Category: தேவ செய்தி

நல்லதையே ஆண்டவர் அருள்வார்

திருப்பாடல் 85: 8 – 9, 10 – 11, 12 – 13 இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையில் கடவுளைப் பற்றி பல்வேறு புரிதல்களை வைத்திருந்தனர். அதில் ஒன்று, கடவுள் கண்டிப்புமிக்கவர். தவறுக்கு தண்டனை வழங்கக்கூடியவர். மக்களின் துன்பங்களுக்கு காரணம், அவர்கள் செய்த தவறுகளே. அது கடவுளிடமிருந்து வருகிறது என்று, அவர்கள் நினைத்துக்கொண்டிருந்தனர். கடவுள் மக்களை நல்வழிப்படுத்த கண்டிப்புமிகுந்தவர் தான். எப்படி ஒரு தாய், தன்னுடைய குழந்தை நன்றாக வளர, கண்டிப்பு காட்டுகிறாளோ, அதேபோல, நாம் மகிழ்ச்சியாக வாழ கடவுளும் கண்டிப்பு காட்டுகிறார். ஆனால், இந்த திருப்பாடல், கடவுளின் கண்டிப்பை விட, கடவுளின் இரக்கமும் அருளும் மிகுதியாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. கடவுள் எப்போதும் நமக்கு நல்லதை வழங்குவதற்கே விரும்புகிறார் என்று இந்த திருப்பாடல் கற்றுக்கொடுக்கிறது. கடவுள் நல்லவர். நன்மைகளைச் செய்கிறவர். நாம் நல்லவர்களாக வாழ வேண்டும் என்பதையே விரும்புகிறவர். கடவுள் எப்போதும் நாம் அழிந்து போக வேண்டும் என்பதை விரும்பக்கூடியவர்...

நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர்

திருப்பாடல் 99: 5, 6, 7, 8, 9 தூயவர் என்கிற வார்த்தையை நாம் கடவுளுக்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும். ஏனெனில் கடவுள் மட்டும் தான், தூய்மையின் வடிவமாக இருக்கிறார். எபிரேய மொழியில், ஒரு வார்த்தையின் நிறைவைக் குறிப்பதற்கு மூன்றுமுறை அதனைத் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள். எனவே தான், பழைய ஏற்பாட்டில், ”தூயவர், தூயவர், தூயவர்” என்று மூன்றுமுறை இந்த வார்த்தை தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது கடவுள் எந்த அளவுக்கு தூய்மையின் நிறைவாக விளங்குகிறார் என்பதை நமக்குக் குறித்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. கடவுள் தூயவராக இருப்பதால், கடவுளுக்குப் பணிசெய்வதற்கென்றே தூய குருத்துவத்தை அவர் ஏற்படுத்துகிறார். மோசேயும், ஆரோனும் அவர் தம் குருக்கள் என்று இந்த திருப்பாடல் சொல்கிறது. அவர்கள் தூய வாழ்வு வாழ அழைக்கப்பட்டவர்கள். அவர்கள் மட்டும் தான் தூய வாழ்வு வாழ வேண்டுமா? இல்லை. நாம் அனைவருமே தூய வாழ்வு வாழ அழைக்கப்படுகிறோம். ஆனால், சிறப்பாக, கடவுளின் பணிக்காக தங்களையே...

உமது முக ஒளியை வீசச் செய்யும்

திருப்பாடல் 119: 129 – 130, 131 – 132, 133, 135 திருப்பாடல்களில் மிக நீளமான திருப்பாடல் இந்த திருப்பாடல். இது இருபத்திரெண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், எபிரேய மொழியில் இருக்கிற 22 எழுத்துக்களை இது குறிப்பதாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு பத்தியும் எட்டு இறைவசனங்களை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது. இந்த திருப்பாடல்களில் கடவுள் புகழ்ச்சியும், செப மனநிலையும், தீங்கிழைக்கிறவர்களுக்கு எதிரான விண்ணப்பங்களும் இடம்பெற்றிருக்கின்றன. இந்த திருப்பாடல் எந்வொரு குறிப்பிட்ட நிகழ்வுகளுக்குமாக எழுதப்பட்டிருக்கவில்லை. இது ஓர் ஆன்ம சிந்தனையை வெளிப்படுத்தும் பாடலாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, இளவயதினற்கான கற்பித்தலுக்காகவும், அவர்கள் கற்றுக்கொள்வதற்கும், மனப்பாடம் செய்வதற்கும் ஏற்றமுறையில் இது அமைந்திருக்கிறது. கடவுளைப்பற்றிய புதிய அனுபவத்தைப்பெற இருக்கும் ஒருவரின் நியாயமான வேண்டுதலாக இந்த திருப்பாடல் அமைந்திருப்பது இதனுடைய சிறப்பு. ”உம் ஊழியன் மீது உமது முக ஒளியை வீசச் செய்யும்” என்கிற வரிகள், மேற்சொன்ன விளக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு. கடவுளின் அருளைப்பெறுவதற்கான முயற்சியாக இந்த பாடல் வரிகள்...

