இயேசுவின் இரக்கம்
இயேசு தனது போதனையில் நோயாளிகளுக்காக, பாவிகளுக்காக தான் வந்திருப்பதாக அடிக்கடி கூறுகிறார். இன்றைய நற்செய்தியில் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் ஒருவரை அவரிடம் கொண்டு வருகிறார்கள். வந்திருக்கிற அனைவர் முகத்திலும் ஒருவிதமான அருவருப்பு காணப்படுகிறது. அந்த அருவருப்பின் பின்புலத்தில் ஒருவிதமான பெருமிதமும் காணப்படுகிறது. சட்டத்திற்கு எதிராகச் சென்ற பெண்ணை கையும், களவுமாக பிடித்துவிட்ட கர்வம், அவர்களது கண்களில் தெரிகிறது. ஆனால், இந்த நிகழ்ச்சி மூலமாக இயேசு நமக்கு அருமையான செய்தியை தருகிறார். எடுத்த எடுப்பிலேயே, தவறு செய்தவர்களை நாம் பார்க்கிறபோது, வெறுப்புணர்வோடு, கோப உணர்வோடு நாம் பார்க்கிறோம். ஆனால், அவர்களை முதலில் பரிதாப உணர்வோடு பார்ப்பதற்கு இயேசு அழைப்புவிடுக்கிறார். ஒரு மருத்துவர் கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் தன்னிடம் மருத்துவத்திற்காக வருகிறபோது, கோபப்படுவதில்லை. அவருடைய எண்ணமெல்லாம், நோயை தீர்ப்பதிலும், முடிந்தவரை நோயாளிக்கு ஆறுதலாக இருப்பதிலும் இருக்கிறது. அதேபோலத்தான், தவறு செய்தவர்களையும் நாம் அணுக வேண்டும். தவறு செய்கிற சூழ்நிலை, பிண்ணனி, அணுகுமுறை, தவறு...