Category: தேவ செய்தி

உம் ஆற்றலைவிட்டு நான் எங்கு செல்லக் கூடும்?

திருப்பாடல் 139: 7 – 8, 9 – 10, 11 – 12 இறைவன் நம்மை முழுமையாக அறிந்திருக்கிறார் என்பதுதான் இந்த திருப்பாடல் வழியாக ஆசிரியர் சொல்ல வருகிற செய்தியாகும். நம்மைப் பற்றி நாம் அறிந்ததை விட, நம்மைப்பற்றி நம்முடைய உறவுகள் அறிந்ததை விட, இறைவன் முழுமையாக அறிந்திருக்கிறார். நம்முடைய வாழ்க்கையில் நாம் எதைச்செய்தாலும் கடவுளின் பார்வையிலிருந்து தப்பிவிட முடியாது. ஏனென்றால், ஆண்டவர் எப்போதும் நம்மை உற்று நோக்கிக் கொண்டேயிருக்கிறார். தாவீது அரசர் பத்சேபாவோடு தவறு செய்கிறார். தான் செய்கிற தவறை யாரும் உணராதவாறு, அவருடைய கணவரை கொன்றுவிடுகிறார். அரசர் என்கிற தற்பெருமை, செய்கிற தவறை மற்றவர்களிடமிருந்து மறைத்த செருக்கு அவரிடத்தில் இருக்கிறது. தன்னைப்பற்றி கர்வம் கொள்கிறார். ஆனால், இறைவன் நாத்தான் இறைவாக்கினர் வாயிலாக அவருக்கு அழிவின் செய்தியை அறிவிக்கிறார். கடவுள் முன்னிலையில் தாவீது செய்த தவறு அவருக்கு உணர்த்தப்படுகிறது. இதுவரை தனக்கு நிகரில்லை என்ற மமதை கொண்டிருந்த தாவீது...

இதைவிட பெரியவற்றைக் காண்பீர்கள்…

புனித பர்த்தலொமேயு திருவிழா யோவான் 1:45-51 இறையேசுவில் இனியவா்களே! தூய பர்த்தலொமேயு திருவிழா திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் மேலும் நீயே ஆசியாக விளங்குவாய் போன்ற ஆசீர்வாதமான வார்த்தைகளைக் கேட்கும்போது நம் அகம் குளிர்கிறது. உடல்முழுவதும் ஊக்கமருந்து செலுத்தப்பட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதே போன்று இன்றைய நற்செய்தியில் வருகின்ற வார்த்தையும் நம்மை புல்லரிக்க வைக்கின்றது. அந்த வார்த்தை, “இதைவிட பெரியவற்றைக் காண்பீர்” இது புனித பர்த்தலமேயுக்கு வழங்கப்பட்ட ஆசீர்வாதமான வார்த்தை. இந்த ஆசீர்வாதமான வார்த்தைகளை நாம் பெறலாமா? கண்டிப்பாக பெறலாம். அதற்காக தூய பர்த்திலொமேயு எடுத்த இரண்டு முயற்சிகளை நாமும் எடுக்க வேண்டியதிருக்கிறது. முயற்சி 1: அவரோடு அமர்ந்தார் ஒரு சீடன் தன் குருவோடு அமர்ந்து அவர்...

நீங்கள் கண்டுபிடித்தது கடவுளையா? அலகையையா?

யோவான் 6:60-69 இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 20ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அன்புமிக்கவர்களே! உங்களுக்கு அலெக்சாண்ட்ரோ பற்றி நினைவு இருக்கிறதா? தூய மரிய கொரற்றி பற்றி நினைவு இருக்கிறதா? தூய மரிய கொரற்றியின் வாழ்க்கயைில் வருபவர் தான் அலெக்சான்ட்ரோ. நமக்கு நன்றாகத் தெரியும் தூய மரிய கொரற்றி ஓர் கன்னிகை, மறைசாட்சி. வாழ்ந்த காலம் கி.பி.1890-1902. இவர் 12 வயதில் புது நன்மை வாங்கிய பிறகு ஐந்து வாரங்கள் கூட ஆகவில்லை . அலெக்சாண்ட்ரோ ஸெரனெல்லா என்ற 18 வயது இளைஞன் தவறான வழியில் மரியாவை அடைய முனைந்தான் . மரியா பாவத்திற்கிணங்க மறுத்துவிட்டார் . ஒரு பாவம் செய்வதைவிட சாவதுமேல் என்பதை நன்கு தெரிந்திருந்தாள் . அலெக்சாண்ட்ரோ பாவத்துக்கு இணங்க மறுத்த...

