தூய ஆவியானவரின் வழிநடத்துதல்
திருத்தூதர்பணி 20: 28 – 38 எபேசு நகரிலிருந்து, மிலேத்துவிற்கு மூப்பர்களை அழைத்த பவுல், அவர்களுக்கு அறிவுரை கூறுகிறார். அங்கிருந்து தான், எருசலேம் செல்லவிருப்பதாகவும், இனிமேல் அவர்களை காண மாட்டேன் எனவும் சொல்கிறார். பவுலின் இந்த வார்த்தைகளை இயேசுவின் வார்த்தைகளோடு நாம் இணைத்துப் பார்க்கலாம். எருசலேம் செல்வது என்பது, இயேசுவுக்கு தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதாகும். எருசலேம் பயணம் எப்படி அமையப்போகிறது என்பது இயேசுவுக்கு நன்றாக தெரிந்திருந்தது. அதுதான், தன்னுடைய கடைசி பயணம் என்று அறிந்திருந்தார். அறிந்திருந்தார் என்பதைவிட, தூய ஆவியானவர் அவருக்கு உணர்த்தியிருந்தார். கிட்டத்தட்ட அதே போல ஒரு சூழ்நிலைதான், பவுலடியாரின் வாழ்விலும் நடைபெறுகிறது. எருசலேமுக்கு செல்கிற தன்னுடைய பயணம் பாடுகளின் பயணம் என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும். அவர் பலவிதமான பாடுகளை தாங்க வேண்டியிருக்கிறது என்பதை உணர்ந்திருந்தார். உணர்ந்திருந்தார் என்பதை விட, தூய ஆவியானவர் அவருக்கு வெளிப்படுத்தியிருந்தார். இறைத்திட்டத்திற்கு ஏற்ப நம்முடைய வாழ்க்கையை நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறபோது, தூய ஆவியானவர் நமக்கு...