Category: Daily Manna

எதிர்பார்ப்பு இல்லாத உதவி

இயேசு கைம்மாறு, வெகுமதி பற்றி பேசும்போது, இந்த உலகம் சார்ந்த பொருட்செல்வத்தைப்பற்றிப் பேசவில்லை. பழைய ஏற்பாட்டில், செல்வமும், வெகுமதியும் பெற்றவர்கள், நல்லவர்களாகக் கருதப்பட்டனர். அதிகமான குழந்தைச் செல்வத்தைப் பெற்றவர்கள், அறுவடை நிறைவாகப் பெற்றவர்கள் அனைவருமே, கடவுளின் ஆசீரைப் பெற்றவர்களாக மக்கள் நினைத்தனர். யோபு புத்தகத்திலும், இந்த கருத்துதான் மீண்டும், மீண்டும் வலிறுத்தப்படுகிறது. யோபு தான் தவறு செய்யவில்லை என்று தன்னுடைய நண்பர்களிடத்தில் சொன்னாலும், அவருடைய நண்பர்கள் அந்த கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், நல்லவர்கள் என்றுமே கடவுளின் அருளைப்பெற்று வாழ்வர் என்பது அவருடைய நண்பர்களின் வாதம். இயேசு அப்படிப்பட்ட கருத்தை நிச்சயம் சொல்லியிருக்க மாட்டார். ஏனென்றால், ஏழைகளோடு, ஒடுக்கப்பட்டவர்களோடு, அடிமைப்படுத்தப்பட்டவர்களோடு நெருங்கிப்பழகியவர் இயேசு கிறிஸ்து. அப்படியானால், இயேசு சொன்ன செய்தியின் பொருள் என்ன? இயேசு கைம்மாறு என்று எதனைக் குறிப்பிடுகிறார்? மக்கள் எதையும், நாம் இப்போது கொடுத்தால், பிற்காலத்தில் கடவுள் நமக்குக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்போடு கொடுத்தால், அவர்களுக்குரிய கைம்மாறு ஏற்கெனவே கிடைத்துவிட்டது...

இறையரசின் மதிப்பீடுகளை வாழ முற்படுவோம்

தொடக்கத்தில் திருச்சட்டம் என்பது யூதர்களைப்பொறுத்தவரையில் பத்துக்கட்டளைகளும், முதல் ஐந்து நூல்களும் தான். ஆனால், கி.மு 4 நம் நூற்றாண்டில் மறைநூல் அறிஞர்கள் என்ற புதிய பிரிவினர் தோன்றி இந்த சட்டங்களுக்கு விளக்கம் கொடுத்து, அதையும் முக்கியமானதாக சட்டத்திற்கு இணையானதாக சித்தரிக்கிறார்கள். தொடக்கத்தில் வெறும் வாய்மொழியாக சொல்லப்பட்ட இந்த விளக்க உரைகள் பிற்காலத்தில் எழுத்து வடிவம் பெறுகிறது. இந்த திருச்சட்ட விளக்கநூலுக்கு மிஷ்னா என்பது பெயர். இந்த ஒழுங்குமுறைகளைப்பற்றி விவாதம்தான் இன்றைய நற்செய்தி நூலில் நாம் வாசிப்பது ஆகும். இன்றைய நற்செய்தியிலே கைகளை கழுவுவது மற்றும் பாத்திரங்களை கழுவுவது தொடர்பான ஒழுங்குகளை சீடர்கள் மீறிவிட்டதாகக்குற்றம் சாட்டப்படுகிறார்கள். யூதர்களைப்பொறுத்தவரையில் தூய்மை என்பது வெறும் சுகாதாரம் தொடர்பானது மட்டுமல்ல, அது ஒரு மதச்சடங்கு. சாப்பிடுவதற்கு முன்னதாக செய்யவேண்டியது, வீதிகளுக்குச்சென்று விட்டு வீடு திரும்பும்போது செய்ய வேண்டியது என பல்வேறு ஒழுங்குமுறைகளை அவர்கள் வகுத்திருந்தனர். அந்த சடங்குகளை செய்ய மறப்பதும், மறுப்பதும் கடவுளையே அவமதிக்கின்ற செயல் என்கிற...

கொடுங்கள்! கொடுக்கப்படுவீர்கள்!

