துன்புறும் மெசியா
21.02.14 – மாற்கு 8: 34 – 9: 1 நற்செய்தியாளர்கள் ஒவ்வொருவருமே தாங்கள் யாருக்கு நற்செய்தியை எழுதுகிறோமோ, அவர்களுக்கு ஏற்றவாறு இயேசுவை அறிமுகப்படுத்துகிறார்கள். மாற்கு நற்செய்தியாளர் பிற இனத்துக்கிறிஸ்தவர்கள், இயேசுவை ஏற்றுக்கொண்டதால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளான சூழ்நிலையில் அவர்களுக்கு இந்த நற்செய்தியை எழுதுகிறார். இயேசு ‘துன்புறும் மெசியா’ என்ற பார்வையில் அறிமுகப்படுத்துகிறார். இன்றைய நற்செய்திக்கு முந்தைய பகுதிகளில் பேதுரு தன்னை மெசியா என்பதை இயேசு ஏற்றுக்கொள்கிறார். ஆனால், அதே பேதுருவை, அடுத்த பகுதியில் கடிந்துகொள்கிறார். இதில்தான் இயேசு சிறிது மாறுபடுகிறார். இயேசு மெசியா தான். அதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. ஆனால், மற்றவர்கள் நினைப்பது போன்ற மெசியா அல்ல அவர். மாறாக, துன்புறும் மெசியா. துன்பத்தின் வழியாக இந்த உலகத்திற்கு மீட்பைக்கொண்டு வர இருக்கிற மெசியா. துன்பத்தை பொதுவாக கடவுளின் சாபமாக மக்கள் பாhத்தார்கள். அவர்களுக்கு மீட்பே இல்லை என்ற மனநிலையும் மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால், இயேசு துன்பத்தையும் அர்த்தமுள்ளதாக்க...