ஆச்சரியமான அன்பு வாழட்டும்!!!
லூக்கா 3:1-6 இறையேசுவில் இனியவா்களே! திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு வழிபாட்டை ஆர்வத்தோடும் ஆசையோடும் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு அன்பின் ஞாயிறாக கொண்டாடப்படுகிறது. மெசியாவின் பிறப்பிற்கு நம்மையே தயாரிக்கும் நாம் அன்போடு இருக்க வேண்டும், அன்பை பரப்ப வேண்டும், அன்பின் ஆட்சி அகிலத்தில் நடக்க உழைக்க வேண்டும் என்ற உன்னதமான நோக்கங்களோடு திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு வந்திருக்கிறது. அன்பு என்பது நவீனகாலத்தில் எப்படி இருக்கிறது என்பதை இந்த நகைச்சுவைகள் சுட்டிக்காட்டுகின்றன. உண்மையில் அன்பு என்பது என்ன? அன்பு என்ற வார்த்தைக்கு நிகரேது. அதனால்தான் அன்பின் பெருமையை எடுத்துக்கூறும் விதமாக திருவள்ளுவர் அன்புடைமை பற்றி தனி அதிகாரமே எழுதியுள்ளார். அன்பில் இடைவெளி விழுவதால்தான் கணவன் மனைவி இடையே பிரிவினை ஏற்படுகிறது. பந்தங்கள் பலவீனமடைகின்றன. அதனை...