Category: Daily Manna

கடவுள் தரும் மீட்பு

யார் தான் மீட்புப் பெற முடியும்? என்பதுதான் இயேசுவிடம் கேட்கப்பட்ட கேள்வி. இந்த உலகத்தில் ஆன்மீகச்சிந்தனையோடு வாழும் அனைவருமே, தங்களது இலக்காகக் கொண்டிருப்பது, மீட்பு. அனைத்து மதங்களும் இந்த மீட்பைப் பற்றித்தான் வெளிப்படையாக பேசுகின்றன. மதங்களின் கோட்பாடுகளும், அனைவரும் மீட்பு பெற வேண்டும் என்கிற ஒற்றை இலக்கில் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கின்றன. மீட்பு பெறுவது என்பது, நாம் வாழும் உலகில் எளிதானது அல்ல. மீட்பு என்பது நிலைவாழ்வைக் குறிக்கக்கூடிய சொல்லாக இருக்கிறது. இந்த உலகம் நிலையானது அல்ல என்பதுதான், பெரும்பாலான மதங்களின் கருத்தாக இருக்கிறது. அந்த நிலையான வாழ்வு நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. அந்த நிலையான வாழ்வை, நாம் பெறுவதற்கு தகுதி பெற வேண்டும். அதற்கு நாம் கடுமையாக, கடினமாக உழைக்க வேண்டும். பல தடைகளைத் தாண்ட வேண்டும். சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அதுதான் நமது இலட்சியமாக இருக்க வேண்டும். இன்றைக்கு வாழும் மக்கள், சவால்களை சந்திப்பதற்கோ, தோல்விகளை வெற்றிப்படிகளாக மாற்றுவதற்கோ தயாராக...

பெரியவர் தகுதி: பந்தாவா? பணியா?

மத்தேயு 23:1-12 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் இத்திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். “வெட்டி பந்தா வேஸ்ட்” என்பது தொலைக்காட்சியில் நாம் பார்த்த ஒரு விளம்பரம். பந்தா செய்பவர்கள் எல்லாம் வாழ்க்கையில் பெரிய இடத்துக்கு வர முடியாது. செல்வாக்கு நிரம்பிய பெரிய ஆளாகவும் அவர்கள் மாற முடியாது. பின் யார்தான் செல்வாக்கு படைத்த பெரிய மனிதராக மாற முடியும். அதை நற்செய்தி வாசகம் நறுக்கென சொல்கிறது. பணி செய்கிறவர்களே விண்ணரசில் பெரியவராக கருதப்படுவார். அவர்கள் என்றும் அழியாமல் இருப்பார்கள். அவர்கள் பலர் மத்தியிலும் மனங்களிலும் வாழ்வார்கள். அவர்களின் செல்வாக்கு அவர்கள் சென்றாலும் செல்லாது. இந்த பணியில் இவர்கள் செய்யக் கூடாதவைகள் இரண்டு 1. தங்களை உயர்த்தக் கூடாது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒருபோதும் தங்களை உயர்த்திக்...

இறைவனின் அன்பு

அன்பு தான் இந்த உலகத்தின் மொழி. அன்பு தான் நம்மை ஒன்றாக இணைக்கிற மொழி. அன்பு தான் இந்த உலகத்தில் எல்லாமே, என்பதனை நமக்கு உரக்கச் சொல்வது இன்றைய நற்செய்தி வாசகம். இந்த உலகத்தில் இருக்கிற ஒவ்வொருவருமே அன்பு செய்யப்பட விரும்புகிறோம். நாம் அன்பு செய்கிறோமோ, இல்லையோ, மற்றவர்கள் நம்மை நிர்பந்தமில்லாமல் அன்பு செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். இந்த உலகத்தில் நம்மை அன்பு செய்கிறவர்கள் இருக்கிறபோது, அதன் ஆனந்தமே தனிதான். இந்த உலகத்தில் யார் நம்மை வெறுத்தாலும், நமக்கு அன்புகாட்டக்கூடிய இறைவன் இருக்கிறார் என்கிற ஆழமான செய்தி இன்றைய வாசகத்தின் வழியாக நமக்குக் கொடுக்கப்படுகிறது. நம் மீது அன்பு காட்டக்கூடிய இறைவனுக்கு நமது வாழ்வில் நாம் முதலிடம் கொடுக்க வேண்டும். இறைவன் தான் நம் வாழ்வில், எல்லாமுமாக இருக்க வேண்டும். நாம் வாழ்வதும், இருப்பதும், இயங்குவதும் இறைவனுடைய அருளில் தான் என்பதை உணர வேண்டும். இறைவனின் பராமரிப்பு நமக்கு இல்லாவிடில்...

