Category: இன்றைய சிந்தனை

தம் சிறகுகளால் நம்மை அரவணைப்பார்

திருப்பாடல் 91: 1 – 2, 3 – 4, 14 – 15 இறைவன் மீது நம்பிக்கை வைக்கிறவர்களுக்கு இறைவன் எப்படியெல்லாம் பாதுகாப்பாக இருப்பார் என்பதை, இந்த திருப்பாடல் நமக்கு எடுத்துக் கூறுகிறது. இங்கே இறைவனே பேசுவதாக, திருப்பாடல் ஆசிரியர் எழுதியிருக்கிறார். இறைவன் என்ன பேசுகிறார்? தன்னை அன்பு செய்கிறவர்களுக்கு தான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்பதுதான், இறைவனுடைய கூற்றாக இருக்கிறது. இறைவன் தன்னை முழுமையாக நம்புகிறவர்களுக்கும், தன்னை நோக்கி மன்றாடுகிறவர்களுக்கும் எப்படியெல்லாம் உதவி செய்யப்போகிறார் என்பதை, இந்த திருப்பாடல் நமக்கு விளக்கமாகக் கூறுகிறது. அதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்கு அறிவிக்கிறது. இயேசு தொழுகைக்கூடத்தலைவரின் மகளையும், பல ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் அவதியுற்ற பெண்ணையும், அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையின் மிகுதியினால் காப்பாற்றினார் என்பது, இங்கே நமக்கு தெளிவாக விளக்கப்படுகிறது. ஆக, கடவுளை நம்பினோர் எப்போதுமே கைவிடப்பட மாட்டார்கள் என்பது, இங்கே தெளிவாகிறது. நம்முடைய வாழ்வில் நாம் எப்போதும் கடவுளை தேடுகிறவர்களாக...

ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகள் !

எழுபத்திரண்டு சீடர்களை ஆண்டவர் இயேசு இருவர் இருவராக நற்செய்தி அறிவிக்க அனுப்புகின்ற நிகழ்ச்சியை இன்று வாசிக்கிறோம் (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-12, 17-20). அவர்களுக்கு அறிவுரை பகர்கின்ற பொழுது இயேசு கூறிய வார்த்தைகள்: புறப்பட்டுப் போங்கள். ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். இவை எச்சரிக்கை விடுக்கின்ற சொற்கள். இயேசுவின் சீடர்கள் ஆட்டுக்குட்டிகள் போன்றும், இந்த உலகின் மக்கள் ஓநாய்கள் போன்றும் இங்கே உருவகப்படுத்தப்பட்டுள்ளனர். உலகம் பல்வேறுவிதமான தீமைகளை, தந்திரங்களை, இருளின் படைக்கலங்களாகக் கொண்டிருக்கிறது. இயேசுவின் காலத்தில் இருந்தது போன்றுதான் இன்றைய உலகமும், இருளின் மக்களும் இருக்கின்றனர். ஆட்டுக்குட்டிகளைச் சுற்றி வளைத்துக் காயப்படுத்தும் ஓநாய்கள் போன்று இன்றைய ஊடகங்கள், வணிக மையங்கள், அநீத அமைப்புகள், ஏன் அரசுகளும்கூட அமைந்திருக்கின்றன. இவர்களின் மத்தியில்தான் சீடர்கள் நற்செய்தி அறிவிப்பவர்களாக, அமைதியை அருள்பவர்களாக, நோய்களைக் குணமாக்குபவர்களாகச் செயல்படவேண்டும். எனவே, விழிப்பாய் இருப்போம். இறையருள் வேண்டுவோம். மன்றாடுவோம்: அன்பே உருவான ஆண்டவரே, எங்களை...

