Category: தேவ செய்தி

மறக்காதீ்ங்க! சொல்ல மறக்காதீங்க… ப்ளீஸ்!

லூக்கா 10:21-24 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். ஒருசில ஜெபங்களை நாம் உணர்ந்து சொல்லும்போது அது நம் உடல், மனம், ஆன்மாவிற்கான முழுபலனையும் தருகிறது. அந்த ஜெபத்தை சொல்லும்போது நம் உடலில் புதுசெல்கள் பிறக்கின்றன. அப்படிப்பட்ட மிக அருமையான ஜெபத்தை அறிமுகப்படுத்துகிறது இன்றைய நற்செய்தி வாசகம். அந்த ஜெபத்தை இரண்டு நேரங்களில் சொல்லும்போது அது அதிக பலன்களை பெற்றுத்தருகிறது. நம் திறமைகளை வெளிப்படுத்திய பிறகு நம்முடைய திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பான காரியங்களைச் செய்த பிறகு நமக்கு ஒரு சந்தோசம் கிடைக்கும். அந்த வேளையில் நாம் நம்மைக் குறித்து பெருமிதம் கொள்ளாமல் இறைவனை நினைக்க வேண்டும். அதைத்தான் இயேசு நற்செய்தி வாசகத்தில் செய்கிறார். நாமும் அவரைப்போல சிறப்பான செயல்களை...

நம்பிக்கை எப்போதும் வெல்கிறது

லூக்கா 21:25-28, 34-36 இறையேசுவில் இனியவா்களே! திருவருகைக்காலம் முதல் ஞாயிறு வழிபாட்டை ஆர்வத்தோடும் ஆசையோடும் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். ஒவ்வோர் ஆண்டும் திருவருகைக் காலத்துடன் ஒரு புதிய திருவழிபாட்டு ஆண்டை நாம் துவக்குகிறோம். கத்தோலிக்கர்களுக்கு இது புத்தாண்டு தொடக்க நாள். புத்தாண்டு என்றாலே, புதியனவற்றைப் புகுத்தும் எண்ணம் மனதில் எழுகிறது. இந்தத் திருவழிபாட்டு ஆண்டும் புதிய எண்ணங்களை, அந்த எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் புதிய கண்ணோட்டங்களை, புதிய மனதை நமக்குள் உருவாக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு, புதுப்பொலிவோடு புலா்ந்திருக்கிறது. திருவருகைக் காலம் எதிர்பார்ப்பின் காலம். நம்பிக்கையின் காலம். கிறிஸ்து பிறப்பு பெருவிழாவிற்கு நம்மை தயாரிக்கும் காலம். உண்மையில், நம்மில் இன்று பலருக்கு போதாத காலமாக உள்ளது. தனி வாழ்விலும், குடும்பவாழ்விலும், பொது வாழ்விலும் பல்வேறு பிரச்சினைகள்...

முதல் தேதியில் முக்கிய அறிவிப்பு

லூக்கா 21:34-36 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். ஆண்டின் கடைசிமாதம் டிசம்பர். இந்த மாதம் நல்ல குளுகுளு மாதம். மானிடமகன் வரும் நாளில் எப்படியெல்லாம் இருக்க கூடாது என்பதே இம்மாதத்தின் முக்கிய அறிவிப்பு. மிகச் சிறந்த தயாரிப்பு செய்ய வேண்டும் என்பதே இன்றைய நற்செய்தியின் மையமாகும். இரண்டு விதங்களில் நாம் இருக்க கூடாது. 1. குடிவெறி தமிழ்நாடு குடியினால் தள்ளாடுகிறது. எல்லா ஊர்களிலும் மது கடைகளை அரசு திறந்து வைத்திருக்கிறது. குடிப்போரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. மிகவும் மோசமாக படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குடியினால் ஏற்பட்டிருக்கிற தீமைகள் அதிகம். குடிநோயாளிகள் மனநோளிகளாக நடமாடுகின்றனர். இது சமூக சீர்கேட்டிற்கு காரணமாக அமைகின்றது. அன்புமிக்கவர்களே! குடிவெறியிலிருந்து வெளியே வர...

திருத்தூதரான தூய அந்திரேயா பெருவிழா

அந்திரேயா – ஆண்டவர் பக்கமே! மத்தேயு 4:18-22 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருத்தூதரான தூய அந்திரேயா பெருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அந்திரேயா பெத்சாய்தாவைக் சார்ந்தவர்; பேதுருவின் சகோதரர். மீன்பிடித் தொழிலை செய்துகொண்டிருந்தவர். விவிலிய அறிஞர்களின் கூற்றுப்படி அந்திரேயா தொடக்கத்தில் திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்தவர். ஒருநாள் ஆண்டவர் இயேசு வழியோரமாக சென்றுகொண்டிருக்கும்போது திருமுழுக்கு யோவான் தன்னுடைய சீடர்களிடம் (அந்திரேயா அங்கு இருந்தார்), “இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி” என்று இயேசுவை சுட்டிக்காட்டினார். உடனே அந்திரேயா இயேசுவிடம், “ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்க, அவர் “வந்து பாரும்” என்று சொன்னார். அந்திரேயா ஆண்டவர் இயேசுவோடு தங்கி இறையனுபவம் பெற்றார். அந்த அனுபவத்தை தன்னுடைய சகோதரரான பேதுருவிடம் எடுத்துச் சொல்லி...

ஆவலோடு எதிர்பார்த்தது இதோ விரைவில்…

லூக்கா 21:20-28 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் ஆவலோடு எதிர்பார்த்திருந்தது கிடைக்கும் போது நமக்கு பெருமகிழ்ச்சி கிட்டுகிறது. நாம் எதிர்பார்த்திருந்தன் நோக்கமும் நிறைவு பெறுகிறது. நமது மனதின் ஏக்கமும் முடிவுக்கு வருகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவார் என எதிர்பார்த்திருக்கும் நமக்கு மிக உடனடியாக அவரது இரண்டாம் வருகை இருக்கும், நம் ஏக்கம் நிறைவேற போகிறது என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். இயேசுவின் இரண்டாம் வருகை நமக்கு இரண்டு ஆசீரைத் தருகிறது. 1. மீட்பு இயேசுவின் இரண்டாம் வருகையை நம்பியிருக்கும் எல்லோருக்கும் இயேசுவின் வருகை மீட்பு அளிக்கும். அந்த மீட்பிற்கான நாள் வெகுதொலையில் இல்லை. மாறாக மிகவும் அருகில் உள்ளது. நாம் அனைவரும் மெசியாவைப் பார்க்க...