Category: தேவ செய்தி

இயேசுவின் அருகாமை

இயேசுவின் காலடிகளைத்துடைத்த அந்த பெண், யூத சமுதாயத்தினால் பாவி என்று முத்திரை குத்தப்பட்ட பெண். அந்த சமுதாயத்தினால் வெறுத்து ஒதுக்கப்பட்ட பெண். அந்த சமுதாயத்தினால் தேவைக்கேற்ப பயன்படுத்தப்பட்ட பெண். அவளைப் பெண்ணாக, மனிதராகப் பார்ப்பதைவிட, அந்த சமுதாயம் வெறும் பொருளாகத்தான் இதுநாள் வரை பார்த்துக்கொண்டிருந்தது. அவளை ஒரு பொருட்டாகவே மதித்தது கிடையாது. ஆனால், இன்றைய நற்செய்தியில் அவளது செய்கை, நடவடிக்கைகள் மற்றவர்களால் பேசப்படுகின்ற ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், அவள் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. அந்த பெண் தனது கூந்தலை அவிழ்த்து, இயேசுவின் பாதத்தைத் துடைத்ததாக நாம் வாசிக்கிறோம். பொதுவாக யூதப்பெண்கள் மற்றவர்கள் முன்னிலையில், பொது இடத்தில் தங்களின் கூந்தலை அவிழ்ப்பது இல்லை. திருமணநாளில் முடிந்துவைக்கப்படுகிற கூந்தலை, ஒருபோதும் அவர்கள் வெளியிடத்தில் அவிழ்ப்பது கிடையாது. ஆனால், நற்செய்தியில் வருகிற பெண், தனது கூந்தலை அவிழ்த்து, இயேசுவின் பாதத்தைத் துடைக்கிறாள். அவளுக்கும் யூதப்பாரம்பரியம் தெரியும். ஆனால், இயேசு அருகில் இருக்கிறபோது, அவரிடத்திலே அவள் ஆறுதல் பெற்றபொழுது,...

ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை

திருப்பாடல் 111: 1 – 2, 3 – 4, 5 – 6 ஆண்டவரின் செயல்களை உயர்ந்ததாக இந்த திருப்பாடல் நமக்கு எடுத்தியம்புகிறது. ஆண்டவரின் செயல்கள் எவை? ஆண்டவர் எளியவர்கள் நீதி பெற உழைக்கிறார். தன்னை நம்பியவர்களை கைவிடாது காக்கிறார். ஏழைகள் பக்கமாக நிற்கிறார். அநீதியையும், அநீதி செய்கிறவர்களையும் வெறுக்கிறார். கடவுள் மீது முழுமையான நம்பிக்கை வைக்கிறவர்களையும், கடவுளையே தங்களின் செல்வமாக ஏற்றிருக்கிறவர்களையும் அவர் ஒருபோதும் கைவிடாது பாதுகாக்கிறார். கடவுளின் செயல்கள் எப்போதும உயர்ந்தவையாகவே இருக்கிறது. பல வேளைகளில் கடவுளின் செயல்களில் இருக்கிற நீதியை, உண்மையை உணர முடியாதவர்களாக இருக்கிறோம். நம்முடைய பார்வையில் கடவுளின் செயல்கள் சில நேரங்களில் புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது. அதனால் கடவுள் மீது கோபப்படுகிறோம். ஆனால், காலம் நாம் எவ்வளவுக்கு கடவுளைப் பற்றிய தவறான பார்வையைக் கொண்டிருக்கிறோம் என்பதை விளக்குகிறது. இஸ்ரயேல் மக்கள் கடவுளை வழிநடத்தியபோதெல்லாம், கண்டித்து திருத்தியபோதெல்லாம், கடவுளை வேண்டா வெறுப்பாகவே பார்த்தார்கள்....