ஆண்டவரைப் புகழுங்கள். ஏனெனில் அவர் நல்லவர்

திருப்பாடல் 135: 1 – 2, 3 – 4, 5 – 6 இன்றைக்கு மேடைப்பேச்சுக்களிலும், அரசியல் பேச்சுக்களிலும் “புகழ்ச்சி” என்கிற வார்த்தை மிதமிஞ்சி இருப்பதை நாம் கேட்டிருக்கலாம். புகழ்ச்சிக்கு மயங்காதவர் யாரும் இல்லை என்கிற அளவிற்கு, இன்றைக்கு தங்களது தலைவர்களை, அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களை பேச்சினால் மயக்க விரும்புகிறவர்கள் ஏராளமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இன்றைக்கு மற்றவர்களைப் பற்றி புகழ்ந்து பேசுகிறபோது, 90 விழுக்காட்டிற்கு மேல், பொய்மைத்தன்மை தான் மிகுந்து காணப்படுகிறது. ஆனால், கடவுளைப் புகழ்கிறபோது, என்ன காரணத்திற்காக புகழ வேண்டும் என்பதை, இந்த திருப்பாடல் நமக்கு விளக்கிக்கூறுகிறது. மற்றவர்களை வெறுமனே மகிழ்ச்சிப்படுத்துவதற்காக புகழ்வதுபோல, நாம் கடவுளைப் புகழக்கூடாது. மாறாக, கடவுளிடத்தில் இருக்கிற பண்புகளின் அடிப்படையில் நமது புகழ்ச்சி உண்மையானதாக அமைய வேண்டும். கடவுளை ஏன் புகழ வேண்டும்? கடவுள் நல்லவராக இருக்கிறார். அதாவது நன்மைகளைச் செய்கிறவராக இருக்கிறார். உள்ளத்தில் வெறுப்புணர்வும், வஞ்சகமும் இல்லாமல், தன்னைத் தேடி வருகிற பக்தர்கள்...

மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, கடவுளின் சொல்லாலும் உயிர் வாழ்வர்

திருப்பாடல் 119: 2, 10, 20, 30, 40, 131 வாழ்க்கை என்பது வெறும் இயக்கம் மட்டுமல்ல. அது தன்னையே முழுமையாக ஈடுபடுத்தி, மற்றவர்களை இயக்க வைப்பது. இந்த உலகத்தில் இருக்கிற எல்லா மனிதர்களும் தங்களது வாழ்வை வாழ்ந்திருக்கிறார்களா? என்றால், அது நிச்சயம் கேள்விக்குறிதான். எல்லாரும் வாழவில்லை. ஆனால், இந்த உலத்தில், குறிப்பிட்ட காலம் “இருந்திருக்கிறார்கள்“. வாழ்க்கை என்பது அதனையும் கடந்த ஓர் அா்ப்பணம். வாழ்க்கையை உண்மையிலேயே வாழ்ந்தவர்களைத்தான் இந்த உலகம் வரலாற்றில் குறித்து வைத்திருக்கிறது. மற்றவர்களை அது நினைவுகூர்வதில்லை. இந்த உலகத்தில் வெறுமனே இருப்பதற்கு, உணவு போதுமானது. ஆனால், இந்த வாழ்க்கையை வாழ வேண்டுமென்றால், நமக்கு கடவுளின் வார்த்தை அவசியமானதாக இருக்கிறது. அது நமது வாழ்வை நாம் வாழ்வதற்கு உந்துசக்தியாக இருந்து, நம்மை இயக்கிக் கொண்டே இருக்கிறது. நாம் சோர்வடைகிற வேளையில், நமக்கு உற்சாகத்தைத் தருகிறது. நம்மையே முழுவதுமாக மற்றவர்களுக்கு அர்ப்பணித்து உழைக்கிறபோது, நமக்கு அது உந்துசக்தியாக இருந்து, நம்மை...

ஆண்டவரே! எனக்கு இரங்கியருளும்

திருப்பாடல் 26: 2 – 3, 9 – 10, 11 – 12 தவறு செய்த ஒரு மனிதன், தான் செய்த தவறை நினைத்து வருந்தி, இனிமேல் இப்படிப்பட்ட தவறை செய்ய மாட்டேன் என்றும், தன்னுடைய உள்ளத்தைப் பார்த்தால் தன்னுடை உண்மையான மனமாற்றம் புரியும் என்பதையும், இந்த திருப்பாடல் நமக்கு விளக்குவதாக அமைந்திருக்கிறது. நிச்சயமாக, தாவீது ஒரு சிறந்த அரசர். மக்களுக்காகவே வாழ்ந்த அரசர். கடவுள் பயத்திலும், பக்தியிலும் சிறந்து விளங்கிய அரசர். ஆனால், அவருடைய போதாத நேரம் தவறு செய்ய நேரிடுகிறது. அதன்பொருட்டு அவர் மிகவும் வருத்தப்படுகிறார். அந்த வருத்தத்தை இந்த பாடலில் பதிவு செய்கிறார். கடவுள் நீதிமானாக இருக்கிறார் என்பது இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. கடவுள் நிச்சயமாக தவறு செய்தவர்களை தண்டிப்பார் என்பது இங்கே உறுதிப்படுத்தப்படுகிறது. அதேவேளையில், கடவுளின் தண்டனை, தாங்க முடியாததாக இருக்கிறது என்கிற பய உணர்வும் இங்கே வெளிப்படுத்தப்படுகிறது. ஒரு மனிதனை அவனுடைய செயல்களால் மட்டும்...