Category: தேவ செய்தி

விண்ணரசின் விருந்தாளிகள்

கடவுள் வரலாற்றில் தனது பாதத்தைப்பதிக்கிற காலம் மெசியாவின் காலமாகக் கருதப்படும் என பாரம்பரியமாக யூதர்கள் நம்பினர். அவ்வாறு கடவுளின் நாள் வருகிறபோது, அனைவருக்கும் அவர் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்வார் என்றும், விருந்திலே லீவியத்தான் என்னும் மிகப்பெரிய கடல் விலங்கு உணவாகப் பரிமாறப்படும் என்றும் நம்பினர். இத்தகைய மெசியா தருகிற விருந்தைப்பற்றிதான், இயேசுவிடத்திலே அந்த மனிதர் கூறுகிறார். விருந்திலே பங்கெடுக்கிறவர்கள் யூதர்கள் தான் என்றும், பாவிகளுக்கும், புறவினத்தார்க்கும் அந்த விருந்திலே பங்கில்லை என்றும், அந்த மனிதர் தனது பாரம்பரிய நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். இந்த உவமையில் கடவுளை தலைவராகவும், விருந்தினர்களாக யூதர்களையும் இயேசு ஒப்பிடுகிறார். வரலாறு முழுவதும் யூதர்கள் ஆண்டவரின் நாளுக்காக, ஆண்டவர் வரலாற்றில் கால் பதிக்கும் நாளுக்காக காத்திருந்தனர். ஆனால், உண்மையில் இயேசு வடிவத்தில் இறைவன் கால் பதித்தபோது, அதை நம்பாமல், அந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் இயேசுவைப் புறக்கணித்தனர். வீதிகளில் காணப்படுகிற ஏழைகள், கைவிடப்பட்டவர்களை பாவிகளுக்கும், புறவினத்தார்க்கும் ஒப்பிடுகிறார். இந்த விருந்திலே...

ஏழைகளுக்கு முன்னுரிமை

உறவுகளின் நெருக்கம் குறைந்து, விரிசல் அதிகமாகிக் கொண்டிருக்கிற உலகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கு உறவுகளுக்கு முக்கியத்துவம் இல்லை. பணக்கார உறவென்றால், தாங்கிப்பிடிக்கிறோம். அவர்களின் வீட்டில் ஒன்று என்றாலும், நாம் ஓடுகிறோம். ஆனால், ஏழைகள், எளியவர்கள் நமது உறவு என்று சொல்வதற்கே, வெட்கப்படுகிறோம். அவர்களை ஒதுக்கிவைக்கிறோம். அப்படித்தான், இந்த உலகம் நமக்கும், நம் சந்ததியினருக்கும் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறது. இதிலிருந்து மீண்டு வர நமக்கு அழைப்புவிடுப்பதுதான், இன்றைய நற்செய்தியில் வரும், இயேசுவின் வார்த்தைகள். இயேசு எளியோரை, வறியோரை, ஏழைகளை வாழ்வில் முன்னேற்றுவதற்கு அழைப்புவிடுக்கின்றார். லூக்கா நற்செய்தியாளருக்கே உள்ள தனிப்பாணியில் இந்த செய்தி மையப்படுத்தப்படுகிறது. ஏன் ஏழைகள் மையப்படுத்தப்பட வேண்டும்? ஏன் அவர்களுக்கு உதவுவதில் நாம் அதிக அக்கறை கொள்ள வேண்டும்? ஏனென்றால், நாம் செய்யக்கூடிய உதவி, கைம்மாறு கருதாமல் செய்யப்பட வேண்டிய ஒன்றாக இருக்க வேண்டும். உதவி என்பது எதிர்பார்த்து செய்யப்படுவதாக இருக்கக்கூடாது. தேவையை கருத்தில்கொண்டு, எதையும் எதிர்பாராமல் செய்யக்கூடிய உதவியாக இருக்க வேண்டும். அதனை...

