Category: தேவ செய்தி

எருசலேமே! உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக

திருப்பாடல் 122: 1 – 2, 4 – 5, 6 – 7, 8 – 9 இந்த திருப்பாடல் முழுவதும் எருசலேம் நகரைப்பற்றியும் அதன் மேன்மையையும் எடுத்துரைப்பதாக இருக்கின்றது. எருசலேம் என்பது சாதாரண நகர் மட்டுமல்ல. அது இஸ்ரயேல் மக்களின் அடிநாதம். இஸ்ரயேல் மக்களின் உயிர்முடிச்சு. எப்போதெல்லாம் எருசலேம் நகருக்கு ஆபத்து வருகிறதோ, அப்போதெல்லாம் இஸ்ரயேல் மக்களின் இதயத்தில் வலி பெருக்கெடுத்து ஓடும். அந்த எருசலேம் நகரத்தின் மகிமையை, மகத்துவத்தைப் போற்றக்கூடிய பாடலாக இந்த திருப்பாடல் முழுவதும் அமைந்திருப்பது தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. எருசலேம் இவ்வளவு மகிமைக்கு உரியதாக விளங்குவதற்கு காரணம் என்ன? எருசலேமில் கடவுள் குடிகொண்டிருக்கிறார். கடவுளின் பிரசன்னம் எருசலேம் நகரில் இருக்கிறது. எருசலேம் கடவுளின் பாதுகாப்பில் இருக்கிற நகரம். எனவே, யாரெல்லாம் எருசலேமில் இருக்கிறார்களோ, அவர்கள் அனைவருமே இறைவனின் பாதுகாப்பில் இருக்கிறார்கள். அவர்கள் இறைவனின் நிறைவான ஆசீரைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். எருசலேம் நகரில் இருக்கிறவர்களுக்கு கடவுளே...

இறைவன் அருளும் வாக்குறுதி

எரேமியா 33: 14 – 16 எதிர்காலத்தில் நிகழவிருக்கிற சிறப்பான வாழ்வை, இன்றைய வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா முன்னறிவிக்கின்றார். கடவுள், இஸ்ரயேல் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருக்கின்றார். அவர்களை சிறப்பான விதத்தில் வழிநடத்துவதாகவும், அவர்கள் விடுதலையின் காற்றைச் சுவாசிப்பார்கள் என்றும் அந்த வாக்குறுதி சொல்கிறது. அந்த வாக்குறுதி நிறைவேறுமா? எவ்வளவு காலத்திற்கு மக்கள் காத்திருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்போடு அவர்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட தருணத்தில் இறைவாக்கினரின் வாக்கு அவர்களுக்கு அருளப்படுகிறது. இந்த இறைவார்த்தையின் மையப்பகுதியாக விளங்குவது, இஸ்ரயேலின் கடவுள் வாக்குறுதி மாறாதவர், சொன்னதைச் செய்து முடிப்பவர் என்பதேயாகும். கடவுள் வாக்குறுதி கொடுத்தால், அது காலம் கனிகிறபோது, அல்லது தகுதியான காலத்தில், அவரே சூழ்நிலைகளை உருவாக்கி சிறப்பான விதத்தில், அவர் நிறைவேற்றுகிறார். இஸ்ரயேல் மக்கள் எந்த தருணத்திலும் மன உறுதி இழந்து விடாமல், விசுவாசத்தோடு இருக்க வேண்டும். கடவுள் நிச்சயம் அவர்களுக்கு உதவி செய்வார். அந்த காலம் கனிவதற்கு, அவர்கள் இறைவனிடம் நம்பிக்கை...

நீதிமான்களே! ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்

தானியேல் 1: 59 – 60, 61 – 62, 63 – 64 மண்ணகத்தில் இருக்கிறவர்களைப் போற்றிப் புகழ இந்த பாடல் அழைப்புவிடுக்கிறது. அதிலும் சிறப்பாக இறைவனுக்கு நெருக்கமாக இருக்கிறவர்கள், இறைவன் அதிகமாக அன்பு செய்யக்கூடியவர்களுக்கு இந்த அழைப்பானது விடுக்கப்படுகிறது. ஆண்டவரின் குருக்கள், இறைவனுக்காக ஊழியம் செய்கிறவர்கள், நீதிமான்கள், தூய்மையான உள்ளம் கொண்டவர்கள் என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. துன்பங்கள் மற்றும் துயரங்களுக்கு மத்தியிலும் இறைவனை முழுமையாகப் பற்றிக்கொண்டவர்கள் தான், இந்த பாடலில் சொல்லப்படுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இறைவன் தான், அவர்களுக்கு உரிமைச்சொத்து. எவ்வளவு துன்பங்கள் வந்தாலும், இறைவனோடு ஒன்றித்திருக்கிறவர்கள் இவர்களே. அவர்கள் இறைவனைப் புகழ்ந்து பாடுகிறபோது, இந்த உலகத்தில் இருக்கிற பலரும் இறைவனின் வல்ல செயல்களை உணர்ந்து கொள்வார்கள். எனவே, இறைவனுக்கு நெருக்கமானவர்கள், தங்களது வாழ்வில் எது நடந்தாலும் தொடர்ந்து இறைவனைப் போற்றிக் கொண்டிருப்பது மற்றவர்களுக்கு சிறந்த முன்னுதாரணம். அவர்களும் இறைவனைப் போற்றுவதற்கான ஒரு அடித்தளத்தை...

