Category: Daily Manna

வாழ்வு மூலம் கடவுளைப் புகழ்வோம்

இந்த உலகத்தில், நமக்கான கடமையை நாம் நிறைவாகச் செய்கிறபோதுதான், நாம் நிறைவைப் பெறுகிறோம். இந்த உலகத்தைவிட்டு, எப்போது செல்ல வேண்டும், என்கிற நேரம் யாருக்கும் தெரியாது. முடிவு யாருக்கும், எப்போதும் வரலாம். நேற்று இருந்தவர்கள் இன்று இல்லை. நாளை யார், யார் இருப்பார்கள் என்பதும் தெரியவில்லை. அதுதான் நமது வாழ்வு. முடிவு எப்போதும் வரலாம் என்பதுதான் நிதர்சனம். அந்த நிதர்சனத்திற்கு நாம் வாழப்பழகிக்கொள்ள வேண்டும். இந்த நிரந்தரமில்லாத உலகத்தில், எந்நேரமும் நமக்கு அழைப்பு வரலாம் என்கிற சூழலில், நமது கடமையை ஆற்றுவதற்கு நாம் மறந்துவிடக்கூடாது. யோவான் 17: 4 ”நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து, நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன்”. இயேசு தனது தந்தையை மாட்சிப்படுத்துகிறார். எவ்வாறு? அவருடைய கடமையைச் சரிவரச் செய்து, மாட்சிபடுத்துகிறார். இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்தது குறுகிய 33 ஆண்டுகள் தான். காலம் குறைவாக இருந்தாலும், இயேசு குறை சொல்லவில்லை. அந்த...

செல்வத்தினால் வரும் கேடு

இரண்டு சகோதரர்களுக்கு இடையே ஓர் ஊரில் சண்டையோ, வாக்குவாதமோ வந்தால், அவர்கள் உடனே, ஊரிலிருக்கக்கூடிய பெரிய மனிதர்களிடம் முறையிடுவார்கள். அதுபோல, பொதுவாக பாலஸ்தீனத்திலே போதகர்களுக்கென்று, மதிப்பும், மரியாதையும் இருந்தது. ஏதாவது பிரச்சனை என்றால், போதகர்களிடம் சென்று, பிரச்சனையைத் தெரிவித்து, தங்களுக்கு இடையேயான பிரச்சனையைத் தீர்த்துக் கொள்வார்கள். அதுபோன்று தான், இயேசுவிடமும் ஒரு மனிதர் வருகிறார். இயேசு அந்த மனிதனின் தேவையில்லாத பிரச்சனையைத் தீர்ப்பது தனது பணி அல்ல என்பதைத் தெரிவித்தாலும், அதனை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, அங்கிருக்கிறவர்களுக்கு செல்வத்தினால் விளைகின்ற, கடுமையான விளைவுகளை எடுத்துரைக்கின்றார். செல்வம், அந்த செல்வந்தனை இந்த உலகத்தோடு கட்டிப்போட்டு விடுகிறது. இந்த உலகத்தைத் தாண்டி அவன் சிந்திக்கவும் இல்லை. அப்படி ஓர் உலகம் இருப்பது, அவனது எண்ணத்திற்கு வரவும் இல்லை. அவனுடைய சிந்தனை, எண்ணம் முழுவதும் இந்த உலகம் சார்ந்ததாக இருக்கிறது. அதைத்தாண்டி, அவனால் சிந்திக்க முடியாததற்கு காரணம், அவன் சேர்த்து வைத்திருந்த செல்வம். கடல் தண்ணீரை...

