Category: Daily Manna

நிதானமே வாழ்வில் பிரதானம்

மரியா இயேசுவின் மீது அதிக அன்பு வைத்திருந்தவர் என்பது நமக்கு நன்றாகத்தெரியும். எனவே தான், யாருக்கும் அஞ்சாமல் விடியற்காலையிலேயே தன்னந்தனி பெண்ணாக கல்லறைக்கு வந்திருக்கிறார். இப்போதும் கூட நாம் கல்லறைகளைப் பார்த்தால் பயப்படுவதுண்டு. அதிலும், சமீபத்தில் தான் இறந்த ஒருவரை அடக்கம் செய்திருக்கிறது என்றால், கேட்கவே வேண்டாம். அந்த கல்லறை அருகில் செல்லவே நாம் பயப்படுவோம். ஆனால், மரியா சாதாரண பெண்ணாக இருந்தாலும், கல்லறைக்குச் சென்றது, அவள் இயேசு மீது வைத்திருந்த ஆழ்ந்த அன்பைக் குறிக்கிறது. அவளது மனம், இயேசு இன்னும் இறக்கவில்லை என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறது. எத்தனையோ பேருக்கு வாழ்வு கொடுத்தவர், பல புதுமைகளை நிகழ்த்தியவர், நிச்சயம் இந்த சாவிலிருந்து எழுந்து வருவார் என்று கூட அவர் நினைத்திருக்கலாம். அதுவே, அவர் அந்த அதிகாலையில் கல்லறைக்கு வருவதற்கு காரணமாக இருந்திருக்கலாம். கல்லறையில் இயேசுவின் உடலைக் காணவில்லை என்றதும், அவளுக்கு நிச்சயம் கண்களில் அழுகை முட்டியிருக்கும். ஆனாலும், நிதானமாக இருக்கிறாள். அங்கே இரண்டு...

உயிர்த்த ஆண்டவர் தருகின்ற நற்செய்தி

உடலை ஓறுத்தோம் மனதை ஒறுத்தோம். பாவத்தை வெறுத்தோம், தூய வாழ்வை நாடினோம், நாற்பது நாளாக போராடி பெற்று கொண்ட தூய வாழ்வை, இனிமேலும் தொடராமல், இன்றோடு நிறுத்திவிடுவோமானால்… மீண்டும் பழைய பாவ வாழ்க்கையையே நாடுவோமானால்… நாம் மேற்கொண்ட தவ ஒறுத்தல்கள் பயன்ற்றதும் வீணானதுமாக மாறிவிடும் அபாயம் ஏற்பட்டு விடும். ஆகவே அன்பர்களே இந்த தவக்காலத்தில் நாம் மேற்கொண்ட பக்தி முயற்சிகள், ஒழுக்க முயற்ச்சிகள், பிறரண்பு பணிகள், தூய வாழ்வு வாழ்தல் ஆகிய கிறிஸ்தவ பண்புகள் நம் வாழ்நாளெல்லாம் தொடர வேண்டும். இதுவே இயேசு ஆண்டவரின் உயிர்ப்பு பெருநாள் நற்செய்தி. இந்த உயிர்த்த இயேசுவின் நற்செய்தியை நமது வாழ்வாக்கிடுவோம். அனைவருக்கும் இனிய உயிர்ப்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள். Wish you A HAPPY EASTER

