Category: Daily Manna

எதை கேட்டாலும் செய்வேன்

நம் வாழ்க்கையில் மிகப் பெரிய ஆசீர்வாதம் நாம் கேட்டவை அனைத்ததையும் பெற்றுக்கொண்டோம் என்பதுதான். “நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன்” (யோவான் 14:13, 14:14) இரண்டு முறை இயேசு இதைச் சொல்லுகிறார்.அவ்வாரே நம்பிக்கையோடு கேட்ட யாவரும், கேட்ட அனைத்தையும் பெற்றுள்ளனர் என்பதையும் விவிலியத்தின் பல சான்றுகளில் அறிய வருகிறோம். இவ்வாறு கேட்ட அனைத்தையும் நாம் பெற வேண்டுமானால், அந்த ஆளைப்பற்றிய அனுபவம், அறிவு இருக்கவேண்டும். இந்த ஆளிடம் இதைக்கேட்டால் கிடைக்கும் என்ற அனுபவமும் அறிவும் அவசியம் தேவை.இயேசுவைப்பற்றிய அனுபவமும் அறிவும் நாம் கேட்ட அனைத்தையும் நமக்குத் தர வல்லது. இதைத்தான் கடவுள் நம்பிக்கை அல்லது விசுவாசம் என்று சொல்லலாம். இன்று வரையிலும் அந்த அன்பு தெய்வம் நமக்குச் செய்துவருகிற நன்மைகளை நாம் ஆழ்ந்து சிந்தித்தாலே இந்த இறை அனுபவத்தைப் பெற்றுவிடுவோம்.பெரும்பாலும் கடவுள் நமக்குச் செய்து வரும் நன்மைகளை நாம் சிந்திப்பதே இல்லை. ஏதோ நமது திறமையால் பணத்தால் நாம் சாதித்ததாக...

மனநிறைவு

16 ம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டைச்சேர்ந்தவர்கள் தெற்கு அமெரிக்காவை கைப்பற்றுவதற்கு முயன்றார்கள். அப்போது, அவர்களின் தலைவன் பிரான்சிஸ்கோ பிசாரோ அவர்களிடத்தில் பேசினான்: நண்பர்களே! முக்கியமான முடிவு எடுக்கக்கூடிய கட்டத்தில் இருக்கிறோம். நமக்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கிறது அதில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு வழியாகச் சென்றால், பெரு நாடும், அதன் வளமும் நமக்குச் சொந்தமாகும். ஆனால், அங்கே ஆபத்து அதிகம். அதேவேளையில் பனாமா சென்றால், நமக்கு கிடைப்பது ஒன்றும் கிடையாது. ஆனால், பாதுகாப்பானது. எதை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள்?” என்று கேட்டானாம். சற்று அமைதி அங்கே நிலவியது. தீடிரென்று ஒரு கும்பல் ஆபத்தான பாதைக்கு தயார் என்று சொல்ல, ஒட்டுமொத்த வீரர்களும் அதனை ஆமோதித்தனர். இயேசு விடுக்கக்கூடிய அழைப்பும் இத்தகையது தான். நாம் வாழ்வதற்கு இரண்டு வாய்ப்புகள். எப்படியும் வாழலாம்? என்பது ஒருபுறம். இப்படித்தான் வாழ வேண்டும்? என்பது மறுபுறம். இதில் நாம் தேர்வு செய்வதற்கு சுதந்திரத்தை கடவுள் நமக்குத் தந்திருக்கிறார்....

