இயேசுவின் திரு இதயம் !
இன்று நாம் இயேசுவின் திரு இதயத்துக்கு விழா எடுக்கிறோம். இதயம் என்பது அன்பின் அடையாளம். பரிவின் வெளிப்பாடு. இயேசு பரிவும், கனிவும் நிறைந்த இதயத்தவராக இருந்தார். எனவேதான், என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள், நான் இதயத்தில் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன் (மத் 11:29) என்று மொழிந்தார். பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்களின் இதயம் கல்லானதாக மாறிவிட்டதாக, யாவே இறைவன் குறைப்பட்டார். எனவேதான், கல்லான இதயத்தை மாற்றிவிட்டு, கனிவான இதயம் தருவதாக எசேக்கியேல் இறைவாக்கினர் வழியாக வாக்களித்தார். அந்த வாக்குறுதி இயேசுவின் திரு இதயத்தில் நிறைவு பெற்றது. இயேசுவின் இதயம் ஏழைகள், பாவிகள் என ஒதுக்கப்பட்டோர், ஊனமுற்றோர், கைம்பெண்கள், ஆதரவற்றோர் போன்ற ஓரங்கட்டப்பட்ட அனைவருக்காகவும் துடித்தது, அழுதது, பரிவு கொண்டது. அந்த இதயம் இன்றும் நம்மீதும் பரிவு கொள்கின்றது. நமது குறைபாடுகள், பாவங்கள், குற்றங்கள் அனைத்தையும் ஒரு தாயின் இதயம் போன்று பாசத்துடன் பார்த்து, மன்னித்து நம்மை ஏற்றுக்கொள்கிறது. அந்த இதயத்துக்காக நாம் நன்றி கூறி,...