பேதுருவின் உயிர்ப்பு அனுபவம்

இயேசு தனது சீடர் ஒவ்வொருவரின் மீதும் எந்த அளவுக்கு அன்பும் பாசமும் வைத்திருந்தார் என்பது, இந்த உயிர்ப்பு நிகழ்ச்சியில் தெளிவாகிறது. இயேசு இறந்தபோது ஓய்வுநாள் நெருங்கிவிட்டதால் அவசர, அவசரமாக அவரது உடலை அடக்கம் செய்தனர். எனவே, வழக்கமாக செய்யும் சடங்குமுறைகளை முழுமையாக அவர்களால் செய்ய முடியவில்லை. செய்ய வேண்டிய சடங்குமுறைகளை செய்துமுடிப்பதற்காக வெகுவிரைவாகவே, ஓய்வுநாள் முடிந்தவுடன் கல்லறைக்குச் செல்கிறார்கள். ஏறக்குறைய எல்லார் மனதிலும் ஒருவிதமான கலக்கமும், திகிலும் நிறைந்திருக்கிறது. எல்லாமே முடிந்துவிட்ட மனநிலையில் அவர்கள் இருக்கிறார்கள். இரண்டொரு நாட்களில் அவர்களின் வாழ்வே மாறிவிடும் என்று அவர்களால் நம்பவே முடியவில்லை. அப்படியிருக்கிற சூழ்நிலையில் தான், இயேசு உயிர்த்துவிட்டார் என்கிற செய்தி, சீடர்களுக்குத் தரப்படுகிறது. இந்த செய்தி அனைவருக்கும் சொல்ல முடியாத மகிழச்சியைத் தந்திருந்தாலும், பேதுருவுக்கு அது மிக மகிழ்ச்சியான அனுபவமாக இருந்திருக்கும். ஏனென்றால் வெண்தொங்கலாடை அணிந்த இளைஞர் பெண்களிடம், ”பேதுருவிடமும், மற்றச்சீடரிடமும் உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவிற்குப் போய்க்கொண்டிருக்கிறார் என்பதைச் சொல்லுங்கள்” என்ற...

தியாகமும் வாழ்வும்

எங்கே தியாகம் இருக்கிறதோ, அங்கே வாழ்வு இருக்கிறது. இந்த உலகம் இருப்பதும், இயங்குவதும், வரலாற்றிலே, வாழ்ந்த தன்னலமற்ற தியாக உள்ளங்களினால் தான். எனை ஈன்ற தந்தைக்கும், எனை வளர்த்த தாய்நாட்டிற்கும், என்னால் சிறிதளவு நன்மை கிடைக்குமானால், செத்தொழியும் நாளும் எனக்கு திருநாளே. இதுதான், தமிழர்களாகிய நம்முடைய முன்னோர்களின் வாழ்வு முறை. இன்று நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது? அடுத்தவனுக்கு குழிவெட்டி, எப்படியாவது நான் வாழ்க்கையில் முன்னேறிவிடலாம் என்கிற பார்வைதான் அதிகம். அப்படிப்பட்ட பார்வையை மறந்து, தியாக உள்ளங்களாக மாற இன்றைய வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு கிறிஸ்து, தான் கடவுளின் மகன் என்கிற உயர்ந்த நிலையை நமக்காக தியாகம் செய்தார். நாம் வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக, தன்னையே வெறுமையாக்கி, அடிமையின் தன்மை பூண்டு, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச்சாவையே ஏற்கும் அளவுக்கு, தன்னை தியாகம் செய்தார். நமக்காக தன் உடலையே உணவாகத்தந்தார். எனவே, நாம் வாழ்வு பெற்றுள்ளோம்....

மாற வேண்டிய வாழ்க்கை முறை

நம்மை நாம் தீர்ப்பிடுவதை விட, அடுத்தவரை நாம் தீர்ப்பிடுவது நமக்கு எளிதானதாக இருக்கிறது. நாம் செய்யக்கூடிய குற்றங்கள் நமக்கு அவ்வளவாக கண்களுக்கு தெரிவதில்லை. ஆனால், அடுத்தவர் செய்யும் குற்றங்கள், அதிலும் குறிப்பாக, யாரை நாம் வெறுக்கிறோமோ அவர்கள் செய்யும் குற்றங்கள் நமக்கு மிகப்பெரிதாக தெரிகிறது. நாம் சாதாரண நிலையில் இருக்கிறபோது, அது மற்றவர்களுக்கு மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்துவதில்லை. ஆனால், நாம் அதிகாரத்தில் இருக்கிறபோது, நமது அதிகாரத்தைப் பயன்படுத்தி, மற்றவர்களை அடக்கி ஆளவும், பழிவாங்கவும் நினைக்கிறோம். அதையே செய்கிறோம். அப்படிப்பட்ட அதிகாரவர்க்கத்தினரின் பழிவாங்கலுக்கு பலியானவர் தாம் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து. ஆனால், தனக்கு அதிகாரம் இருந்தாலும். அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் தன்னுடைய போதனைகளை வாழ்வாக்க வேண்டும் என்பதற்காக, மற்றவர்களின் பாதங்களைக் கழுவி, ஒரு முன்மாதிரியாக வாழ்ந்தவரும் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துதான். இயேசுவின் போதனைகள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு மிகமுக்கிய காரணம் அவருடைய வாழ்க்கை முறை. தொண்டாற்ற விரும்புகிறவர் தொண்டனாக இருக்க...