அதிஷ்ட தேவதை உங்கள் கதவைத் தட்டட்டும்…

மத்தேயு 20:1-16 இறையேசுவில் இனியவா்களே! பெருமகிழ்வோடு இந்த நாளை கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். எனக்கு மட்டும் அதிஷ்டமே கிடையாது என புலம்புவோர் நம்மிலர் பலர் இருக்கின்றனர். இவர்கள் கடைசி வரை புலம்பிக்கொண்டே தான் இருப்பார்களே தவிர, அதிஷ்ட தேவதை கதவைத் தட்ட என்ன செய்ய வேண்டும். என்ன முயற்சி எடுக்க வேண்டும் என்பதை ஒருபோதும் நினைப்பதே இல்லை. அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு நல்ல இரண்டு யோசனையை வழங்குகிறது இன்றைய நற்செய்தி வாசகம். அது என்ன யோசனைகள்? தங்கள் வேலையைப் மட்டும் பார்க்க வேண்டும் நமக்கு பிறருடைய வேலையைப் பார்ப்பதே மிகவும் பழக்கமாகிவிட்டது. இப்படிப்பட்ட நாம் எனக்கு லக்கே இல்லை என சொல்வது நியாயம் தான். ஏனென்றால் என் வேலையின் வளர்ச்சிக்காக நான் நினைக்காமல், உழைக்காமல் அடுத்தவர் வேலையில்...

அகந்தை நம்மிடமிருந்து அகன்றுபோகட்டும்

எசேக்கியேல் 28: 1 – 10 அகந்தை நம்மிடமிருந்து அகன்றுபோகட்டும் ஏத்பால் தீர் நாட்டின் அரசன். தற்பெருமையினால் தன்னை கடவுளுக்கு இணையானவனாகக் காட்டிக்கொண்டு, கடவுளுக்குரிய ஆராதனையை மக்களிடத்தில் கேட்கிறான், ”நானே கடவுள், நான் கடல் நடுவே, கடவுளின் அரியணையில் வீற்றிருக்கிறேன்” (28: 2). தன்னை இறைவாக்கினர் தானியேலை விட, அறிவாளியாகக் காட்டிக் கொள்கிறான், (28: 3). ஞானத்தாலும், அறிவாலும் செல்வம் சேர்ந்தது, ஆனால், அதனோடு செருக்கும் சேர்ந்தது. அந்த செருக்கு, அவனுடைய அழிவுக்கு காரணமாக போகிறது. இங்கு, தீர் நாட்டின் அரசன் என்று சொல்லப்பட்டாலும், அது தனிப்பட்ட அரசரையோ, இளவரசரையோ குறிக்கிற வார்த்தையாக பார்க்கக்கூடாது. மாறாக, ஒட்டுமொத்த நகரத்தை, நாட்டைக் குறிப்பதாக நாம் பார்க்க வேண்டும். தீர் நாட்டு மக்கள், தங்கள் நாட்டில் செல்வம் சேர்ந்ததால், கடவுளை விட, தங்களை மேலானவர்களாகக் கருதிக்கொண்டு, கடவுளை மறந்து போயினர். கடவுள் இருக்கிற இடத்தில், அவர்களுக்குள் செருக்கு நுழைந்தது. அதனால் வரப்போகிற அழிவைப் பற்றி...