Category: Daily Manna

இறைவனே உண்மையான செல்வம்

யாக்கோபு 5: 1 – 6 நேரத்தை நமக்கு வழங்குகிறவர் கடவுள். எனவே, நேரத்தைப் பயன்படுத்துவதில், அவருடைய திருவுளத்திற்கு பணிந்தவர்களாக நாம் இருக்க வேண்டும். அதேபோல, செல்வத்திற்கு ஆதாரமாக இருக்கிறவர் ஆண்டவர். அதனைப் பயன்படுத்துவதிலும், அவருடைய திருவுளத்திற்கு பணிந்தவர்களாய் நடக்க வேண்டும். இதுதான், யாக்கோபு தன்னுடைய அறிவுரையில் நமக்குக் கூறுகிறார். லேவியர் 25 ம் அதிகாரம் தெளிவாகச் சொல்கிறது: மக்களும், நிலமும் கடவுளுக்குச் சொந்தமானது. எனவே, செல்வம் என்பது மற்றவர்களைச் சுரண்டிப்பெறுவதாகவோ அல்லது அடுத்தவர்களை அடிமைப்படுத்துவதாகவோ இருக்கக்கூடாது. ஏனெனில், அது நம்முடையது அல்ல. கடவுளுடையது அல்ல. நாமே கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்டு, அது எனக்குச் சொந்தம் என்று எப்படி உரிமைகோர முடியும்? யாக்கோபு இதனை வாய்மொழியாகவே சொல்கிறார். கடிதத்தின் வழியாக அல்ல. இதற்கு சில சான்றுகளை கொடுக்க முடியும். வழக்கமாக கடிதத்தில் இடம்பெறும், ”சகோதரர்களே” இந்த பகுதியில் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக, நேரடியாகவே ”செல்வர்களே, சற்றுக் கேளுங்கள்” என்று தொடங்குகிறார். இது அறிவுரையாக...

இறைவனுக்கு கீழ்ப்படிவோம்

யாக்கோபு 4: 13 – 17 யாக்கோபு இந்த அறிவுரையை யாருக்குக் கூறுகிறார்? ”இன்றோ நாளையோ குறிப்பிட்ட நகரத்துக்குப் போய் அங்கே ஓராண்டு தங்கி வாணிகம் செய்வோம். பணம் ஈட்டுவோம்” (4: 13). இந்த இறைவார்த்தை, இந்த அறிவுரை வணிகர்களுக்குச் சொல்லப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறது. இவர்களுக்கு மட்டும் என்று நாம் மற்றவர்களை ஒதுக்கிவிடவும் முடியாது. வணிகர்களை மையமாக வைத்து, எல்லாருக்குமான அறிவுரையாகத்தான் நாம் பார்க்க வேண்டும். முதலில் வியாபாரம் செய்கிறவர், எப்போது போக வேண்டும்? என்பதை தீர்மானிக்கிறார். எங்கு செல்ல வேண்டும்? எத்தனை ஆண்டுகள் தங்க வேண்டும்? என்ன வாணிகம் செய்ய வேண்டும்? அதிலிருந்து எப்படி இலாபம் பெற வேண்டும்? என்று, வாணிகம் செய்வதற்கு அவர் திட்டமிடுகிறார். திட்டமிடுவது சரி தானே? ஒரு செயலைச் செய்கிறபோது, சரியான திட்டமிடல் வேண்டும் என்று நாம் தான் சொல்கிறோம். அப்படியென்றால், யாக்கோபு என்ன தான் சொல்ல வருகிறார்? யாக்கோபு திட்டமிடுதலைக் குறை சொல்லவில்லை. நாம் எப்படி...