உண்மையான விசுவாசம்

Success does not mean winning the battle, but winning the war – என்று பொதுவாகச் சொல்வார்கள். போர் என்பது பல நாட்களாக நடக்கக்கூடியது. அதிலே ஒருநாள் வெற்றிபெற்றால், எதிரியை விட சிறப்பாக செயல்பட்டால், அது உண்மையான வெற்றியல்ல. இறுதியாக யார் சிறப்பாகச் செயல்படுகிறார்களோ, எதிரியைத் தோற்கடிக்கிறார்களோ, அவர்கள் தான் வெற்றியாளர்கள். ஒரு விஞ்ஞானி தன்னுடைய கண்டுபிடிப்பிற்காக பலநாட்கள் செலவழிக்கிறார். அதிலே தோல்வி மட்டும் தான் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், திடீரென்று, இத்தனை நாட்களாக தான், எதற்காக உழைத்தோமோ அதனை அவர் சாதிக்கிறபோது, வெற்றி பெற்றுவிடுகிறார். இதுதான் வெற்றி. இதனை மையப்படுத்தி தான், இன்றைய வாசகங்கள் அமைந்திருக்கிறது. இயேசுவின் வாழ்க்கை வெற்றியா? தோல்வியா? என்று யாரிடமாவது கேட்டால், அவரது இறப்பை வைத்து அதை தோல்வி என்று தான் சொல்வார்கள். அவர் அநீதியாக தீர்ப்பிடப்பட்டார் என்று தான் சொல்வார்கள். ஆனால், அது உண்மையல்ல. உயிர்ப்பு இயேசுவின் வெற்றியை எடுத்துச் சொல்கிறது....

இயேசுவோடு இருத்தல்

”ஊரோடு ஒத்து வாழ்” என்ற பழமொழியை நாம் கேட்டிருப்போம். இது இந்த உலகக் கண்ணோட்டத்தை நமக்கு அறிவிக்கக்கூடிய சொற்றொடராக இருக்கிறது. இந்த உலகப்போக்கு எப்படி இருக்கிறதோ, அதற்கேற்ப நாம் வாழ வேண்டும். விழுமியம், மனச்சான்று போன்றவைகளுக்கு அங்கு வேலை இல்லை. நீதி, நியாயத்திற்கா நிற்க வேண்டும் என்பதல்ல. பத்து பேர் அநியாயத்தை, நியாயம் என்று சொன்னால், அதற்கு நாம் துணை நிற்பதுதான், இந்த பழமொழியில் பொருள். இயேசுவின் வார்த்தைகளைப் பின்பற்றினால், நாம் ஊரிலிருந்து ஒதுக்கப்பட்டவர்களாகத்தான் இருப்போம். ஏனென்றால், இன்றைக்கு 99 விழுக்காடு மக்கள் ஊரோடு ஒத்துவாழ பழகிவிட்டார்கள். புதிதாக நாம், விழுமியங்களுக்கு ஆதரவாகப் போராடுகிறபோது, நாம் தனித்து விடப்படுவோம். மற்றவர்களிடமிருந்து விலக்கி வைக்கப்படுவோம். அப்படி இருக்கிறபோது, நாம் கவலைப்படுவதற்கு பதிலாக மகிழ்ச்சி அடைய வேண்டும். காரணம், நாம் இயேசுவின் அருகில் இருக்கிறோம். இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். உண்மையை எடுத்துரைத்தார். அவரை இந்த அதிகாரவர்க்கம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. ஆனால், அவர் கவலைப்படவில்லை....

வாழ்வு ஏற்படுத்தும் தாக்கம்

ஒரு மரத்தை நாம் நடுகிறோம்? எதற்காக? அதிலிருந்து பயன் பெறுவதற்காக, பலன் பெறுவதற்காக. எதை நாம் செய்தாலும், அதிலிருந்து பலன் எதிர்பார்க்கிறோம். இந்த உதாரணத்தைத்தான் நமது வாழ்விற்கு ஒப்பிட்டு இயேசு இன்றைய நற்செய்தியில் பேசுகிறார்? ”நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்”. இந்த இறைவார்த்தையில் இரண்டு அர்த்தங்களை நாம் பார்க்கலாம். 1. கனி தர வேண்டும். 2. அந்த கனி நிலைத்திருக்க வேண்டும். சீடர்களை இயேசு அழைத்தது இந்த இரண்டு காரணங்களுக்காகத்தான். சீடர்கள் அனைவரும் பலன் தர வேண்டும். சீடர்களின் வாழ்க்கை மற்றவர்களுக்கு பயன் உள்ளதாகவும், பலன் உள்ளதாகவும் இருக்க வேண்டும். அதாவது சீடர்கள் நற்செய்தி அறிவிப்பதற்காக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் நற்செய்தி மக்களுக்கு போய்ச் சேர வேண்டும். அந்த நற்செய்தி மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதேபோல, போதிக்கக்கூடிய சீடர்களின் வாழ்வும் மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த இரண்டு பலன்களையும் இயேசு சீடர்களிடம்...