செய்துப் பாருங்கள்… என்ன நடக்கிறது பாருங்கள்…
லூக்கா 14:12-14 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். ஆண்டவர் இயேசுவின் பணி, பாணி மிகவும் வித்தியாசமானது. ஒவ்வொன்றும் ஆச்சரியத்தை உருவாக்கக்கூடியவை. அந்த வகையில் இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் வியப்பூட்டும் போதனைக்கு எடுதுத்துக்காட்டாக அமைகிறது. நீங்கள் விருந்திற்கு அழைக்கும் போது ஏழைகளையும், உடல் ஊனமுற்றோரையும், கால் ஊனமுற்றோரையும், பார்வையற்றவரையும் அழையுங்கள் என்கிறார் இயேசு. ஏன்? அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. 1. ஒன்றும் இருக்காது ஏழைகளையும், உடல் ஊனமுற்றோரையும், கால் ஊனமுற்றோரையும், பார்வையற்றவரையும் திருமண விருந்திற்கு அழைக்கும் போது அவர்களிடம் திருப்பி உதவி செய்ய ஒன்றும் இருக்காது. அதுதான் திருமண விருந்து. விருந்து எதிர்பார்த்து செய்வது அல்ல. மாறாக எதிர்பார்க்காமல் கொடுப்பது. இந்த விருந்தே இறைவன் எதிர்பார்க்கும்...