கனி தரும் திராட்சைக் கொடி

திருப்பாடல் 128: 1b – 2, 3, 4, 5 திராட்சைக் கொடி வளமையைக் குறிக்கக்கூடிய சொல்லாக இருக்கிறது. இந்த வளமையை, இல்லத்தின் தலைவிக்கு ஆசிரியர் ஒப்பிடுகிறார். யாரெல்லாம் ஆண்டவர்க்கு அஞ்சி நடக்கிறார்களோ, அவர்கள் அனைவரும் வளமையாக இருப்பர் என்பது இங்கே நமக்குத் தரப்படுகிற செய்தி. இந்த உவமை இஸ்ரயேல் மக்களோடு ஒப்பிட்டுச் சொல்லப்படுகிற உவமையாக இருந்தாலும், ஆண்டவர்க்கு அஞ்சி வாழக்கூடிய பிள்ளைகள் அனைவருக்குமே இது நன்கு பொருந்துவதாக அமைந்துள்ளது. ஒரு குடும்பம் இறைவனால் முழுக்க ஆசீர்வதிக்கப்பட வேண்டுமென்றால், அந்த குடும்பத்தில் இருக்கிற தலைவர், தலைவி, குழந்தைகள் என அனைவரும் இறைவனின் முழுமையான பராமரிப்பைப் பெற வேண்டுமென்றால், அவர்கள் ஆண்டவர்க்கு அஞ்சி வாழக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அப்போது ஆண்டவர் தம் பார்வையில் அவர்கள் விலைமதிக்க முடியாதவர்களாக இருப்பர். வாழ்நாள் முழுவதும் எந்தவொரு தீங்கும் அவர்களை நெருங்காதிருக்கும். வாழ்வின் நிறைவை அவர்கள் எப்போதும் அனுபவிக்கக்கூடிய வகையில், அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வர். நம்முடைய குடும்பங்கள்...

என் நெஞ்சே! ஆண்டவரைப் போற்றிடு!

திருப்பாடல் 146: 5 – 6b, 6c – 7, 8 – 9a, 9b – 10 “நெஞ்சம் நிறைந்த நன்றி“ என்று பொதுவாகச் சொல்வார்கள். இதனுடைய பொருள் என்ன? வழக்கமாக நன்றி சொல்கிறபோது, வார்த்தைகளால் அலங்கரித்து நன்றி சொல்வார்கள். மிகப்பெரிய மேடையில், ஒருவர் நன்றி சொல்கிறபோது, அதனை ஒரு கடமையாகத்தான் சொல்வார். அதே நேரத்தில், ஒரு விழாவினை ஏற்பாடு செய்ய எல்லாமுமாக இருந்து, அந்த விழாவினைச் சிறப்பாக நடத்தி முடித்த மனிதரே, நன்றி சொல்ல வருகிறபோது, அது வெறும் வார்த்தைகளாக இருக்காது. நன்றிப்பெருக்கினால், தன்னுடைய ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்புக் கொடுத்த அனைவருக்கும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொல்லக்கூடிய நன்றியாக இருக்கும். அதுதான் உண்மையான நன்றி, ஆழமான நன்றி. இன்றைய திருப்பாடலில் ஆசிரியர் தன்னுடைய நெஞ்சத்தை “இறைவனைப் போற்றிடு“ என்று சொல்வது இதனைக் குறிக்கக்கூடிய வார்த்தையாகத்தான் இருக்கிறது. உள்ளத்தின் ஆழத்திலிருந்து இறைவனுக்கு எழுப்பக்கூடிய நன்றியாக இருக்கிறது. ஏனென்றால், அவருடைய புகழ்ச்சி...