வாழ்வு வழிபாடாக மாறட்டும்
லேவியர் புத்தகத்திலே, 11வது அதிகாரத்தில் எவையெவை சாப்பிடக்கூடியவை, எவையெவை சாப்பிடக்கூடாதவை என ஒழுங்குகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இறந்த மற்றும் சில விலங்குகளின் இறைச்சியை உண்ணக்கூடாது என்பதற்கு காரணம் இல்லாமலில்லை. பல காரணங்களை நாம் சொல்லலாம். 1. யூதர்கள் தீய ஆவிகளை நம்பினர். இறந்துபோன உடல்மீது தீய ஆவிகளின் தாக்கம் இருக்கும் என்ற காரணத்தால், தவிர்த்தனர். 2. ஒரு சில விலங்குகள் வேறு மதத்தில் உள்ளவர்களுக்கு புனிதமானவையாக இருந்தன. உதாரணமாக, பூனையும், முதலையும் எகிப்தியர்களுக்கு புனிதமானவை. வேறு மதத்தினர் வழிபடுவது, நிச்சயமாக யூதர்களுக்கு தீட்டுப்பட்டதாகத்தான் இருந்திருக்கும்.3. சில விலங்குகளின் இறைச்சி, அவர்கள் வாழ்கின்ற சூழ்நிலையில் அவர்களுக்கு திங்கிழைக்கக்கூடியதாக இருந்தது. பன்றியின் இறைச்சியை நன்றாக வேகவைத்து சாப்பிடாவிட்டால், அது பல வழிகளில் மனிதர்களுக்கு கேடு விளைவிக்கக்கூடியது. எனவே, அதுபோன்று கேடுவிளைவிக்கக்கூடிய இறைச்சியை தவிர்த்தனர். 4. சில மூடநம்பிக்கைகளின் காரணமாகவும், சில விலங்குகளின் இறைச்சியை, யூதர்கள் தவிர்த்து வந்தனர். இந்தப்பிண்ணனியில் தான் இயேசுவின் போதனையை நாம் பொருத்திப்பார்க்க...