உண்மையான உறவு
எந்த ஒரு மனிதரைப் பற்றி அறிய வரும்போது, மக்களிடையே எழக்கூடிய இயல்பான கேள்வி, இவருடைய குடும்பம் எது? இவர் பிறந்த ஊர் எது? போன்றவை. மத்தேயு நற்செய்தியாளர் தன்னுடைய நற்செய்தியை யூதர்களுக்கு எழுதுகிறார். இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அவர் யூதர்களுக்கு அறிவிக்க வேண்டுமென்றால், அதற்கேற்றாற்போல, தன்னுடைய நற்செய்தியை அவர் எழுத வேண்டும். யூதர்களின் வாழ்வில் மையம் கொண்டிருக்கிற முக்கியமானவர்கள், இயேசுவுக்கு நெருக்கமாக இருந்தால், அதை வைத்து, அவர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பது எளிதானது. எனவே தான், மத்தேயு நற்செய்தியாளர் ஆபிரகாமை, நம் ஆண்டவர் இயேசுவுக்கு தொடக்கமாக தருகிறார். ஆபிரகாம் யார்? எதற்காக ஆபிரகாமை இயேசுவின் தொடக்கமாக மத்தேயு நற்செய்தியாளர் எழுத வேண்டும்? ஆபிரகாம் இஸ்ரயேல் மக்களின் தந்தை என்று அழைக்கப்படுகிறவர். மிகப்பெரிய இறைவாக்கினராகக் கருத்தப்பட்டவர். அவர் வழியாகத்தான் கடவுள் தங்களை தேர்ந்து கொண்டதாக மக்கள் நம்பினர். அதையே வழி, வழியாக ஏற்றுக்கொள்ளவும் செய்தனர். ஆபிரகாமுக்கு இணையானவராக அவர்கள் வேறு எவரையும் ஏற்றுக்கொள்ள தயாரில்லை....