ஆண்டவர் எத்துணை நல்லவர் என்று சுவைத்துப் பாருங்கள்

திருப்பாடல் 34: 1 – 2, 3 – 4, 5 – 6, 7 – 8 அனுபவமே சிறந்த ஆசான் என்று சொல்வார்கள். கடவுளைப் பற்றி நாம் பல்வேறு கருத்துக்களைப் படிக்கலாம். மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஆனால், அவையெல்லாம் கடவுளைப் பற்றிய உண்மையான சுவையை நமக்குத் தராது. நாமே அனுபவிப்பது மட்டும் தான், கடவுளை முழுமையாக சுவைப்பதற்கு உதவியாக இருக்கும் என்று திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார். திருப்பாடல் ஆசிரியர் கடவுளை முழுமையாக தன்னுடை வாழ்வில் அனுபவித்தவர். கடவுளின் அன்பையும், அருகாமையையும், உடனிருப்பையும் சுவைத்தவர். தாமஸ் அக்குவினாஸ் மிகப்பெரிய இறையியல் அறிஞர். கடவுளைப் பற்றி பல்வேறு மிகச்சிறந்த புத்தகங்களை எழுதியிருக்கிறார். அவர் ஒருமுறை திருப்பலியில், கடவுள் அனுபவத்தால் ஆட்கொள்ளப்பட்டார். அந்த அனுபவத்திற்குப் பிறகு அவர் சொன்னார்: ”கடவுள் அனுபவத்தைப்பற்றி இவ்வளவு நாட்கள் நான் எழுதிய புத்தகங்கள் எல்லாம் தூசுக்கு சமம் என்று நினைக்கிறேன்”. ஆம், கடவுள் அனுபவம் வெறும்...

கடவுளின் அன்பு

யோவான் நற்செய்தியாளர் அன்பு என்கிற வார்த்தைக்கு அதிக அழுத்தம் தருகிறார். அது கடவுளின் அன்பாக இருக்கட்டும். இயேசு மக்கள் மீது காட்டுகின்ற அன்பாக இருக்கட்டும். அதேபோல, தனது நற்செய்தியின் சிந்தனையாக, மக்கள் கடவுளின் அன்பைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எழுதுவதாக இருக்கட்டும். அன்பே அவரது நற்செய்தியின் அடிப்படையாக இருக்கிறது. அன்பிற்கு அதிக அழுத்தம் கொடுக்கிறார். ஆனால், நாம் வாழக்கூய இந்த உலகத்தில் அன்பு என்கிற வார்த்தை தவறாக திரித்துப்பயன்படுகிறது. அன்பின் ஆழம் தெரியாமல், அன்பின் மகத்துவம் புரியாமல், அன்பின் அர்த்தமே அறியாமல் அன்பு பார்க்கப்படுவது, சிதைக்கப்படுவது வேதனையிலும் வேதனை. உண்மையான அன்பை இந்த உலகத்தில் பார்ப்பதும் அரிதாக இருக்கிறது. எதிர்பார்க்கின்ற அன்பு தான் அதிகமாக காண முடிகிறது. என்னை அன்பு செய்தால் நான் அன்பு செய்வேன், என்று கைம்மாறு கருதுகிற அன்புதான் அதிகம். எதிர்பார்ப்பில்லா அன்பு அரிது. ஆனால், கடவுளின் அன்பு எதிர்பார்ப்பில்லாத அன்பு. கடவுள்தன்மையில் இருந்தாலும், மனிதர்களை அன்பு...