Category: தேவ செய்தி

கடவுளின் வல்லமை

யூதர்களின் துக்கச்சடங்கு மிகவும் விரிவானது. ஒருவர் இறந்தவுடனே, அழுகையும், கூப்பாடும் வெளிப்பட்டு, இறப்பை, அங்கிருக்கிறவர்களுக்கு அறிவித்துவிடும். அழுகிறவர்கள் இறந்தவர்களின் மேல் விழுந்தும், தங்கள் முடிகளை பிய்த்துக்கொண்டும், தங்கள் உடைகளை கிழித்துக்கொண்டும் அழுவார்கள். எவ்வாறு உடைகள் கிழிக்கப்பட வேண்டும் என்பது பற்றி ஒழுங்குகள் இருந்தன. குழல்கள் ஊதப்பட வேண்டும். ஏழையாக இருந்தாலும், குறைந்தது இரண்டு குழல் ஊதுவோராவது இருக்க வேண்டும். சோகத்தை வெளிப்படுத்தும் இசைக்கருவியாக இது பார்க்கப்பட்டது. புலம்புகிறவர்கள் துக்கநாட்களில் வேலைக்குச் செல்லக்கூடாது. ஒரு கூலித்தொழிலாளி கூட, குறைந்தபட்சம் மூன்று நாட்கள் வேலைக்குச் செல்வதிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும். இறைவாக்கு நூல்களை வாசிக்கக்கூடாது. ஏனெனில், இறைவாக்கு நூல்களை வாசிப்பது, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாகும். யோபு, எரேமியா மற்றும் புலம்பல் நூல்களை மட்டும் வாசிக்கலாம். முப்பது நாட்களுக்கு ஊரைவிட்டு எங்கும் வெளியே செல்லக்கூடாது. திருமணமாகாதவர்கள் இறந்தால், அடக்கம் செய்வதற்கு முன்னதாக, திருமணச்சடங்குகள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு, பல சடங்குகள் துக்கக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. இனிமேல் ஒன்றும் நடப்பதற்கில்லை....

இயேசு சந்தித்த சவால்கள்

”கடவுள் ஏன் இப்படி தொடர்ந்து எனக்கு சோதனைகளை தந்து கொண்டிருக்கிறார்?” என்று நம்மில் பலபேர் புலம்புவதைக் கேட்டிருப்போம். அடுக்கடுக்காக அவர்கள் வாழ்வில் சந்தித்த துன்பங்களின் பாரம் தாங்காமல், அவர்கள் சொல்லக்கூடிய வார்த்தைகள் தான் இவை. ஆனால், இயேசுவின் வாழ்வை நாம் சற்று சிந்தித்துப்பார்த்தால், அவரது மூன்றாண்டு பணிவாழ்வின் ஆழத்தை நாம் பார்த்தால், ஒரு மனிதன் இவ்வளவு துன்பங்கள், சவால்களுக்கும் மத்தியில் நேர்மையாக, உண்மையாக, கொண்ட கடமையில் கண்ணும் கருத்துமாக வாழ முடியுமா? என்று நாம் ஆச்சரியப்படுவோம். அந்த அளவுக்கு இயேசு ஒரு நிறைவாழ்வை வாழ்ந்திருக்கிறார். இன்றைய நற்செய்தியில் இயேசு தீய ஆவி பிடித்திருந்த மனிதனை எதிர்கொள்கிறார். இதற்கு முந்தைய பகுதியில் பார்த்தோம் என்றால், கடலின் சீற்றத்திலிருந்து தனது சீடர்களை பாதுகாப்பாக கரைசேர்த்திருக்கிறார். அதிலிருந்து நிலத்திற்கு வந்தவுடன் தீய ஆவியை எதிர்கொள்கிறார். ஒரு பக்கத்தில் சதுசேயர், பரிசேயர், மறைநூல் அறிஞர் என, அதிகாரவர்க்கம் இயேசுவை பழிவாங்க காத்துக்கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கத்தில், பொதுமக்கள் இயேசுவை...

சொந்தங்களின் புறக்கணிப்பு !

