தந்தையே! உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்
திருப்பாடல் 31: 1, 5, 11 – 12, 14 – 15, 16, 24 ”தந்தையே! உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்” ”தந்தை” என்கிற வார்த்தை ஆழமான அன்பை வெளிப்படுத்தக்கூடிய வார்த்தை. பொதுவாக, நாம் எல்லாருமே ”அம்மா” என்று அழைப்பதற்கு அதிக ஆவல் கொண்டிருப்போம். ஏனென்றால், தாயன்பு ஒரு பிள்ளையை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. நாம் தவறு செய்தாலும், நமக்காகப் பரிந்து பேசுகிறவள் தாயாகத்தான் இருப்பாள். அது குழந்தையை மேலும் மேலும் தவறு செய்ய தூண்டுவதல்ல, மாறாக, தன்னுடைய குழந்தையின் மீது அவள் வைத்திருக்கிற மாசுமருவற்ற அன்பை வெளிப்படுத்துவதாக அமைகிறது. இந்த உலகத்தில் இருக்கிற எல்லாருமே, நிச்சயம் தாயிடத்தில் அதிக உரிமையோடு இருப்பதைப் பார்க்கலாம். அது கோபமாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி. தாயிடத்தில் உரிமையோடு வெளிப்படுத்தலாம். ஆனால், ஒரு குடும்பத்தில் தந்தையுடனான நெருக்கம் சற்று இடைவெளி உள்ளது போல தோன்றும். ஒரு குடும்பத்தில்,கண்டிப்பு என்றால் அது...