திருமண வாழ்வில் அதிக மகசூல் எப்படி?
மத்தேயு 19:3-12 இறையேசுவில் இனியவா்களே! இன்றைய திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். திருமணம் என்பது மனிதர்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்ச்சி ஆகும். திருமணம் என்பது காதலிப்பது போன்று இல்லை. இதில் விட்டுக் கொடுப்பது, நிதானம், ஒத்தச் செயல் செய்வது, விதிமுறைப்படி நடப்பது, குழந்தைகள் வளர்ப்பு போன்றவை அடங்கும். திருமணம் என்பது எதிர்-எதிர் பாலர் சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்கும் தனி உலகம். திருமணம் என்பது ‘ஆயிரம் காலத்துப் பயிர்’ என்று முன்னோர்கள் கூறியதற்கு உகந்த பொருள் உள்ளது. உதாரணமாக நெல், கம்பு, கரும்பு உள்ளிட்ட பயிர்களை எடுத்துக் கொண்டால் அவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மகசூல் கொடுத்துவிடும். அதைப்போல திருமண தம்பதியனர் எதிர் வரும் பிரச்சினைகள், சவால்கள் அனைத்தையும் சமாளித்து பயிர்களை போன்று குறிப்பிட்ட காலத்திற்குள்...