நேரிய வழியில் நடப்போம்
வாழ்வுக்குச் செல்லக்கூடிய வழி அவ்வளவு எளிதானதல்ல. அது மிகவும் கடினமானது. நம்முடைய உழைப்பில்லாமல், அர்ப்பணம் இல்லாமல் நிச்சயமாக நம்மால் மீட்பு பெற முடியாது. நாம் அனைவருமே கடவுள் விரும்பக்கூடிய வாழ்வை வாழ வேண்டும். அப்படி வாழ்கிறபோதுதான், நாம் கடவுளின் அன்பைப் பெற்று, அவரது விருந்திலே பங்கெடுக்க முடியும். எது எளிதானதோ, அவ்வழியில் செல்லவே அனைவரும் விரும்புவர். கடினமான வழியில் செல்ல எவருமே விரும்ப மாட்டார்கள். கடினமாக உழைத்துப்படிக்கலாம். தவறான வழியில் எளிதாகவும் மதிப்பெண் வாங்கலாம். இந்த உலகம் இரண்டாவது வழியைத்தான் தேர்ந்தெடுக்கும். இந்த உலகத்தில் இருக்கிற பலரும், இந்த இரண்டாம் வழியைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். உண்மையாக வாழ வேண்டும் என்று நினைக்கிறவர்களை, இந்த உலகம் அவமானப்படுத்துகிறது. கேலி செய்கிறது. உதாசீனப்படுத்துகிறது. அவர்களுக்கு ஏராளமான சங்கடங்கள் வாழ்வில் இருந்தாலும், அவர்கள் பெறக்கூடிய பரிசு மிகப்பெரிதானது. நமது வாழ்வில் நாம் எத்தகைய வழியைத் தேர்ந்தெடுக்கிறோம்? என்று கேட்டுப்பார்ப்போம். எப்போதுமே, உண்மையான, நேர்மையான பாதையில் நடக்க விரும்புகிறவர்கள்...