இயேசுவோடு இருப்போம்
நேர்மையான வழியில் இயேசுவை எதிர்கொள்ளமுடியாத, திராணியில்லாத இயேசுவின் எதிரிகள் அவர் மீது காழ்ப்புணர்ச்சிகொண்டு, ஆதாரமில்லாத பழியை அவர்மீது போடுகிறார்கள். இயேசு பழிச்சொற்களைக்கண்டு பயந்து நடுங்குகிற கோழையல்ல. அவர்களின் வார்த்தைகளைக்கொண்டே வாதத்தைத் தொடங்குகிறார். அவர்களின் தீய எண்ணத்தை முறியடிக்கிறார். இயேசுவின் வல்லமை கடவுளிடமிருந்து அல்ல, பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலிடமிருந்து வருகிறது என்பது அவருடைய எதிரிகளின் குற்றச்சாட்டு. இயேசு அவர்களுக்குத் தருகிற பதில்: ‘நான் பெயல்செபூலைக்கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால், உங்களைச்சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்? என்பது. பாலஸ்தீனத்திலே பேயை ஓட்டுகிறவர்கள் பலர் இருந்தார்கள். அவர்கள் சாலமோன் பேய் ஓட்டுவதற்கு கண்டுபிடித்த ஒருசில முறைகளை கையாண்டு பேய்களை ஓட்டிவந்தனர். அதை மக்கள் ஏற்றுக்கொண்டனர். எனவேதான், இயேசு அவர்களிடம் இப்படியொரு கேள்வியைக்கேட்கிறார். இயேசுவை அவர்கள் குற்றம் சாட்டுவது அவர்கள் மீதே அவர்கள் குற்றம்சாட்டுவதற்கு சமம். இயேசுவோடு இராதவர்கள் கடவுளோடு இல்லை என்பதாக இயேசு சொல்கிறார். “என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார். என்னோடு இணைந்து...