இயேசு படகைவிட்டு இறங்கிய உடனே, மிகப்பெரிய கூட்டம் இயேசுவைத்தேடி வருகிறது. வந்திருந்தவர்கள் அனைவருமே இயேசுவிடமிருந்து பெற்றுக்கொள்வதற்காக வந்தவர்கள். இன்னும் கடினமாகச் சொல்ல வேண்டுமென்றால், அவர்கள் இயேசுவைப் பயன்படுத்துகிறவர்கள். அவர் சொல்வது அவர்கள் உள்ளத்தை சென்றடைந்ததா? இல்லையா? தெரியவில்லை. ஆனால், இயேசுவிடமிருந்து எதையாவது பெற்றுக்கொள்ள வேண்டும், என்று தங்களத தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக வந்திருக்கிறவர்கள் தான். வந்திருக்கிறவர்களில் யாரும் இயேசுவுக்கு கொடுக்க வேண்டும் என்று வந்ததாகத் தெரியவில்லை. உண்மைதான். ஒரு சில தேவைகள் கடவுளால் மட்டும்தான் நிறைவேற்றித்தர முடியும். கடவுள் நமக்குக் கொடுப்பதற்கு மகிழ்ச்சியடைகிறவர் தான். கடவுளிடமிருந்து மட்டும்தான் நாம் எதையும் பெற்றுக்கொள்ள முடியும். இருந்தபோதிலும், கொடுப்பதும் அன்பின் அடையாளம் தான். இயேசுவிடமிருந்து ஏராளமானவற்றைப் பெற்றிருந்தும், இயேசுவுக்கு துன்பம் வந்தபோது, அவரோடு யாரும் இல்லை. இது, இயேசுவை மற்றவர்கள் வெறுமனே பயன்படுத்தினார்கள் என்பதாகத்தான் நாம் எண்ண முடியும். இன்றைக்கு ஆலயத்திற்கு எத்தனையோ பேர் வருகிறோம். வருகிற அனைவருமே, கடவுளிடமிருந்து பெற்றுக்கொள்ளத்தான் வருகிறோமே ஒழிய, கடவுளுக்கு...

எது உண்மை ஞானம் ?

சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாடில் வழி வந்த கிரேக்கர்கள் ஞானத்துக்கும், அறிவாற்றலுக்கும் பெரிதும் முக்கியத்துவம் அளித்தார்கள். பெரிய சிந்தனையாளர்கள், ஞானிகள் அவர்கள் மத்தியிலே வாழ்ந்தனர். ஆனால், “இவ்வுலக ஞானம் கடவுள் முன் மடமையாய் உள்ளது” என்கிறார் பவுல். எனவே, எது உண்மை ஞானம் ? என்னும் கேள்வியை எழுப்பி, விடையும் தருகிறார். “யாரும் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம்” என்கிறார். இவ்வுலக படிப்போ, பட்டங்களோ, செல்வமோ நிறை வாழ்வை, இறையன்பைத் தர முடியாது. கிறிஸ்து மட்டுமே நமது ஞானம், நமது செல்வம், நமது பெருமை. அவரது கீழ்ப்படிதல் அனைவருக்கும் பாடம். எனவே, மனிதரைக் குறித்து, நமது சாதனைகளைக் குறித்து நாம் யாரும் பெருமை பாராட்ட வேண்டாம். இயேசுவைக் குறித்து, அவரது தியாகத்தைக் குறித்து பெருமை கொள்வோம். அதுவே உண்மையான ஞானம். மன்றாடுவோம்: ஞானத்தின் ஊற்றான இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் வாழ்க்கையில் பெற்றுக்கொண்ட எதுவும் எங்களுக்குச் சொந்தமல்ல. அனைத்தும் உமக்கே சொந்தம் என்னும்...

செபத்தின் மேன்மை

செபமா? உழைப்பா? இரண்டில் எது சிறந்தது? என்ற கேள்வி ஒவ்வொரு அருட்பணியாளருக்கும் எழக்கூடிய இயல்பான கேள்வி. ஒருபுறம் செபம் தான் சிறந்தது என்று, ஆலய வழிபாடுகளோடு நிறைவு காண்கிறவர்கள். மறுபுறம், மக்கள் பணிதான் இறைவன் பணி என்று, முழுக்க, முழுக்க உழைப்பிற்கும், சமுதாயப்பணிக்கும் முன்னுரிமை கொடுக்கக்கூடியவர்கள். இரண்டுமே அவசியம் என்பது நமக்குத்தெரிந்திருந்தாலும், ஏதாவது ஒன்றினை மையப்படுத்தி நமது வாழ்வை அமைத்துக்கொள்கிறோம். கிறிஸ்தவ வாழ்வை நாம் சிறந்த முறையில் வாழ்வதற்கு, கடவுளுடனான நமது உறவுதான் சிறந்த உந்துசக்தி என்பதுதான் அந்த பதில். ஒருவர் எவ்வளவுதான் சமுதாயப்பணிகள், மக்கள் பணியில் சிறந்து விளங்கினாலும், அவர் தனது வாழ்க்கையில் கடவுளுக்கோ, செபத்திற்கோ நேரம் கொடுக்கவில்லை என்றால், அவருக்கு நிச்சயமாக நிறைவு என்பதே இருக்காது. இயேசுவின் வாழ்வில் இது உறுதியாக வெளிப்படுகிறது. இயேசு பகலெல்லாம் கால்நடையாக நடந்து, பல இடங்களுக்குச் சென்று, போதித்தாலும், அவருக்கு களைப்பு இருந்தாலும், ஓய்வு தேவை என்றாலும், செபத்தில் தந்தையோடு கொண்டிருந்த உறவை...