Category: தேவ செய்தி

நீங்களே வழக்கைத் தீர்த்துக்கொள்ளுங்கள் !

இயேசு மக்கள் கூட்டத்துக்கு வழங்கிய அறிவுரைகளில் ஒன்று நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள் என்பது. இயேசுவின் இந்த வாக்கு எத்துணை ஞானம் நிறைந்தது, இந்த நூற்றாண்டுக்கும் எத்துணை பொருத்தமானது என்பதை எண்ணி, எண்ணி வியக்கிறோம். இன்றைய நாள்களில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. குடும்ப நீதிமன்றங்களில் மணமுறிவுக்கான வழக்குகள் குவிகின்றன. சொத்துச் சண்டை, பாகப் பிரிவினை என்பது தனி நபர்களுக்குள் மட்டுமல்ல, மாநிலங்களுக்கிடையேகூட உருவாகி, மாநிலங்களும் வழக்கு தொடுக்கின்ற காட்சிகளை இன்று காண்கிறோம். நீதிமன்றங்களுக்குச் செல்வதால் பண விரயம், கால விரயம், மன உளைச்சல், தொடரும் பகை உணர்வு முதலியனதான் ஏற்படுகின்றனவே ஒழிய, நேர்மையான, அனைவருக்கும் ஏற்புடைய தீர்ப்புகள் கிடைப்பதில்லை. எனவே, இயேசுவின் அறிவுரை முன் எப்போதையும்விட இக்காலத்துக்கு இன்னும் நன்றாகப் பொருந்துகிறது. வழக்கு மன்றங்களுக்குச் செல்வதற்கு முன் உரையாடல் வழி சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ள முடியுமா என்று முயற்சி செய்ய வேண்டும்....

‘மண்ணுலகில் தீமூட்ட வந்தேன்” (லூக்கா 12:49)

நெருப்பு பல விதங்களில் நமக்குப் பயன்படுகிறது. உணவு சமைப்பதற்கு நெருப்பு உதவுகிறது. குளிர் காலத்தில் நெருப்பின் அருகே அமர்ந்து குளிர்காய்வது இதமான அனுபவம். அழுக்குகளைச் சுட்டெரித்து அழிப்பதற்கும் நெருப்பு பயன்படுகிறது. அதே நேரத்தில் நெருப்பு அழிவுக்கும் காரணமாகலாம். கலவரங்கள் ஏற்படும்போது வீடுகளுக்கும் ஊர்களுக்கும் தீவைத்து அழிக்கின்ற செயல்கள் இப்போதும் நடந்துவருவது ஒரு கசப்பான அனுபவம். இயற்கையாகவோ மனிதரின் கவனக்குறைவாலோ காடுகளில் தீ எரிந்து பெரும் அழிவு ஏற்படுவதும் உண்டு. இவ்வாறு ஆக்கவும் அழிக்கவும் பயன்படுகின்ற தீயை மூட்டிவிட இயேசு வந்தார் என்றால் அதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? இயேசுவின் உள்ளத்தில் ஒரு தீ எரிந்துகொண்டிருந்தது. அதுதான் கடவுள் தம்மிடம் ஒப்படைத்த பணியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்னும் தணியாத ஆர்வம். இந்த ஆர்வத்தால் உந்தப்பட்ட இயேசு இவ்வுலகத்தில் மனித உள்ளங்களில் ஒரு தீயை மூட்டிட வந்தார். கடவுளின் ஆட்சியை இவ்வுலகில் கொணரவேண்டும் என்னும் ஆர்வம்தான் இயேசுவின் போதனைக்கும் செயல்பாட்டுக்கும் உந்துசக்தியாக அமைந்தது....

