நான் எதற்கும் அஞ்சிடேன்
திருப்பாடல்130: 1 – 2, 3 – 4, 5 – 6, 7 – 8 குற்றங்களைச் செய்துவிட்ட ஒரு மனிதனின் உள்ளத்திலிருந்து, கடவுளின் இரக்கத்திற்காக ஏங்கக்கூடிய பாடல் தான் இந்த திருப்பாடல். கடவுள் செய்திருக்கிற எல்லா நன்மைகளையும் மறந்து, தவறு செய்துவிட்டு, அந்த தவறை நினைத்து மீண்டும், மீண்டுமாக வருந்தக்கூடிய இந்த பாடல், ஏறக்குறைய நமது வாழ்வோடு இணைந்த ஒன்றாக இருக்கிறது. நாமும் கூட, நமது வாழ்க்கையில் கடவுளிடமிருந்து ஏராளமான நன்மைகளைப் பெற்றவர்கள். ஆனால், அந்த நன்றியுணர்வு சிறிது கூட இல்லாமல், கடவுளுக்கு எதிராக நாம் தவறு செய்கிறோம். மீண்டும் மீண்டுமாக அதே தவறைச் செய்து கொண்டிருக்கிறோம். இன்றைய நற்செய்தியில், கடவுள் எந்த அளவுக்கு நம்மீது மனமிரங்குகிறவராக இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். தன்னுடைய நண்பர் இலாசர் இறந்துவிட்ட செய்தியைக் கேட்டவுடன், அதிலும் குறிப்பாக இலாசர் இல்லாமல் அவருடைய உடன்பிறந்த சகோதரிகளின் வேதனையை முற்றிலுமாக உணர்ந்து,...