நன்றியுணர்வு
1சாமுவேல் 1: 24 – 28 நன்றியுணர்வு என்பது மனித வாழ்க்கையின் முக்கியமான உணர்வுகளுள் ஒன்று. அது மனித இயல்பை உயர்த்திக் காட்டக்கூடிய பண்பாக விளங்குகிறது. ஆனால், நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த உலகம், தேவையென்றால் பயன்படுத்தவும், பயன்படுத்தியபின் தூக்கியெறியும் நுகர்வுக்கலாச்சாரத்தை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நுகர்வுக்கலாச்சாரம் நம்முடை ஆன்மீக வாழ்விலும் எதிரொலிப்பது வேதனையிலும் வேதனை. இறைவனிடமிருந்து நாம் ஏராளமானவற்றைப் பெற்றுக் கொள்கிறோம். ஆனால், நம்முடைய தேவை முடிந்தவுடன், நாம் வேண்டியது பெற்றுக்கொண்டவுடன், கடவுளை உதறித்தள்ளி விடுகிறோம். இறைவனின் மீது நம்பிக்கை உள்ளவர்கள், எப்படிப்பட்ட வாழ்வை தங்களின் வாழ்வில் கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு, இன்றைய முதல் வாசகம் சிறந்த எடுத்துக்காட்டு. இறைவனின் முன்னிலையில், பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல், மற்றவர்களின் ஏளனப்பேச்சுக்கு மத்தியிலும் நம்பிக்கை கொண்டிருந்த அன்னாவின் நேர்ச்சைக் கடன் பற்றிய நிகழ்வு நமக்கு இந்த வாசகத்தில் தரப்படுகிறது. எல்கானாவுக்கு இரண்டு மனைவியர். அன்னா, பெனின்னா. குழந்தை இல்லாத காரணத்தினால்,...