Category: இன்றைய சிந்தனை

நடந்ததை சொல்லு…

மத்தேயு 9:27-31 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்பிய அனைவருக்கும் அதிசயம் நடக்கிறது. அதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கிறது. பார்வையற்ற இருவர் நம்பியதால் அவர்களுக்கு ஆச்சரியம் நடக்கிறது. கண்கள் மிக அற்புதமாய் திறக்கின்றன. அதிசயம் நடந்த பிறகு அவர்கள் செய்தது மிகவும் கவனிக்கத்தக்கது. ஆண்டவர் இயேசு நடந்ததை வெளியே சென்று அறிவிக்க வேண்டாம் என்று சொன்னாலும் அவர்கள் அதையெல்லாம் தாண்டி நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியை பரப்புகிறார்கள். அன்புமிக்கவர்களே! நாமும் பார்வையற்ற இருவரை பின்பற்ற அழைக்கப்படுகிறோம். நாம் ஆண்டவரிடம் இருந்து அதிசயம், புதுமைகளைப் பெற்ற பிறகு அவர்களைப் போன்று ஆண்டவரின் வல்லமையை அறிவிக்க வேண்டும். எப்படி அறிவிக்கலாம்? இரண்டு முறைகளில் அதை...

தூய சவேரியார் திருவிழா

வந்தார்! வென்றார்! மத்தேயு 8:5-11 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் தூய சவேரியார் திருவிழா திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். உலகம் போற்றும் நமது இந்தியத் தாய் திருநாட்டில், கிறிஸ்தவ மதம் வளரவும் தழைக்கவும் வித்திட்ட பல மேலை நாட்டினர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர், புனிதர் பிரான்சிஸ் சவேரியார். இவர் 1506ஆம் ஆண்டு, ஏப்ரல் 7ஆம் நாள், ஸ்பெயின் நாட்டிலுள்ள புகழ்மிக்க சவேரியார் அரண்மனையில் பிறந்தார். யுவான் தெயாசு- டோனா மரியா என்ற தம்பதியின் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவரது தந்தை யுவான் தெயாசு, அந்நாட்டின் அரசவையில் நிதியமைச்சராகப் பணியாற்றி வந்தார்; சட்டவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தன்னுடைய ஒன்பதாம் வயதில் தந்தையை இழந்த இவர் தாயின் பராமரிப்பிலேயே அதே அரண்மனையில்...

இரண்டு வார்த்தைகளால் உங்கள் நோயை குணப்படுத்தலாம்!

மத்தேயு 15:29-37 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். உடல்நோய், மனநோய் இந்த இரண்டினாலும் பாதிக்கப்பட்டவர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு விடுதலை உண்டா? என்று நாம் யோசித்துக் கொண்டிருக்கிறோம். உடல்நோய் மற்றும் மனநோயை நாமே குணப்படுத்த முடியும். திருவிவிலியத்திலுள்ள இரண்டு வார்த்தைளை நாம் பயன்படுத்தினால் நம் உள்மனக் காயங்கள், வெளிமனக் காயங்கள் மற்றும் அனைத்து நோய்களும் குணமாகுகின்றன. அந்த இரண்டு வார்த்தைகள் இதோ: 1. தாவீதின் மகனே இரங்கும் ஏற்கெனவே நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆண்டவர் இயேசுவை நோக்கி ”தாவீதின் மகனே எனக்கு இரங்கும்” என மன்றாடும் போது அவர் அற்புத சுகம் அளிக்கிறார் இந்த வார்த்தை கடவுளின் பேரிரக்கத்தை பெற்றுத் தருகிறது கொடிய நோய்களுக்கு விடுதலை அளிக்கிறது. 2. உம்மால்...

மறக்காதீ்ங்க! சொல்ல மறக்காதீங்க… ப்ளீஸ்!

லூக்கா 10:21-24 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். ஒருசில ஜெபங்களை நாம் உணர்ந்து சொல்லும்போது அது நம் உடல், மனம், ஆன்மாவிற்கான முழுபலனையும் தருகிறது. அந்த ஜெபத்தை சொல்லும்போது நம் உடலில் புதுசெல்கள் பிறக்கின்றன. அப்படிப்பட்ட மிக அருமையான ஜெபத்தை அறிமுகப்படுத்துகிறது இன்றைய நற்செய்தி வாசகம். அந்த ஜெபத்தை இரண்டு நேரங்களில் சொல்லும்போது அது அதிக பலன்களை பெற்றுத்தருகிறது. நம் திறமைகளை வெளிப்படுத்திய பிறகு நம்முடைய திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பான காரியங்களைச் செய்த பிறகு நமக்கு ஒரு சந்தோசம் கிடைக்கும். அந்த வேளையில் நாம் நம்மைக் குறித்து பெருமிதம் கொள்ளாமல் இறைவனை நினைக்க வேண்டும். அதைத்தான் இயேசு நற்செய்தி வாசகத்தில் செய்கிறார். நாமும் அவரைப்போல சிறப்பான செயல்களை...

அந்திரேயா – ஆண்டவர் பக்கமே!

திருத்தூதரான தூய அந்திரேயா பெருவிழா மத்தேயு 4:18-22 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருத்தூதரான தூய அந்திரேயா பெருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அந்திரேயா பெத்சாய்தாவைக் சார்ந்தவர்; பேதுருவின் சகோதரர். மீன்பிடித் தொழிலை செய்துகொண்டிருந்தவர். விவிலிய அறிஞர்களின் கூற்றுப்படி அந்திரேயா தொடக்கத்தில் திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்தவர். ஒருநாள் ஆண்டவர் இயேசு வழியோரமாக சென்றுகொண்டிருக்கும்போது திருமுழுக்கு யோவான் தன்னுடைய சீடர்களிடம் (அந்திரேயா அங்கு இருந்தார்), “இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி” என்று இயேசுவை சுட்டிக்காட்டினார். உடனே அந்திரேயா இயேசுவிடம், “ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்க, அவர் “வந்து பாரும்” என்று சொன்னார். அந்திரேயா ஆண்டவர் இயேசுவோடு தங்கி இறையனுபவம் பெற்றார். அந்த அனுபவத்தை தன்னுடைய சகோதரரான பேதுருவிடம் எடுத்துச் சொல்லி...