Category: Daily Manna

இறைவன் நம்மோடு இருக்கிறார்

திருத்தூதர் பணி 18: 9 – 18 கடவுளுடைய பணியை நாம் செய்கிறபோது, எதற்கும் அஞ்சத்தேவையில்லை. இறைவன் நம்மோடு இருக்கிறார் என்கிற ஆழமான செய்தியை, இன்றைய வாசகம் நமக்குத் தருகிறது. கடவுளின் பணி என்ன? நன்மை செய்வது கடவுளின் பணி. ஏனென்றால், கடவுள் நன்மையே உருவானவர். அப்படி நன்மை செய்கிறபோது, நிச்சயம் தீமையின் மொத்த உருவமாக இருக்கிற அலகை, நமக்கு பல சோதனைகளைத் தருவதற்கு தனக்கு சாதகமாக இருக்கிறவர்களை வைத்து, நம்மை பயமுறுத்தும். அப்படிப்பட்ட தருணத்தில், ஆண்டவர் நம்மோடு இருப்பதாக நமக்கு வாக்குறுதி கொடுக்கிறார். பவுல் கொரிந்து நகரில் ஆண்டவருடைய வார்த்தையை அறிவித்தபோது, அவருக்கு பலவிதமான நெருக்கடிகள் யூதர்களிடமிருந்து வரத் தொடங்கியது. அதற்கு முன்னரே, ஆண்டவர் காட்சியில் பவுலுக்கு தோன்றி, உறுதியாகவும், துணிவோடும் இருக்குமாறு பணிக்கிறார். கடவுளைப் பணியைச் செய்வது என்பது சாதாரண காரியம் அல்ல. பலவிதமான போராட்டங்களும், நெருக்கடிகளும் நிறைந்த வாழ்வுதான், கிறிஸ்துவுக்காக வாழும் வாழ்வு. இயேசு இந்த உலகத்தில்...

தன்னலமில்லாத வாழ்க்கை

திருத்தூதர் பணி 18: 1 – 8 ”உங்கள் அழிவுக்கு நீங்களே பொறுப்பு. இனிமேல் நான் பிற இனத்தாரிடம் செல்கிறேன்” என்று, பிற இனத்து மக்கள் நடுவில் தூய பவுல் கடவுளுடைய வார்த்தையை அறிவிக்கச் செல்கிறார். இதற்கு முந்தைய பகுதியில் பவுல் ஏதேன்ஸ் நகரில் நற்செய்தி அறிவித்ததைப் பார்த்தோம். ஏதேன்ஸ் நகரில் பவுல் துன்புறுத்தப்பட்டாரா? என்பது தெரியவில்லை. ஆனால், அங்கு அவர் சரியான முறையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது உறுதி. அங்கிருந்து புறப்பட்டு கொரிந்து நகருக்கு வருகை தருகிறார். கொரிந்து நகரம் செல்வமிக்கதும், பிரமாண்டமானதுமாகும். பவுல் மிகச்சிறந்த கல்விமானாக இருந்தாலும், கூடாரம் செய்வது அவரது தொழில். அதனை அவர் ஏளனமாக நினைக்கவில்லை. தான் இவ்வளவு படித்திருக்கிறேன், கிறிஸ்துவால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன், கடவுள் கொடுத்த வல்லமையைப் பயன்படுத்தி புதுமைகளைச் செய்கிறேன். எனவே, என்னோடு இருக்கிறவர்கள் எனக்கு செய்ய வேண்டிய காரியங்களைச் செய்ய வேண்டும் என்று, அவர் சோம்பேறித்தனம் படவோ, அடுத்தவரின் பணத்தில் தன்னுடைய வாழ்க்கையை நடத்தவோ...