நாம் வாழும் வாழ்க்கை

இன்றைய நவீன கால, அரசியல் வாழ்வை நாம் கேட்ட நற்செய்தி வாசகம் பிரதிபலிப்பதாக இருக்கிறது. இன்றைக்கு இரண்டுவிதமான வர்க்கங்கள் இந்த உலகத்தில் இருக்கிறது. இன்று மட்டுமல்ல, என்றுமே இருந்திருக்கிறது. 1. அடிமை வா்க்கம் 2. ஆளும் வர்க்கம். தொடக்க காலத்தில், முடியாட்சியில், அதிகாரவர்க்கமான அரசர்கள், மக்களை தங்களது அடிமைகளாக எண்ணினர். அதிகாரவர்க்கத்தினருக்கு பணிவிடை செய்வதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என எண்ணினர். மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி மலர்ந்தாலும், காட்சிகள் மாறவே இல்லை. தனிநபர் வழிபாடு எங்கும் காணப்படுகிறது. அரசியல், திரைப்படங்கள், விளையாட்டு என்று, எங்கு பார்த்தாலும் தனிநபர் வழிபாடு இந்த சமூகத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. நல்லவர்கள், பொதுநலனுக்காக உழைக்கிறவர்களுக்கு மதிப்பில்லை. அரசியல் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட வியாபாரமாய் மாறிவிட்டது. மக்களும் அதற்கு ஏற்ப வாழ பழகிவிட்டார்கள். கோடிகளை வாரிஇறைத்து, கோடி இலட்சங்களை அள்ளக்கூடிய, அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாய், அரசியல் வியாபாரமாகிவிட்டது. மக்களை அடக்கி ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கேற்ப, தங்களது அதிகாரத்தை மக்கள்...

தாழ்ச்சி என்னும் அணிகலன்

இயேசு எப்போதுமே வெறும் போதனையோடு நின்றுவிடுவதில்லை. போதிப்பதை வாழ்ந்து காட்டக்கூடியவர். இன்றைய நற்செய்தியிலும், அப்படிப்பட்ட தான் வாழ்ந்து காட்டிக்கொண்டிருக்கக்கூடிய போதனையை, அவர் மக்களுக்கு அறிவிக்கிறார். அதுதான் தாழ்ச்சி. தாழ்ச்சியைப்பற்றி இயேசுவைத்தவிர சிறப்பாக எவரும் போதித்துவிட முடியாது. அந்த அளவுக்கு, தாழ்ச்சியே உருவானவர் தான், நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து. நாம் ஒவ்வொருவருமே இந்த தாழ்ச்சி என்னும் அணிகலனை அணிய வேண்டும் என்பது தான், இயேசுவின் விருப்பமாக இருக்கிறது. நாம் எப்படி தாழ்ச்சி உள்ளவர்களாக வாழ முடியும்? எப்போது தாழ்ச்சி நம்முள் மேலோங்கியிருக்கும் என்று பார்ப்போம். தாழ்ச்சி என்னும் அணிகலனை நாம் அடைய, நமது எண்ணத்தை சீர்படுத்த வேண்டும். அதனை ஒழுங்குபடுத்த வேண்டும். நாம் எவ்வளவுக்கு சாதித்திருந்தாலும், இந்த உலகத்தில் இன்னும் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. நான் சாதித்தது ஒரு துளி தான், என்று, நமது எண்ணத்திற்கு அவ்வப்போது உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். நமது எண்ணத்தை நாம் பொருட்டாக நினைக்காது, அதனை அதன்...

செயல்வழிக் கற்பித்தல்

இயேசுவின் கற்பிக்கும் பாணியே அலாதியானது. இன்றைய நாள்களில் கல்வித் துறை ”செயல்வழிக் கற்றல”; என்னும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, மாணவர்கள் எந்த ஒரு செய்தியையும், கற்றலையும் செய்துபார்த்து அதன் மூலம் கற்றுக்கொள்கிறார்கள். மிக திறன்வாய்ந்த கல்வி முறை இந்த செயல்;வழிக் கற்றல்; முறை எனக் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மாணவர்களும் இம்முறையில் நன்கு வளர்சியடைகின்றனர். இயேசு தன்னுடைய இறையாட்சிப் பணியை இந்த செயல்வழிக் கற்றல் முறையிலேயே செயல்படுத்துவதை அறிகிறோம். ஓய்வுநாளில் குணமாக்குவது தவறில்லை, என்பது மட்டுமல்ல, தேவையானது என்னும் இறையாட்சிப் பாடத்தை இந்தச் செயல்வழிக் கற்றல் வழியே இயேசு தம் சீடருக்கும், பிறருக்கும் கற்றுத் தருகிறார். ஓய்வுநாளில் உணவு அருந்தச் சென்ற இடத்தில் நீர்க்கோவை நோய் உள்ள மனிதரை இயேசு பார்க்கிறார். அன்று ஓய்வு நாள் என்பதையும், தான் விருந்துண்ணவே இந்த வீட்டிற்கு வந்திருக்கிறோம் என்பதையும் புறந்தள்ளிவிட்டு, தனது உதவி அம்மனிதருக்குத் தேவை என்பதை அறிந்து உடனே செயல்படுகிறார். நலம் தருகிறார். நலப்படுத்திய...