டும். ஆனால், நாம் இதுபோன்று...

இயேசுவின் உண்மை

தேர்ந்து கொள்ளப்பட்ட ஊழியரைப்பார்த்து, இறைவாக்கினர் எசாயா உரைக்கிறபோது, அவர் ”கூக்குரலிட மாட்டார்” என்று சொல்கிறார். இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிற வார்த்தை, நாய் குரைப்பதற்கும், அண்டங்காக்கை கரைவதற்கும் பயன்படுத்தப்படுகிற சொல். அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற ஊழியரின் குரல் இப்படி இருக்காது. மாறாக, அவர் அன்பினாலும், அமைதியினாலும், அதேவேளையில் உறுதியாகவும் கடவுளின் வார்த்தையைப் பறைசாற்றுவார் என்பதுதான் உண்மைச்செய்தி. இயேசு இந்த உலகத்தில் இதைத்தான் நிலைநாட்டினார். அவர் மக்களுக்குப் போதித்தபோதும் சரி, அல்லது பரிசேயர்கள், சதுசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களோடு விவாதத்தில் ஈடுபட்டபோதும் சரி, தேவையில்லாமல் கூச்சலிடவில்லை. அவருடைய கருத்தை வெகு உறுதியாக வலியுறுத்தினார். அதேபோல அடுத்தவர்களின் கருத்துக்களில் இருக்கக்கூடிய உண்மையையும் ஆதரித்தார். அதனையும் ஏற்றுக்கொண்டார். மற்றவர்கள் போல, வெறுமனே சுய இலாபத்திற்காக கூச்சல், குழப்பங்களை போட்டு, உண்மையை திரித்து, தங்களுக்கு ஏற்ற வகையில் அவர் சொல்ல விரும்பவில்லை. இன்றைக்கு உண்மையை பெரும்பான்மை என்கிற மாயத்தோற்றத்தை உருவாக்கி, தங்களுக்கு ஏற்றவகையில் மாற்றிக்கொள்கிற கூட்டங்கள் நம் மத்தியில் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. அதனுடைய...