இயேசு தம் சொந்த ஊருக்கு வந்தபோது புறக்கணிக்கப்பட்ட நிலையை இன்றைய நற்செய்தி வாசகம் அழகாகச் சித்தரிக்கிறது. ”இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை” என்று இயேசுவே தம் ஊர் மக்களிடத்தில் சொல்கின்றார். இயேசுவின் குடும்பத்தை, பின்னணியை, சுற்றத்தை நன்கு அறிந்தவர்கள் நாசரேத் ஊர் மக்கள். அந்த அறிமுகமே அவரை ஏற்றுக்கொள்வதற்கும், அவரது நற்செய்தியை நம்புவதற்கும் தடையாக அமைந்துவிடுகின்றன. எனவே, அவர்கள் அவரது செய்தியைப் புறக்கணிக்கின்றனர். நமது வாழ்விலும் இத்தகைய அனுபவங்கள் நமக்குக் கிடைத்திருக்கலாம். நமது சொந்த வீட்டினர், குடும்பத்தினர், உறவினர்களே நமது அருமையை, திறமைகளை உணராமல், அறியாமல் நம்மை இகழ்ந்து ஒதுக்கிய நிலை நமக்கு ஒருவேளை கிடைத்திருக்கலாம். நாம் கொஞ்சம் கவனமாக இருப்போம். அடுத்த முறை நன்கு அறிமுகமான நபர்களின் ஆளுமையை, ஆற்றல்களை, சிந்தனைகளைத் திறந்த மனதுடன் ஏற்றுக்;கொள்ள முன்வருவோம். அறிமுகமே முற்சார்பு எண்ணங்களைத் துhண்டி, உறவை முறித்துவிடாதபடி, தவறான தீர்ப்புகளுக்கு நம்மைத் தள்ளிவிடாதபடி கவனமாயிருப்போம். மன்றாடுவோம்: அன்புத் தந்தையே...

ஆறுதலின் இறைவன்

நமது வாழ்வில் துன்பங்கள் வருகிறபோது, நம்மோடு இருந்து, நமக்கு ஆறுதலைத் தரக்கூடியவராக நம் இறைவன் இருக்கிறார் என்பதை, இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு கற்றுத்தருகிறது. நமது இறைவன் ஆறுதலின் தேவனாக இருக்கிறார். ஆறுதல் என்றால் என்ன? ஆறுதல் யாருக்குத்தேவை? மத்தேயு 5: 4 சொல்கிறது: ”துயருறுவோர் பேறுபெற்றோர்: ஏனெனில், அவர்கள் ஆறுதல் பெறுவர்”. யாரெல்லாம் துயரத்தில் இருக்கிறார்களோ, அவர்களுக்கு இறைவன் ஆறுதலைத் தரக்கூடிய தேவனாக இருக்கிறார். இறைவன் மூன்று வழிகளில் தனது ஆறுதலை வெளிப்படுத்துகிறார். முதலாவது, தனது வார்த்தையின் வடிவத்தில் ஆறுதலை வெளிப்படுத்துகிறார். யோவான் நற்செய்தியில் இயேசு சிலுவையில் இருக்கிறபோது, மரியாவுக்கும், அவருடைய அன்புச்சீடருக்கும் மிகப்பெரிய துன்பம். மரியாவுக்கு மகனை இழக்கிற வேதனை. யோவானுக்கு தன்னுடைய குருவை, வழிகாட்டியை இழக்கிற கொடுமை. அந்த நேரத்தில், “இதோ உன் தாய், இதோ உன் மகன்” என்ற இயேசுவின் வார்த்தைகள் இரண்டுபேருக்குமே ஆறுதலைத் தருகின்றன. இரண்டாவது, தனது உடனிருப்பின் வழியாக இறைவன் மக்களுக்கு ஆறுதலாக...

இறையாட்சி மலர வேண்டும்

இயேசு இறையாட்சியின் இயல்புகளைப் பற்றி இன்றைய நற்செய்தியில் விளக்க முற்படுகிறார். இறையாட்சி என்பது, கடவுளின் அரசு விண்ணகத்தில் செயல்படுவது போல, இந்த மண்ணகத்திலும் செயல்படுவதாகும். படைப்பு அனைத்திற்குமான கடவுளின் இலக்கு இதுதான். இந்த இறையாட்சி தத்துவத்தை, விதை வளர்ந்து மரமாகக்கூடிய நிகழ்வோடு ஒப்பிடுகிறார். ஒரு விவசாயி நிலத்தில் விதைகளைத் தூவுகிறார். அதைப் பேணிப் பராமரிக்கிறார். அதாவது, அதற்கு தண்ணீர் பாய்க்கிறார். நேரத்திற்கு உரமிடுகிறார். பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கிறார். இவ்வளவு செய்தாலும், விதை எப்படி வளர்கிறது? எப்போது வளர்கிறது? என்பது அவருக்குத் தெரியாது. நேற்றைய நாளை விட, இன்றைக்கு வளர்ந்திருப்பதை பார்த்துதான், விவசாயி, அது சரியான வளர்ச்சியில் இருக்கிறது என்பதை அறிந்துகொள்கிறார். ஏனென்றால், விதைத்தது விவசாயி என்றாலும், அதனைப் பேணிக்காக்கிறவர், அதற்கு வாழ்வு கொடுக்கிறவர் கடவுள் தான். அதுபோல, வாழ்வில் நடப்பதன் நிகழ்வு அனைத்திலும், கடவுளின் அருட்கரம் தங்கியிருக்கிறது என்பதை, நாம் உணர வேண்டும். கடவுளின் வல்ல செயல்களை நாம் உடனடியாக உணர முடியாது....