இன்றைய சீடர்களான நாம் எப்படி?
மாற்கு 9 : 30 – 37 இன்றைய சீடர்களான நாம் எப்படி? தம் இறப்பின் வழியே நமக்கு வாழ்வளிக்க வந்த இறைமகன் இரண்டாம் முறையாகத் தன் பாடுகள்- மரணம்- உயிர்ப்புப்பற்றி பேசுகிறார். அவமான சின்னத்தை தூக்கிச் சென்று அதில் அறையப்பட்டு இறக்க அவர் மனம் வருந்தவில்லை. அதை ஆவலோடு எதிர்நோக்கிக் கொண்டே தன்னைத் தயார் படுத்த ஆரம்பித்து விட்டார். முதல்முறையாக தம் இறப்பினை அறிவிக்கும் பொழுது மூப்பர்கள், தலைமைக்குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் புறக்கணிக்கப்படுவார் என்ற குறிப்பு உள்ளது. இங்கோ, ‘மனுமகன் மனிதர்களிடம் கையளிக்கப்படுவார்’ என்ற கூடுதலான அறிவிப்பை இன்றைய நற்செய்தியில் பார்க்க முடிகிறது. யூதாசின் துரோகச் செயலை மேலோட்டமாக இங்கே ஆண்டவர் குறிப்பிடுகிறார். மேலும் இறைவனின் திட்டத்தில் மனித மீட்புக்காகக் கடவுளாலும் அவர் கையளிக்கப்படுவார் என்ற உண்மையும் இங்கு தொனிக்கிறது. “நம் குற்றங்களுக்காக சாகுமாறு கடவுள் இயேசுவை ஒப்புவித்தார், நம்மை தமக்கு ஏற்புடையவர்களாக்குமாறு அவரை உயிர்த்தெழச் செய்தார்” (உரோ...