Category: Daily Manna

திசை மாறா பயணம்

இயேசுவின் எருசலேம் நோக்கிய பயணத்தில் நடந்த ஒரு உறையாடலில் அவரைப் பின்தொடர்வதுபற்றிய சில கருத்துக்கள் இங்கே பரிமாரப்படுவதைப் பார்க்கிறோம். நிலை வாழ்வு பெற, எல்லோருமே எருசலேம் பயணத்தில் பங்குகொள்ள வேண்டும். “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” லூக் 9’23. ஆகவே, தப்பமுடியாது, தவிர்க்க முடியாது, மாற்று வழிகிடையாது. நீயும் நானும் விரும்புவதுபோல அப்பயணம் அமைவதில்லை. சில சமயங்களில் நாம் விரும்பாதவைகள் வசதி குறைவுகள் குறுக்கிடலாம். நம் வாழ்க்கைப் பயணத்தில் இவைகளை நாம் ஏற்று வாழத் தொடங்கும்போது இயேசுவோடு நாம் எருசலேம் பயணம் மேற்கொள்ளுகிறோம். இந்த எருசலேம் பயணத்தில் சில நேரங்களில் சில முடிவுகள் நம்மேல் சுமத்தப்படலாம். “இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்” (லூக் 9:60) மொத்தத்தில் எருசலேம் பயணம் ஒரு கலப்பையில் கை வைத்து உழுகின்ற சிறப்பான...

”கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள்” (யோவான் 1:51)

கடவுள் படைத்த படைப்புகளில் எல்லாம் உயர்ந்த படைப்பு மனிதரே என்று கூறி நாம் பெருமைப்படுகிறோம். ஆயினும் விவிலியம் தரும் செய்திப்படி, கடவுள் ”வானதூதர்களை”யும் படைத்தார். இவர்கள் கடவுளைப் புகழ்ந்து பாடுவர்; கடவுளின் தூதர்களாகச் செயல்படுவர். குறிப்பாக, மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகிய தூதர்களைத் திருச்சபை இன்று நினைவுகூர்கிறது. மிக்கேல் தீய சக்திகளை எதிர்த்துப் போராடி மக்களைக் காப்பவராகச் சித்தரிக்கப்படுகிறார் (காண்க: திவெ 12:7-12). கபிரியேல் மரியாவை அணுகி, கடவுள் மனிதராக உலகில் பிறப்பார் என்னும் செய்தியை அறிவிக்கிறார் (காண்க: லூக் 1:26-38); இரபேல் (தோபி 12:14-15) நலமளிப்பவராக வருகிறார். கடவுளின் படைப்பு மனிதரின் கண்களுக்குத் தெரிகின்றவை மட்டுமல்ல, நம் புலன்களுக்கு எட்டாதவையும் அவருடைய படைப்பாக உள்ளன என நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். வானதூதர்களும் கடவுளைச் சார்ந்தே உள்ளனர் என்பதையும் திருச்சபை கற்பிக்கிறது. கடவுளின் விருப்பத்தைச் செயல்படுத்துவதே வானதூதர்களின் பணி. அதுபோலவே, மனிதரும் செயல்பட அழைக்கப்படுகிறார்கள். வானதூதர்கள் என்னும் உருவகம் வழியாக இன்னொரு...

”இயேசு, ‘நமக்கு எதிராக இராதவர் நமக்குச் சார்பாக இருக்கிறார்’ என்றார்” (லூக்கா 9:50)

இன்றைய சிந்தனை இயேசு தீய ஆவிகளிடமிருந்து பிணியாளர்களுக்கு விடுதலை அளித்தார் என்னும் செய்தியை நற்செய்தி நூல்கள் பல தருணங்களில் குறிப்பிடுகின்றன. தீய ஆவிகளை ஓட்டுகின்ற அதிகாரத்தையும் வல்லமையையும் இயேசு தம் சீடர்களுக்கும் கொடுத்தார். அவர்கள் அந்த அதிகாரம் தமக்கு மட்டுமே உண்டு என நினைத்த தருணத்தில் இயேசு அவர்களது தப்பான கருத்தைத் திருத்துகிறார். சீடர்கள் ”நம்மைச் சாராதவர்” என ஒரு சிலரை ஒதுக்குவது சரியல்ல என இயேசு சுட்டிக் காட்டுகிறார் (லூக் 9:51). சீடர்கள் கருத்துப்படி, அவர்களுக்கு இயேசு தனி அதிகாரம் கொடுத்ததால் அவர்களுக்கு மட்டுமே தீய ஆவிகளைத் துரத்துவதற்கு உரிமை உண்டு. அவர்களது குழுவைச் சாராத வேறு எவரும் இயேசுவின் பெயரால் அதிசய செயல்களைச் செய்வது முறையல்ல. இயேசு இக்கருத்தை ஏற்கவில்லை. கடவுள் வழங்குகின்ற அதிகாரமும் சக்தியும் குறிப்பிட்ட எல்லைகளுக்குள்ளே அடக்கப்பட வேண்டும் எனக் கோருவது முறையல்ல என இயேசு காட்டுகிறார். கடவுள் தாம் விரும்பிய மனிதருக்குத் தம் விருப்பப்படியே...

