Category: தேவ செய்தி

ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்

திருப்பாடல் 1: 1 – 2, 3, 4 & 6 மகிழ்ச்சி என்கிற ஒற்றைச் சொல்லுக்காகத்தான் இந்த உலகத்தில் இருக்கிற அனைவரும் ஏங்கிக்கொண்டிருக்கிறோம். நாம் செய்கிற வேலை, நம்முடைய கடின உழைப்பு, நாம் ஈட்டுகிற செல்வம் அனைத்துமே இந்த மகிழ்ச்சிகாக மட்டும் தான். இந்த மகிழ்ச்சியான வாழ்க்கை நமக்கு அமைய வேண்டுமென்றால், நமது வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பதில் தான் இன்றைய திருப்பாடல். எப்படி வாழ்ந்தால், நாம் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதற்கான அழைப்பாக இந்த திருப்பாடல் அமைகிறது. மகிழ்ச்சியாக வாழ விரும்பும் ஒரு மனிதர் ஆண்டவரின் திருச்சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து வாழ வேண்டும். இது தான் மகிழ்ச்சியான வாழ்விற்கான அடிப்படை. திருச்சட்டம் என்பது கடவுள் நமக்கு வழங்கிய சட்டம். நாம் எப்படி வாழ வேண்டும் என்று நமக்கு ஒழுங்குமுறைகளை விளக்கக்கூடிய வழிகாட்டி. அந்த திருச்சட்டத்தை மேலோட்டமாக அல்லாமல், அதனை தியானித்து, அந்த திருச்சட்டத்தின் உட்பொருளை...

ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில்…

திருப்பாடல் 124: 1ஆ – 3, 4 – 6, 7 – 8 நம்முடைய வாழ்க்கையில் எப்போதும் நம்மை விட உயர்ந்த நிலையில் இருக்கிறவர்களை நம்மோடு நாம் ஒப்பீடு செய்து கொண்டு வாழ்ந்து வருகிறோம். இந்த திருப்பாடல் சற்று வித்தியாசமாக சிந்திப்பதற்கு அழைப்பதற்கான பாடலாக இருக்கிறது. ஆண்டவர் இஸ்ரயேல் மக்கள் சார்பாக இருந்ததனால், அவர்களால் வாழ்க்கையில் உயர முடிந்தது. ஒருவேளை ஆண்டவர் இஸ்ரயேல் மக்கள் சார்பாக இருந்திருக்கவில்லை என்றால், என்ன நடந்திருக்கும் என்பதைத்தான் திருப்பாடல் ஆசிரியர் நமக்கு சிந்தனையாக தருகிறார். திருப்பாடலில் வருகிற சிந்தனையை நம்முடைய வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். இன்றைக்கு நாம் இருக்கிற நிலையோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். இன்றைக்கு நாம் இருக்கிற நிலையில் இல்லாமல், நம்மை விட கீழான நிலையில் உள்ளவர்கள் போல, நம்முடைய வாழ்வு அமைந்திருந்தால் நாம் எப்படி இருந்திருப்போம்? ஆக, கடவுள் நம்மை பல மனிதர்களை விட சிறப்பான அன்பாலும், அருளாலும் நிரப்பியிருக்கிறார். நம்மை விட...

இதோ வருகின்றேன்

திருப்பாடல் 40: 6 – 7அ, 7ஆ – 8, 9, 16 ”இதோ வருகின்றேன்” கடவுளின் அழைப்பைக் கேட்டு, இதோ வருகின்றேன் என்று திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார். கடவுள் விரும்புவது எது? கடவுளின் உண்மையான அழைப்பு எது? கடவுளின் திருவுளம் எது? இது போன்ற கேள்விகளை நாம் கேட்டுப்பார்த்தால், “வழிபாடு“ என்று நாம் செய்து கொண்டிருக்கிற பலவற்றை நிறுத்த வேண்டிவரும். மாதாவுக்கு, புனிதர்களுக்கும் தங்க நகைகள் போட்டு அழகுபார்க்கிறோம். இதை மாதாவோ, புனிதர்களோ விரும்புவார்களா? அவர்கள் இந்த உலகத்தில் வாழ்ந்தபோது, ஏழ்மையையும், ஒறுத்தலையும் நேசித்தவர்கள். ஆனால், இன்றைக்கு நம்முடைய வழிபாடு? இன்றைக்கு நாம் செய்கிற பல தவறுகளை விசுவாசத்தின் பெயரால் சமரசம் செய்து கொண்டிருக்கிறோம். அந்த தவறுகளை விசுவாசத்தின் பெயரால் நியாயப்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஆலயம் கட்டுவதற்கும், ஆலயப்பொருட்களை வாங்குவதற்கும் ஆயிரமாயிரம் தாராளமாக நன்கொடை வழங்கும் நம் மக்கள், ஏழைகளின் துயர் துடைக்க என்று அவர்களை அணுகினால், உதவி செய்ய மனமில்லாத நிலையைப்...

