பேரன்பும் மீட்பும் உடைய ஆண்டவரையே நம்பியிரு
திருப்பாடல் 130: 1 – 2, 3 – 4, 5 – 6, (7) வாழ்வின் இன்ப துன்ப வேளை, நெருக்கடி என எது வந்தாலும், ஆண்டவரை மட்டுமே நாம் நம்பியிருக்க வேண்டும் என்று ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார். இங்கு தாவீது அரசரின் அனுபவம் வெளிப்படுகிறது. அந்த அனுபவம் இனிமையானது அல்ல, கசப்பானது. அவர் மனிதர்களை நம்பினார். அதிகாரத்தை நம்பினார். தன்னால் எதையும் செய்ய முடியும் என்கிற பலத்தில் நம்பினார். அதற்கான விளைவை அவர் சந்தித்தார். அந்த அனுபவம் அவரை மற்றவர்களுக்கு பாடம் கற்றுத்தருகிற வகையில் அமைந்திருக்கிறது. அதுதான் இன்றைய திருப்பாடல். மனிதர்களாகிய நாம் யார் மீது நமது நம்பிக்கை வைக்கிறோம்? நாம் பணக்காரர்களாக இருந்தால், பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்கிறோம், பணத்தின் மீது நம்முடைய நம்பிக்கையை வைக்கிறோம். நாம் அதிகாரத்தில் இருக்கிறபோது, அதிகாரத்தால் என்னால் எதையும் செய்ய முடியும் என்று நினைக்கிறோம். சமுதாயத்தில் மிகப்பெரிய பதவியில் இருந்தால்,...