வாழ்வு என்னும் கொடை

அறிவுள்ள, அறிவற்ற பணியாளர்களைப்பற்றி இயேசு இங்கே பேசுகிறார். மத்திய கிழக்குப் பகுதிகளில் வீட்டுப்பொறுப்பாளர் எனக்கூறப்படுபவரும் அடிமைதான். அவருடைய பொறுப்பு மற்ற அடிமைகளைப் பொறுப்பாக, அவரவர்க்கு கொடுக்கப்பட்டிருக்கிற பணியைச்செய்யச் சொல்வது. தலைவருடைய நம்பிக்கைக்கு உரியவர் என்றால், இன்னும் அதிகப்பொறுப்பை தலைவர் அவருக்குக் கொடுப்பார். அறிவற்ற பணியாளரின் நெறியில்லாத இரண்டு தவறுகளை இயேசு சுட்டிக்காட்டுகிறார். 1. தனது பொறுப்பை தவறாகப்பயன்படுத்துவது. தலைவர் அவரைத் தனது வீட்டின் பொறுப்பாளராக ஏற்படுத்தியிருக்கிறார் என்றால், அதற்கு காரணம், இந்த அடிமை தலைவருடைய மதிப்பைப் பெற்ற அடிமை. எனவேதான், தலைவர் அவரை பொறுப்பாளராக ஏற்படுத்தியிருக்கிறார். ஆனால், இந்தப்பொறுப்பாளரின் வாழ்வை சற்று ஆழமாகச்சிந்தித்துப்பார்த்தால், அவர் தலைவரின் நன்மதிப்பைப்பெற நடித்திருக்கிறார். வீட்டுப்பொறுப்பாளராக மாற வேண்டும் என்பதற்காக, தலைவர் முன்னிலையில் தன்னை நல்லவராக காட்டி வந்திருக்கிறார். ஆனால், நேர்மையற்றவர்களின் சாயம் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக வெளுத்துவிடும் என்பதற்கு இவர் சிறந்த எடுத்துக்காட்டு. 2. தலைவரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாத சோம்பல்தன்மை. தலைவர் இவ்வளவு பெரிய பொறுப்பைக்கொடுத்திருக்கிறார்...

வாழ்வு மூலம் கடவுளைப் புகழ்வோம்

இந்த உலகத்தில், நமக்கான கடமையை நாம் நிறைவாகச் செய்கிறபோதுதான், நாம் நிறைவைப் பெறுகிறோம். இந்த உலகத்தைவிட்டு, எப்போது செல்ல வேண்டும், என்கிற நேரம் யாருக்கும் தெரியாது. முடிவு யாருக்கும், எப்போதும் வரலாம். நேற்று இருந்தவர்கள் இன்று இல்லை. நாளை யார், யார் இருப்பார்கள் என்பதும் தெரியவில்லை. அதுதான் நமது வாழ்வு. முடிவு எப்போதும் வரலாம் என்பதுதான் நிதர்சனம். அந்த நிதர்சனத்திற்கு நாம் வாழப்பழகிக்கொள்ள வேண்டும். இந்த நிரந்தரமில்லாத உலகத்தில், எந்நேரமும் நமக்கு அழைப்பு வரலாம் என்கிற சூழலில், நமது கடமையை ஆற்றுவதற்கு நாம் மறந்துவிடக்கூடாது. யோவான் 17: 4 ”நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து, நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன்”. இயேசு தனது தந்தையை மாட்சிப்படுத்துகிறார். எவ்வாறு? அவருடைய கடமையைச் சரிவரச் செய்து, மாட்சிபடுத்துகிறார். இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்தது குறுகிய 33 ஆண்டுகள் தான். காலம் குறைவாக இருந்தாலும், இயேசு குறை சொல்லவில்லை. அந்த...

செல்வத்தினால் வரும் கேடு

இரண்டு சகோதரர்களுக்கு இடையே ஓர் ஊரில் சண்டையோ, வாக்குவாதமோ வந்தால், அவர்கள் உடனே, ஊரிலிருக்கக்கூடிய பெரிய மனிதர்களிடம் முறையிடுவார்கள். அதுபோல, பொதுவாக பாலஸ்தீனத்திலே போதகர்களுக்கென்று, மதிப்பும், மரியாதையும் இருந்தது. ஏதாவது பிரச்சனை என்றால், போதகர்களிடம் சென்று, பிரச்சனையைத் தெரிவித்து, தங்களுக்கு இடையேயான பிரச்சனையைத் தீர்த்துக் கொள்வார்கள். அதுபோன்று தான், இயேசுவிடமும் ஒரு மனிதர் வருகிறார். இயேசு அந்த மனிதனின் தேவையில்லாத பிரச்சனையைத் தீர்ப்பது தனது பணி அல்ல என்பதைத் தெரிவித்தாலும், அதனை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, அங்கிருக்கிறவர்களுக்கு செல்வத்தினால் விளைகின்ற, கடுமையான விளைவுகளை எடுத்துரைக்கின்றார். செல்வம், அந்த செல்வந்தனை இந்த உலகத்தோடு கட்டிப்போட்டு விடுகிறது. இந்த உலகத்தைத் தாண்டி அவன் சிந்திக்கவும் இல்லை. அப்படி ஓர் உலகம் இருப்பது, அவனது எண்ணத்திற்கு வரவும் இல்லை. அவனுடைய சிந்தனை, எண்ணம் முழுவதும் இந்த உலகம் சார்ந்ததாக இருக்கிறது. அதைத்தாண்டி, அவனால் சிந்திக்க முடியாததற்கு காரணம், அவன் சேர்த்து வைத்திருந்த செல்வம். கடல் தண்ணீரை...