ஆண்டவர் தம் உடன்படிக்கையை என்றும் நினைவிற்கொள்கின்றார்
திருப்பாடல் 105: 1 – 2, 3 – 4, 6 – 7, 8 – 9 ஆண்டவர் இஸ்ரயேல் மக்களோடு உடன்படிக்கை செய்துகொண்டார். தொடக்கநூல் 17: 7 ல் பார்க்கிறோம். ” தலைமுறை, தலைமுறையாக உன்னுடனும், உனக்குப்பின் வரும் உன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன். இதனால், உனக்கும், உனக்குப்பின் வரும், உன் வழிமரபினருக்கும் நான் கடவுளாக இருப்பேன்”. கடவுள் இஸ்ரயேல் மக்களோடு இந்த உடன்படிக்கையைச் செய்கிறார். இஸ்ரயேல் மக்கள் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வர வேண்டும். கடவுள் அவர்களுக்கு துணையாக இருப்பார் என்பதுதான் இந்த உடன்படிக்கை. இந்த உடன்படிக்கையை இஸ்ரயேல் மக்கள் மீறி பாவம் செய்தார்கள். அவர்கள் வேற்று தெய்வங்களை ஆராததித்தனர். எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து, பார்வோனின் அடக்குமுறையிலிருந்து விடுவித்த இறைவனை மறந்து, வேற்று தெய்வத்தை நாடினர். இதனால், அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். வேற்றுநாட்டினர் அவர்களை அடிமைப்படுத்தினர். யாவே இறைவன் அவர்களோடு இருந்தவரை, மற்றவர்களால் இஸ்ரயேல்...