மனத்துணிவோடு வாழ்வோம்
‘இயேசு மீது எறிய யூதர்கள் கற்களை எடுத்தனர்’ என்று வாசிக்கக்கேட்டோம். எதற்காக இயேசுவை கல்லெறிய யூதர்கள் முடிவு செய்தனர்? அதற்கான பதில்: யோவான் 10: 33 “மனிதனாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய்”. பழைய ஏற்பாடு நூலில் லேவியர் 25: 16 ல் வாசிக்கிறோம், “ஆண்டவரின் திருப்பெயரை இகழ்பவர் கொலை செய்யப்படுவார். சபையார் கல்லாலெறிவர்”. இயேசு தன்னை மெசியா, கடவுளின் மகன் என்று சொன்னதால், அவர் கடவுளைப்பழித்துரைக்கிறார் என்பது யூதர்களின் வாதம். எனவே, அவரை கல்லால் எறிய தயாராக இருந்தனர். ஆனால், இயேசு அவர்களின் பகைமையை தனது வாதத்திறமையால் துணிவோடு எதிர்கொள்கிறார். இயேசு தான் கடவுளின் மகன் என்பதை அழகாக நிரூபிக்கிறார். திருப்பாடல் 82: 6 சொல்கிறது: “நீங்கள் தெய்வங்கள்;: நீங்கள் எல்லாரும் உன்னதரின் புதல்வர்கள்”. இந்தப்பகுதியில் நீதித்தலைவர்களை திருப்பாடல் ஆசிரியர் தெய்வங்களாக சித்தரிக்கிறார். ஏழை, எளிய மக்களுக்கு நேர்மையோடு நீதி வழங்கச்செய்யும்போது, அவர்கள் தெய்வங்களாக, கடவுளின் புதல்வர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். ஒரு...