இயற்கையைப் பாதுகாப்போம்

இயற்கை நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கிற வரப்பிரசாதம். மரங்களும், விலங்குகளும் இயற்கையோடு இணைந்தவை. அவை நமக்கு சில அடையாளங்கள் வழியாக பல செய்திகளைத் தருகிறது என்பது நாம் அறிந்த ஒன்று. குறிப்பாக, மரங்கள் செழித்து வளர்வது, இலைகளை உதிர்ப்பது, காய் காய்ப்பது, கனி தருவது என்பதான ஒவ்வொரு செயலும், பருவநிலைகளைப்பற்றிய செய்திகளின் வெளிப்பாடாகத்தான் இருக்கிறது. ஒரு மரத்தை வைத்தே, காலத்தையும், நடக்க இருக்கிற நிகழ்வுகளையும் நாம் அறிந்து கொள்ள முடியும். அப்படித்தான் இன்றைய நற்செய்தியிலும், அத்திமரத்தை வைத்து, இயேசு நமக்கு ஒரு செய்தியைத் தருகிறார். இயற்கையோடு இணைந்த வாழ்வு தான் இயேசுவின் வாழ்வு என்றால் அது மிகையல்ல. இயேசு இயற்கையை அதிகமாக நேசித்தார். இயற்கையை வைத்தே பல செய்திகளை, இறையாட்சியைப் பற்றிய கருத்துக்களை மக்களுக்கு வழங்கினார். இன்றைய நவீன உலகில் மனிதன் இயற்கையை விட்டு எங்கோ சென்றுவிட்டான். அதன் பலனையும் அதற்காக அனுபவிக்கத் தொடங்கிவிட்டான். புதுப்புது நோய்கள், மனக்குழப்பங்கள், மன நலன் சம்பந்தப்பட்ட...

கடவுள் மீது நமது நம்பிக்கை

கடவுள் இரக்கமுள்ளவர். இரக்கமும், அன்பும் உருவான கடவுளால் நல்லவர்களையும், தீயவர்களையும் எப்படிப் பிரித்துப்பார்க்க முடியும்? கடவுளின் மன்னிப்பு தீயவர்களைக் கரைசேர்த்து விடாதா? கடவுளால் தண்டனை கொடுக்க முடியுமா? அன்பே உருவான கடவுளிடமிருந்து, தீர்ப்பிடக்கூடிய நாள் எப்படி வர முடியும்? இதுபோன்ற கேள்விகளையும், வாதங்களையும் முன்வைக்கிறவர்கள் பலர். நல்ல எண்ணத்தோடு வாழ்கிறவர்களுக்கு இது சற்று நெருடலாகவும், தீமை செய்கிறவர்களுக்கு தொடர்ந்து அதனைச் செய்வதற்கு பக்கபலமாகவும் இருப்பது இதுபோன்ற வாதங்கள். அப்படியென்றால் கடவுளின் நீதி என்ன? என்று கேட்போர் பலர். இந்த கேள்விகளுக்கு நம்மால் தீர்வு காண முடியாது. ஏனென்றால், மனிதர்களாகிய நமது சிற்றறிவிற்கு இந்த கேள்விகளே அதிகமானதாக இருக்கிறது. தீயவர்கள் தீயவர்களாகவே இருந்துவிட்டு செல்லட்டும். நல்லவர்கள் உறுதியான மனநிலையோடு இருக்க வேண்டும் என்பதுதான் இயேசுவின் ஆவலாக இருக்கிறது. இந்த உலகத்தில் நடக்கக்கூடிய முரண்பாடுகளைக்க கண்டோ, நல்லவராக இருப்பதால் வரக்கூடிய தடைகளைக் கண்டோ, நாம் கலங்கிவிடக்கூடாது. மாறாக, விசுவாசத்தில் நிலைத்து நிற்க வேண்டும். தளர்ச்சியடையாத...