Category: தேவ செய்தி

ஆண்டவரில் நாம் அகமகிழ்ந்தோம்

திருப்பாடல் 66: 1 – 3, 4 – 5, 6 – 7, 16, 20 இது ஒரு நன்றியின் திருப்பாடல் மட்டுமல்ல, கடவுளையும், அவரது மகிமையையும் போற்றிப்புகழக்கூடிய பாடலும் கூட. இது குறிப்பிட்ட சூழ்நிலையில் எழுதப்பட்ட பாடல அல்ல. பொதுவாக, கடவுளைப் போற்றுவதற்காக எழுதப்பட்ட பாடல். திருப்பாடல் ஆசிரியர், கடவுளது மேன்மையை உணர்ந்தவராக, தன்னுடைய உள்ளத்தின் நிறைவை இங்கே வார்த்தையாக வடிக்கின்றார். கடவுள் தன்னுடைய படைப்பின் தொடக்கத்திலும், இஸ்ரயேல் மக்களை வழிநடத்திய இடங்களிலெல்லாம் தன்னுடைய மாட்சிமையை வெளிப்படுத்திய தருணங்களையும் வியந்து பார்க்கிறார். இந்த திருப்பாடலின் முக்கியமான செய்தியாக, கடவுளுக்கு அஞ்சி நடப்பவர் எல்லாவிதமான ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்வார் என்று சொல்கிறார். கடவுள் யாருக்குச் சொந்தமானவர் என்று ஒரு யூதரிடத்தில் கேட்டால், தங்களுக்கு மட்டுமே என்று பதில் சொல்வார். ஆனால், இந்த திருப்பாடலில், சற்று வித்தியாசமான பதில் நமக்குத் தரப்படுகிறது. கடவுள் யாருக்குச் சொந்தமானவர்? கடவுள் யாருக்குப் பதில் கொடுப்பார்? என்று...

இறைவனுடைய திருவுளம்

திருத்தூதர் பணி 16: 1 – 10 இறைவன் நம்மை வழிநடத்துகிறார். தன்னுடைய வழிநடத்துதலை அவர் எப்படி மானிடர்க்கு வெளிப்படுத்துகிறார்? இன்றைய வாசகம் நமக்கு அருமையான ஒரு எடுத்துக்காட்டை தருகிறது. பவுல் கனவு காண்கிறார். அவருடைய கனவில், மாசிதோனியர் ஒருவர், அவர்களுக்கு வந்து உதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறார். அந்த கனவை இறைத்திருவுளமாக ஏற்று, பவுலடியார் அங்கு செல்வதற்கு ஆயத்தமாகிறார். கடவுளின் திருவுளத்திற்காக உண்மையான உள்ளத்தோடு ஏங்குகிறபோது, இறைவன் நமக்கு நிச்சயம் வெளிப்படுத்துவார் என்கிற பவுலடியாரின் நம்பிக்கை இந்த பகுதியில் உறுதிப்படுத்தப்படுகிறது. விவிலியத்தில் கடவுள் தன்னை நோக்கி மன்றாடுகிற தன்னுடைய பிளள்ளைகளுக்கு பலவிதங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். மோசேக்கு நெருப்புப்புதரில் தன்னை வெளிப்படுத்தினார். இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர் வழியாக வெளிப்படுத்தினார். யோசேப்புக்கு கனவின் வழியில் இறைத்திருவுளத்தை வெளிப்படுத்தினார். இப்படி உதாரணங்களை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். இவர்கள் அனைவரிடத்திலும் ஒற்றுமை இருப்பதையும் நாம் பார்க்கலாம். இவர்கள் அனைவருமே, கடவுளுடைய திருவுளத்தை அறிவதற்காக ஏங்கிக்கொண்டிருந்தவர்கள். அந்த ஏக்கம்...