அன்பே அனைத்திற்கும் ஆணி வேர்

கிறிஸ்தவத்தின் ஆணிவேராக, அடித்தளமாக இருப்பது நிச்சயம் அன்பு ஒன்று தான். அன்பே கடவுள். கடவுள் அன்பின் வடிவமாக இருக்கிறார். கடவுள் மனிதனைப்படைத்தது அன்பின் வெளிப்பாடுதான். இயேசு இந்த உலகத்திற்கு வந்ததும் அன்பின் அடையாளம் தான். இந்த உலகத்திலே தேவையில் இருக்கிற மனிதர்கள் அனைவரும் இயேசுவை நாடி வந்தபோது, அவர்களுக்கு உதவி செய்ததும், இந்த அன்பின் அடிப்படையில் தான். ஆக, அன்பே கிறிஸ்தவத்தின் அடித்தளம். இரக்கம், மன்னிப்பு, ஈகைகுணம் போன்றவையெல்லாம், அன்பின் ஆணிவேரிலிருந்து படரக்கூடியவை. இன்றைய நற்செய்தியில் அன்பின் ஆணி வேரிலிருந்து புறப்படக்கூடிய மற்றவர்களுக்கு இரங்குகிற குணத்தின் முக்கியத்துவத்தை இயேசு வலியுறுத்துகிறார். கடவுள் நம்மைப்பார்த்து ”நன்று, நன்று நம்பிக்கைக்குரிய நல்ல ஊழியனே” என்று சொல்வதற்கு நாம் மிகப்பெரிய காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதல்ல. மாறாக, சிறிய, சிறிய காரியங்களை நேர்த்தியாகச் செய்தாலே, நாம் சிறப்பைப் பெற்றுவிடலாம். மற்றவர்களுக்கு உதவுவது என்பது இதனுடைய சிறப்பாக இருக்கிறது. உதவி செய்வதற்கு நாம் எல்கை ஒன்றும் வைக்கத்...

”இயேசு செய்த யாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர்” (லூக்கா 9:43)

இயேசு பல புதுமைகள் செய்து மக்களின் பிணிகளைப் போக்கினார்; அவர்களுக்கு நலம் கொணர்ந்தார். அதே பணியைத் தொடர்ந்து ஆற்றும் பொறுப்பையும் அதற்கான வல்லமையையும் அவர் தம் சீடர்களுக்கு அளித்தார் (காண்க: லூக் 9:1-6). வலிப்பு நோய்க்கு ஆளான ஒரு சிறுவனை இயேசுவின் சீடர்களால் குணப்படுத்த இயலவில்லை. ஆனால் இயேசு அச்சிறுவனின் பிணியை நீக்கி அவனுடைய தந்தையிடம் அவனை ஒப்படைத்தார் (லூக் 9:37-42). இந்த அதிசயம் மக்களின் கண்முன்னால் நிகழ்ந்ததும் ”அவர்கள் எல்லாரும் கடவுளின் மாண்பைக் கண்டு மலைத்துநின்றார்கள்” என லூக்கா குறிப்பிடுகிறார் (லூக் 9:43அ). இயேசு புரிந்த அதிசய செயல்கள் மக்களிடையேயும் சீடர்களிடையேயும் பெரும் வியப்பை ஏற்படுத்தின (லூக் 9:43ஆ). மலைப்பும் வியப்பும் எல்லாரையும் ஆட்கொண்டதைக் குறிப்பிட்ட உடனேயே, இயேசு தாம் துன்புறப்போவதாக இன்னுமொரு முறை முன்னறிவித்தது பற்றி லூக்கா பேசுகிறார். தீய சக்திகளை அடக்குகின்ற அதிகாரம் இயேசுவுக்கு இருக்கிறது; மக்களின் பிணி போக்குகின்ற வல்லமையும் அவரிடம் உண்டு. ஆனால் இத்தகு...