நெருக்கமாகப் பின்பற்ற (லூக்கா 5 : 27-32)
இயேசு லேவியைத் தன்னைப் பின்செல்லுமாறு அழைத்தது இன்றைய நற்செய்தியில் இடம்பெறுகின்றது. இயேசு பாவிகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறார், காணாமல் போன ஆட்டினைத் தேடி வருகிறார் என்பதை மட்டுமன்று, பாவியெனக் கருதப்பட்ட லேவி எவ்வாறு இயேசுவைப் பின்பற்றினார் என்பதே இத்தவக்காலத் தொடக்கத்திலிருக்கும் நமக்கான பாடம். முதல் சீடர்களை அழைத்த போதும் லேவியைப் போன்று, “அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்ந்தார்கள்” என்பதை அறிந்து கொள்ள முடியும். லேவி இஸ்ரயேல் மக்களிடமிருந்து அநியாயமாக வரிவசூலித்து உரோமை அரசுக்கு அளித்ததால் பாவியெனக் கருதப்பட்டார். மொத்தத்தில் அனைவரும் அவரை ஒதுக்கி வைத்தனர். அவரை எதிரியாகக் கூட கருதக் கூடாது என்பதில் தெளிவாயிருந்து அவரைப் பாவி என்று முத்திரை குத்தினர். இன்றும் நம்மில் சிலரை ஆன்டி-இந்தியன்;, சமூக விரோதிகள் என்று முத்திரை குத்துவது யூதர்களின் மனநிலையே. இப்படி அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்படுபவரையே ஆண்டவர் அழைக்கின்றார். அவர்களுடைய வீட்டிற்குச் சென்று விருந்து உண்ணுகின்றார். இதன் காரணம் லேவி இயேசுவைப் பின்பற்ற தான் பற்றியிருந்த...