உயிர்ப்பு தரும் அர்ப்பணம்

திருத்தூதர் பணி 15: 22 – 31 இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்ததில், தூய பவுலடியார் எந்த அளவுக்கு முன்மதியோடும், அர்ப்பண உணர்வோடும் செயல்பட்டார் என்பதை, இன்றைய வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. ஒரு சிலர் மக்களை குழப்புகிற நேரத்தில், சரியானவிதத்தில் அதனைக் கவனித்து, அவர்களை தெளிவுபடுத்துவதற்காக, சரியான ஆட்களை அனுப்புகிறார். அதுமட்டுமல்லாது, தன்னுடைய கடிதத்தின் மூலமாகவும் சிறப்பாக அவர்களை வழிநடத்துகிறார். அவருடைய கடிதத்தை வாசித்துக் கேட்டவுடன், மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். அவர்களது விசுவாசம் உறுதிப்படுத்தப்படுகிறது. இறைமக்களை விசுவாசத்தில் கட்டியெழுப்ப, எவ்வளவுக்கு சாதாரண காரியங்களில் எல்லாம் கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பது, இங்கே வெளிப்படுத்தப்படுகிறது. கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி அறிவிப்பதில் தன்னுடைய நேரம் முழுவதையும் செலவிட்டார். எந்த அளவுக்கு கிறிஸ்தவர்களுக்கு எதிராக கிளம்பினாரோ, அதனை விட பல மடங்கு கிறிஸ்துவுக்காக உழைத்தார். பவுலின் இத்தகைய முழுமையான மாற்றத்திற்கான காரணத்தைத் தேடுகிறபோது, உயிர்ப்பு தான் நம்முடைய நினைவுக்கு வருகிறது. உயிர்த்த இயேசுவின் அனுபவம் அந்த...

இறைவன் வழங்கும் கொடைகள்

திருத்தூதர் பணி 1: 15 – 17, 20 – 26 இறைவன் நமக்கு பல அருள்வரங்களை வழங்குகிறார். ஆனால், அந்த அருள் நம்மிடம் தங்கியிருப்பதற்கு ஏற்ற வாழ்க்கையை நாம் வாழாவிட்டால், நிச்சயம் அது நம்மிடமிருந்து எடுக்கப்படும். அதுதான் யூதாசின் வாழ்க்கையில் நடந்திருப்பதாக, முதல் வாசகம் நமக்கு எடுத்துக்கூறுகிறது. யூதாஸ் அடிப்படையிலே எப்படிப்பட்டவன் என்பதை ஒருவர் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனாலும், அவனுக்கு கடவுளின் நிறைவான அருள் வழங்கப்பட்டது. இறைவனுடைய மகன், தனக்கு பின்னால் தொடரப்பட இருக்கிற புனிதமான பணிக்கான கருவியாக அவரைத் தேர்ந்தெடுக்கிறார். பெற்றுக்கொண்ட அழைப்பிற்கேற்ப வாழ வேண்டிய யூதாஸ், அதனை உதாசீனப்படுத்திவிடுகிறான். அந்த இழப்பு மற்றவர்களால் அவனுக்கு நேர்ந்ததல்ல. அவனுடைய நிலைக்கு அவன் வேறு யாரையும் குற்றம் சுமத்த முடியாது. அந்த இழப்பு மற்றொருவருக்கு ஆதாயமாக முடிகிறது. மத்தியா என்கிறவர் யூதாசின் இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். இறைவனுடைய அருளும், கொடைகளும் நமக்கு வழங்கப்படுகிறபோது, அதனை பெறுவதற்கு நாம் தயாராக இருக்க...

பவுலடியாரின் நம்பிக்கை வாழ்வு

திருத்தூதர் பணி 14: 19 – 28 தொடங்கியிருக்கிற பணியில், உறுதி கொண்ட கொள்கையில் பிடிப்போடு இருக்க வேண்டும் என்கிற வார்த்தைகளுக்கு முன்னோடியாக திகழக்கூடியவராக, பவுலடியார் இருப்பதை, இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. கிறிஸ்துவைப் பற்றி பல இடங்களுக்குச் சென்று அறிவித்து வந்த, பவுலடியாரின் போதனைகளுக்கு மக்கள் நடுவில் ஆதரவும் இருந்தது. எதிர்ப்பும் இருந்தது. எதிர்ப்பு என்பது சாதாரணமானதாக இல்லை. அவரை கொலை செய்ய செல்லும் அளவுக்கு இருந்தது. இன்றைய வாசகம் அப்படிப்பட்ட ஒரு நிகழ்வைத்தான் நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது. அந்தியோக்கியாவிலிருந்தும், இக்கோனியாவிலிருந்தும் யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுல் மேல் கல் எறிந்தார்கள். அவர் இறந்துவிட்டார் என்றும் அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அவர்கள் நினைத்தது போல பவுல் இறக்கவில்லை. இந்த நிகழ்ச்சி நம்மில் ஒருவருக்கு நடந்திருந்தால், நம்முடைய அடுத்த சிந்தனை என்னவாக இருக்கும்? இனிமேல் இந்த பணி எதற்கு என்று, சோர்ந்துவிடுவோம் அல்லது சற்று உடல் தேறுகிறவரையில் ஓய்வு...