தூய லூக்கா நற்செய்தியாளர் திருவிழா

மகிழ்ச்சியும் இரக்கமுமே நற்செய்தி லூக்கா 10:1-9 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் நற்செய்தியாளர் தூய லூக்கா திருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். சிரியாவின் அந்தியோக்கு நகரில் பிறந்த லூக்கா, ஒரு மருத்துவர். ஓவியரும் கூட என்று வரலாறு கூறுகிறது. புறவினத்தாராகிய லூக்கா, அப்போஸ்தலர் பவுலுடன் இணைந்து உழைத்தார். “அன்புமிக்க மருத்துவர் லூக்கா” என்று பவுல் இவரைக் குறிப்பிடுகிறார். நான்கு நற்செய்தியாளர்களும் இயேசுவின் பணிவாழ்வை இறையரசுப் போதனையை மிகவும் சிறப்பான விதத்தில் வடித்துத் தந்துள்ளார்கள். அவற்றுள் தூய லூக்காவின் நற்செய்தியானது மகிழ்வின் நற்செய்தியாக இரக்கத்தின் நற்செய்தியாக விளங்குவதை பார்க்கின்றோம். தூய லூக்கா இயேசுவைக் கனிவுள்ளவராக இரக்கமுள்ளவராக எல்லோருக்கும் வாழ்வளிப்பவராகப் படம் பிடித்துக் காட்டுகிறார். கிரேக்க குலத்தைச் சார்ந்தவரான தூய லூக்கா சிரியாவில் உள்ள...

இறைவனின் மீட்புத்திட்டம்

எசாயா 53: 10 – 11 மீட்பரைப் பற்றிய செய்தி, இன்றைய வாசகத்தில் நமக்கு அருளப்படுகிறது. இறைவன் இஸ்ரயேல் மக்களை மீட்பதற்காக, விரைவில் ஒரு மீட்பரை அனுப்புவதாக இறைவாக்கினர்கள் வழியாக மக்களுக்கு அறிவிக்கிறார். அந்த மீட்பர் எப்படிப்பட்டவராக இருப்பார்? எப்படி மக்களின் பாவங்களைப் போக்குவார் என்பது, வெளிப்படைச்செய்தியாக, இறைவாக்கினர் எசாயாவால் அறிவிக்கப்படுகிறது. பொதுவாக, கடவுள் இந்த உலகத்திலிருக்கிற பாவங்களை அழிக்க வேண்டுமென்றால், அவதாரம் எடுத்து, தன்னுடைய வல்லமையால் அழித்தொழிப்பார். இதுதான் பல்வேறு மதங்களில் காணப்படுகிற செய்தி. ஆனால், யாவே இறைவன், புதுமையான செய்தியை இறைவாக்கினர் வழியாக சொல்கிறார். அந்த செய்தி என்ன? இஸ்ரயேல் மக்களை மீட்பதற்காக அனுப்பப்படுகிறவர், தன்னுடைய துன்பத்தின் வழியாக, மக்களை விடுவிக்க இருக்கிறார் என்பதாகும். இது கேட்பதற்கு சற்று வித்தியாசமானதாக இருக்கிறது. ஒருவேளை நகைப்பாகக்கூட இருக்கலாம். ஆனால், இதுதான் கடவுள் தேர்ந்து கொண்ட வழியாக இருக்கிறது. மக்களின் பாவங்களைப் போக்குவதற்காக, தன்னையே பழியாகவும், வரவிருக்கிற மீட்பர் தரவிருக்கிறார். அவருடைய...