அர்ப்பண வாழ்வு

திருத்தூதர் பணி 17: 15, 22 – 18: 1 திருத்தூதர் பவுல் முதன்முறையாக ஏதேன்ஸ் நகருக்குள் நுழைகிறார். கிறிஸ்தவ மறைப்பரப்பு பணியாளர்களிலேயே இவர் தான், முதலாவதாக இந்த நகரத்திற்குள் நுழைகிறார் என்று கூட சொல்லலாம். இந்த முதல் பயணம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது என்று நாம் சொல்லிவிட முடியாது. ஆனால், ஒரு சிலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதை நாம்பார்க்கிறோம். ”சிலர் நம்பிக்கை கொண்டு அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்” (17: 34). ஏதேன்ஸ் மிகப் பிரபலமான நகரம் என்பது நாம் அறிந்ததே. பலத்திற்கும், அறிவாற்றலுக்கும் பெயர் போனது. மிகப்பெரிய அறிவாளிகளும், அரசர்களும் இங்கிருந்து வந்திருக்க வேண்டும். அல்லது ஏதேன்ஸ் தொடர்புடையவர்களாக இருந்திருக்க வேண்டும். கிறிஸ்து பிறப்பிற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர், எகிப்திய காலனியாக இருந்து வந்தது. “மினர்வா“ என்கிற கிரேக்க கடவுளின் பெயரால், இது ஏதேன்ஸ் என்கிற பெயர் பெற்றது. பவுல் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அவர்களுக்கு, அவர்களுடைய பிண்ணனியிலே அறிவிக்கிறார்....

இறைவனின் திருவுளம்

திருத்தூதர் பணிகள் 16: 22 – 34 கடவுளுடைய வழிகள் அற்புதமானவை. நாம் நம்ப முடியாதவை. பல நேரங்களில், நம்முடைய மனித பார்வையில் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஆனால், காலம் கனிகிறபோது, நாம் கடவுளின் அன்பை உணர்ந்து மிகவும் வியப்படைகிறோம். கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம். அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருநாளும், நம்முடைய வாழ்வில் நடக்கிற நிகழ்வுகளை எண்ணிப்பார்த்து, ஏன்? ஏன்? என்று, பல ”ஏன்”களை கடவுளிடம் கேட்டு சளிப்படைந்திருக்கிறோம். பதில் அறியாது திணறியிருக்கிறோம். ஆனால், ஒரு கட்டத்தில், அதற்கான பதில் நமக்கு வழங்கப்படுகிறபோது, இறைவனின் அன்பை எண்ணிப்பார்த்து, நாம் நடந்து கொண்ட விதத்திற்கு வருத்தப்படுகிறோம். இன்றைய வாசகத்தில், கடவுளின் வழிகள், நாம் ஆச்சரியப்படக்கூடிய இருப்பதை நாம் புரிந்து கொள்ளலாம். பவுலும் அவரோடு இருந்த சீடர்களும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். சிறையில் இருக்கிறவர்கள் வாய்ப்பு கிடைக்கிறபோது, நிச்சயம் தப்பிப்பதற்கு முயற்சி எடுக்கிறவர்களாகத்தான் இருப்பர். பவுலுக்கும், சீடர்களுக்கும் இயற்கையே அப்படிப்பட்ட வாய்ப்பைக் கொடுத்தும் அவர்கள் தப்ப நினைக்கவில்லை. அவர்களின்...

அல்லேலூயா

திருப்பாடல் 149: 1 – 2, 3 – 4, 5 – 6, 9 திருப்பாடல் 149 வெற்றியின் திருப்பாடல் என்று சொல்லலாம். இஸ்ரயேல் மக்கள் தங்களது எதிரிகளை வென்று, மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறபோது எழுதப்பட்ட பாடலாக இது பார்க்கப்படுகின்றது. இந்த திருப்பாடலின் சிறப்பு, அல்லேலூயா என்கிற வார்த்தையில் தொடங்கி, அல்லேலூயா என்கிற வார்த்தையிலே முடிவடைகிறது. இன்றைக்கு கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களிடையே ”அல்லேலூயா” என்கிற வார்த்தை, ஏதோ பிரிந்து போன சகோதரர்கள் மட்டுமே பயன்படுத்துகிற வார்த்தை என்பது போன்ற, ஓர் எண்ணம் உள்ளத்தில் இருக்கிறது. அல்லேலூயா என்றால் என்ன? இது ஒரு குறிப்பிட்ட சபையினருக்கு மட்டும் தான் சொந்தமானதா? இந்த வார்த்தையை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பயன்படுத்தினால் அது சரியாக இருக்குமா? என்றெல்லாம் கேள்விகள் நமக்குள்ளாக எழுந்து மறைகிறது. அல்லேலூயா என்பது ஓர் எபிரேய வார்த்தை. “யா“ என்கிற வார்த்தை ”யாவே” இறைவனைக்குறிக்கக்கூடிய சொல். “இறைவன் போற்றப்படுவாராக” என்பது தான் இதனுடைய பொருள்....