திருச்சிலுவையின் மகிமை விழா

உற்றுப்பாரு… உருமாறு… யோவான் 3:13-17 இறையேசுவில் இனியவா்களே! திருச்சிலுவை மகிமை பெருவிழா திருப்பிலிக்கு நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இன்று திருச்சிலுவையின் மகிமைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். எருசலேமில் கிபி 335ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் நாள் ஆண்டவரின் உயிர்ப்புக்கென்று ஒரு ஆலயம் எழுப்பப்பட்டது. 13ஆம் நாள் உயிர்ப்பை நினைவுகூர்ந்த மக்கள் 14ஆம் தேதி ஆண்டவரின் சிலுவைச்சாவை நினைவுகூர்ந்து சிலுவையை அடையாளமாக வைத்து வழிபட்டனர். 5ஆம் நூற்றாண்டிலிருந்து திருச்சிலுவை விழா செப்டம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. சிலுவை எப்படி திருச்சிலுவையாக மாறியது? சிலுவைச் சாவு என்றால் அது உரோமையர்கள் கொண்டு வந்தது என்பது பலரின் கருத்து. ஆனால் உலகின் பல்வேறு அரசியல் அமைப்பு முறைகளை ஆராய்ந்தால் இந்தியர்கள், கிரேக்கர்கள், எபிரேயர்கள், உரோமையர்கள்...

தூய உள்ளத்தோடு என் இல்லத்தில் வாழ்வேன்

திருப்பாடல் 28: 2, 7 – 8a, 8b – 9 ஒரு மனிதருடைய வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பதற்கு இன்றைய திருப்பாடல் ஒரு விளக்கத்தைத் தருகிறது. தூய்மையான உள்ளம் தான், வாழ்க்கைக்கான அடிப்படை என்கிற உயர்ந்த மதிப்பீட்டையும் அது கற்றுத்தருகிறது. தூய உள்ளத்தோடு வாழ வேண்டும் என்பது எளிதான காரியமல்ல. தூய உள்ளத்தோடு வாழ்வதற்கு நமக்குள்ளாக இருக்கிற தீய எண்ணங்களை நாம் மாற்ற வேண்டும். இருள் என்று எதுவும் கிடையாது. ஒளியில்லாத நிலை தான் இருள். கடவுள் இந்த உலகத்தைப் படைத்தபோது, அனைத்தும் நல்லதெனக் கண்டார். எனவே, இந்த உலகத்தில் தீயது என்று எதையுமே அவர் படைக்கவில்லை. நன்மை இல்லாத நிலை வருகிறபோது, அது நமக்கு தீமையாகத் தோன்றுகிறது. இந்த தீய எண்ணம் நம்முடைய வாழ்வையே மாற்றிவிடுகிறது. இது நம்முடைய மகிழ்ச்சியையும், அமைதியையும் சிதைத்துவிடுகிறது. அடுத்தவரைப் பழிவாங்க வேண்டும் என்கிற எண்ணம் கொள்ளச்செய்கிறது. நன்மை செய்கிறவர்களைப் பழித்துரைக்கச் செய்கிறது....

துன்பத்திற்கே துன்பம் கொடு…

மாற்கு 8:27-35 இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 24ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மனிதர்களாகிய நாம் துன்பம் வரும் நேரத்தில் கலங்காதிருக்க வேண்டும். துன்பமே வராத வாழ்வு என ஒன்றில்லை. துன்பத் தருணங்களில் அமைதியோடு, வந்த துன்பத்தை எதிர்கொண்டால், வாழ்வை எளிதாக வென்றுவிடலாம் எனவும் துன்பத்திற்கே துன்பம் கொடுத்து அதை விரட்டும் விறுவிறுப்பான வழிமுறைகளையும் சொல்லித் தருகிறது பொதுக்காலம் 24ம் ஞாயிறு. துன்பம் வரும் நேரத்தில் நாம் எப்படி நடக்க வேண்டும். எப்படி நம் செயல்பாடு அமைய வேண்டும் என்பதை நாம் மூன்று விதங்களில் பார்க்கலாம். 1. துரத்த கற்றுக்கொள்ளுங்கள் விவேகானந்தர் வாழ்வில் ஒரு சம்பவம். காசியில் ஒரு குறுகலான சந்து வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார் அவர். திடீரென அவரைப் பத்துப் பதினைந்து குரங்குகள்...