தூய கோலத்துடன் அவரை வழிபடுங்கள்

தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுவதற்கு ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார். இந்த திருப்பாடல்களில் (திருப்பாடல் 96: 1, 3, 4, 5, 7 – 8, 9 – 10 ) வேற்றுத்தெய்வங்களைப் பற்றிய செய்தியும் நமக்கு தரப்படுகிறது. இரண்டிற்கும் இடையேயான தொடர்பு என்ன? இஸ்ரயேல் மக்கள் தங்களை வழிநடத்திய இறைவனை மறந்து வேற்றுத்தெய்வங்களுக்கு ஆராதனை செலுத்தினர். அது மட்டுமல்ல, வேற்றுத்தெய்வங்களுக்கு ஆராதனை செலுத்துகிற அவர்கள் யாவே இறைவனையும் வணங்கினார்கள். இஸ்ரயேல் மக்கள் தூய்மையை அதிகமாக வலியுறுத்துகிறவர்கள். தூய்மையற்ற மனதோடு கடவுளுக்கு வழிபாடு செய்யக்கூடாது என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வந்தனர். இப்படிப்பட்ட நம்பிக்கை கொண்ட மக்கள் வேற்றுத்தெய்வங்களுக்கும், யாவே இறைவனுக்கும் ஒரே நேரத்தில் ஆராதனை செலுத்துவது, வேற்று தெய்வங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டனர் என்பதற்கான அத்தாட்சி. ஒருவேளை வேற்றுத்தெய்வத்திற்கு ஆராதனை செலுத்துவது தவறு என்பது தெரிந்திருந்தால், அவர்களை குற்ற உணர்ச்சி ஆட்கொண்டிருக்கும். கடவுளுக்கு ஆராதனை செலுத்துவதற்கு அவர்களுடைய மனம் இடம் தந்திருக்காது. இங்கே அடுத்த...

உண்மை உரைக்கும் தூய ஆவி

இன்றைய நற்செய்தி (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 8-12), தூய ஆவிக்கு எதிரான, மன்னிக்க முடியாத குற்றத்தை நமக்கு உறுதிபடுத்துகிறது. மத்தேயு 12: 31 – 32 மற்றும் மாற்கு 3: 28 – 29 ல், இயேசுவின் குணப்படுத்துகின்ற வல்லமையை, தீய ஆவிகளின் சக்திக்கு ஒப்பிடுகிறபோது, இயேசு இதைச் சொல்கிறார். இந்த திருச்சட்ட அறிஞர்கள், கடவுளுடைய அருளையும், ஆசீரையும் தீய ஆவிகளுக்கு ஒப்பிடுகிறார்கள். யூதர்களைப் பொறுத்தவரையில், தூய ஆவியானவரைப்பற்றிய புரிதல் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். இயேசு இங்கே தூய ஆவியானவரைப் பற்றிப் பேசுகிறபோது, அவர் சொல்கிற அர்த்தமும் நமக்கு விளங்க வேண்டும். அப்போதுதான், நம்மால், சரியான விளக்கத்தைப் பெற முடியும். தூய ஆவியின் செயல்களாக இரண்டு குறிப்பிடப்படுகின்றது. 1. கடவுள் மனிதர்களுக்கு, தூய ஆவியானவர் வழியாக, உண்மையை உரைத்தார். உண்மையை உரைப்பது தூய ஆவியானவரின் பணி. 2. தூய ஆவியனவரின் தூண்டுதலினால் தான், மனித உள்ளம், கடவுள் அறிவிக்கும்...

கடவுளின் உடனிருப்பு

கடவுளின் பராமரிப்பு இங்கே நமக்கு உணர்த்தப்படுகிறது. ஒரு மனிதனின் தலையில், இலட்சக்கணக்கான முடிகள் காணப்படுகிறது. ஆனால், அதில் விழுகிற முடிகள் கூட, கடவுளின் கண்களில் இருந்து தப்பமுடியாது என்றால், கடவுள் நம் மட்டில், எந்த அளவுக்கு அன்பு வைத்திருக்கிறார், எவ்வளவுக்கு நம்மை பராமரிப்பதில் ஆர்வம் காட்டுகிறார், என்பது இங்கே தெளிவாகிறது. நம் அனைவருக்குமே ஒரு காவல் தூதர் தரப்பட்டிருக்கிறார். அந்த காவல் தூதுவரின் பிரசன்னம், கடவுள் நம் மட்டில் வைத்திருக்கிற, பராமரிப்பின் அளவைக் காட்டுவதாக இருக்கிறது. இந்த உலகத்தில் வாழக்கூடிய எல்லா மனிதர்களின் வாழ்க்கையிலும், ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த பிரச்சனைகளுக்கு நாமும் காரணமாக இருக்கலாம், மற்றவர்களும் காரணமாக இருக்கலாம். சில வேளைகளில், பிரச்சனைக்கான காரணத்தையும் நாம் அறிய முடியாமல் இருக்கலாம். எல்லாச் சூழ்நிலைகளிலும் கடவுளின் பராமரிப்பை மட்டும் நாம் மறந்து விடக்கூடாது. அந்த பராமரிப்பின் மீது நாம் வைத்திருக்கிற நம்பிக்கை தான், நமது பிரச்சனைகளிலிருந்து, நாம்...