வேர்களைத்தேடி…

மத்தேயு 16 : 13- 20 அதிகாரம் என்பது ஆட்டுவித்து ஒடுக்குவதற்கல்ல! அன்போடு வழிநடத்துவதற்கு! அதிகாரம் என்பது வாட்டி வதைப்பதற்கல்;ல! வாஞ்சையோடு இருப்பதற்கு! அதிகாரம் என்பது திட்டித் தீர்ப்பதற்கல்ல! தீர்க்கமான திட்டமிடுவதற்கு! இன்றைய நாள் நம் தாய்த் திருஅவையின் முதல் திருத்தந்தை பேதுருவின் தலைமைப்பீடத்தினை நினைவு கூர்ந்து பெருமையோடு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந் நாளினை நாம் உண்மையிலேயே கொண்டாட வேண்டுமா என்ற கேள்வி பலரின் எண்ணத்தில் உதிப்பது இயற்கையே. ஆனால் இன்று, இக்கட்டான காலகட்டத்தில் இன்னும் சிறப்பாக கொண்டாடக் கடமைப்பட்டிருக்கிறோம். காரணம், வெளியிலிருந்து வரும் பிரச்சனையைக் காட்டிலும் கிறிஸ்தவர்களுக்குள் இருக்கின்ற சவால்கள் மிக அதிகம். இன்று நம் வேர்களை மறந்து வாழும் கிறிஸ்தவர்களுக்கு மத்தியில் சிலர் நம் வேர்களை திட்டமிட்டு மூடி மறைக்கிறார்கள். வெட்டி அழிக்கிறார்கள். நம் வேர்களைத் தேடி இன்றைய கிறிஸ்தவர்களை அழைத்துச் சென்றாலே பல பிரிவினை சபையைச் சார்ந்தவர்களுக்கு உண்மை எது? என புலப்பட்டுவிடும். அவர்களின் சாயம் வெளுத்து...

நம்பிக்கையை அதிகமாக்கும்….

மாற்கு 9 : 14 – 21 நம்பிக்கையை அதிகமாக்கும்…. இன்றைய நற்செய்தி நம் இறைநம்பிக்கைக்கு வலுவூட்டும் விதமாக அமைந்திருக்கின்றது. இச்சிறுவனைப் பிடித்துள்ள பேய் ஆற்றல் உள்ளது. அது அவனைக் கீழே தள்ளுகிறது. அவன் நுரை தள்ளிப் பல்லைக் கடிக்கிறான். அவனது உடலும் விறைத்துப் போகின்றது. இப்பேயின் ஆற்றலின் முன் சீடர்களின் ஆற்றல் குறைவாகவே இருக்கின்றது. இக்குறைவிற்கு காரணம் என்ன? என்றும், இந்த சிறுவனை எப்படி நிறைவாக்க முடியும்? என்றும் ஆண்டவர் இயேசு தெளிவுபடுத்துகிறார். இன்றைய சீடர்களாகிய நமக்கு இது எப்படி முக்கியம் என்றால் நாம் பிறருக்கு பிடித்திருக்கின்ற தீய சக்திகளை விரட்டுவதைக் காட்டிலும் நம்மிடம் நம்மைச் சார்ந்து இருக்கின்ற தீய சக்திகளை விரட்டியடிக்க வேண்டும். “என்னிடம் நம்பிக்கைக் கொள்வோர் என்னைவிடப் பெரிய காரியங்களைச் செய்வார்” ( யோவான் 14:12) என்ற இறை வார்த்தையை முதலில் நம்ப வேண்டும். நம்பிக்கை என்பது, ‘என்னால் இயலாது, இறைவா’ உம்மால் மட்டுமே எல்லாம் இயலும்...

கடவுளை அன்பு செய்வோம்

இயேசு தன்னோடு மூன்று சீடர்களை அழைத்துக்கொண்டு உயரமான ஒரு மலைக்குச் செல்கிறார். அந்த மூன்று சீடர்கள் முறையே, பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான். இயேசுவைப் பின்தொடர்ந்த சீடர்கள் பலர் இருந்தாலும், அவர்களில் பன்னிரென்டுபேரை தன்னோடு இருப்பதற்காக சிறப்பாகத் தேர்ந்தெடுக்கிறார். அதிலும் சிறப்பாக, மூன்று பேரை தன்னோடு முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார். அந்த மூன்று சீடர்களின் இயல்பு என்ன? ஏன் அவர்கள் மீது இயேசுவுக்கு இவ்வளவு நம்பிக்கை. விவிலியத்திலே இதற்கு தெளிவான விளக்கம் காணப்படவில்லை என்றாலும், ஓரளவு நம்மால் அதற்கான பதிலைப் பெற்றுக்கொள்ள முடியும். இயேசு முக்கியமான இடங்களுக்கு அவர்களை அழைத்துச்சென்றது, அவர்கள் பாவமே செய்யாதவர்கள் என்பதால் அல்ல. அவர்களும் பலவீனர்கள் தான். பேதுரு இயேசுவை மறுதலிக்கிறார். யாக்கோபு மற்றும் யோவான் இயேசுவோடு அதிகாரத்தில் இருப்பதற்கு தங்களது தாயின் மூலம் பரிந்துரைக்கச் செய்கிறார்கள். ஆனாலும், அவர்களை இயேசு தேர்ந்தெடுத்ததற்கு காரணம், அவர்களின் அன்பு. அவர்கள் இயேசுவை முழுமையாக அன்பு செய்தார்கள். அவர்களுடைய...