கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டிடத்தின் மூலைக்கல் ஆயிற்று
திருப்பாடல் 118: 1 – 2, 4, 22 – 24, 25 – 27a, (22) ”கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டிடத்தின் மூலைக்கல் ஆயிற்று” ஒரு கட்டிடத்தை ஒன்றிணைக்கக்கூடியதாக இருப்பது மூலைக்கல். அந்த கட்டிடத்திற்கு அடித்தளமாக இருப்பது இந்த மூலைக்கல் தான். எசாயா 28: 16 சொல்கிறது: ”சீயோனில் நான் ஓர் அடிக்கல் நாட்டுகின்றேன். அது பரிசோதிக்கப்பட்ட கல். விலையுயர்ந்த மூலைக்கல். உறுதியான அடித்தளமாய் அமையும் கல்”. இங்கே ”மூலைக்கல்” என்கிற வார்த்தை நமக்கு தரக்கூடிய பொருள், இது ஒரு கட்டிடத்தின் முக்கியமான கல் என்பதாகும். இஸ்ரயேல் மக்கள் தான், இந்த உலகத்தின் மூலைக்கல் என்று கடவுள் சொல்கிறார். ஏனென்றால், வலிமை வாய்ந்த அரசுகள் இருந்த காலக்கட்டத்தில், இஸ்ரயேல் மக்கள் சாதாரணமானவர்களாக இருந்தனர். இந்த உலகத்தின் பார்வையில் சாதாரண கல்லாகக் கிடந்தனர். ஆனால், கடவுள் அவர்களை அடிப்படையாக வைத்துதான், மீட்பின் திட்டத்தை தயாரிக்கிறார். அவர்கள் வழியாகத்தான் மீட்பைக் கொண்டு வர...