Category: Daily Manna

செயல்வழிக் கற்பித்தல்

இயேசுவின் கற்பிக்கும் பாணியே அலாதியானது. இன்றைய நாள்களில் கல்வித் துறை ”செயல்வழிக் கற்றல”; என்னும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, மாணவர்கள் எந்த ஒரு செய்தியையும், கற்றலையும் செய்துபார்த்து அதன் மூலம் கற்றுக்கொள்கிறார்கள். மிக திறன்வாய்ந்த கல்வி முறை இந்த செயல்;வழிக் கற்றல்; முறை எனக் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மாணவர்களும் இம்முறையில் நன்கு வளர்சியடைகின்றனர். இயேசு தன்னுடைய இறையாட்சிப் பணியை இந்த செயல்வழிக் கற்றல் முறையிலேயே செயல்படுத்துவதை அறிகிறோம். ஓய்வுநாளில் குணமாக்குவது தவறில்லை, என்பது மட்டுமல்ல, தேவையானது என்னும் இறையாட்சிப் பாடத்தை இந்தச் செயல்வழிக் கற்றல் வழியே இயேசு தம் சீடருக்கும், பிறருக்கும் கற்றுத் தருகிறார். ஓய்வுநாளில் உணவு அருந்தச் சென்ற இடத்தில் நீர்க்கோவை நோய் உள்ள மனிதரை இயேசு பார்க்கிறார். அன்று ஓய்வு நாள் என்பதையும், தான் விருந்துண்ணவே இந்த வீட்டிற்கு வந்திருக்கிறோம் என்பதையும் புறந்தள்ளிவிட்டு, தனது உதவி அம்மனிதருக்குத் தேவை என்பதை அறிந்து உடனே செயல்படுகிறார். நலம் தருகிறார். நலப்படுத்திய...

அனைத்து ஆன்மாக்கள் தினம்

இன்றைய நாளில் அனைத்து ஆன்மாக்களின் திருவிழாவை தாய்த்திருச்சபையோடு இணைந்து கொண்டாட இருக்கிறோம். இந்த கல்லறைத் தோட்டத்தில் பல பேர் அமைதியாக இளைப்பாறிக்கொண்டிருக்கிறார்கள். இங்கே மண்ணில் புதைக்கப்பட்டிருக்கிற பலபேர் நாம் அறிந்தவர்களாக இருக்கலாம். நமது ஊரில் உள்ள பெரியவர்கள், நமது நெஞ்சுக்கு நெருக்கமானவர்கள், நமது உடன்பிறந்தவர்கள், நாம் அதிகமாக அன்பு செய்தவர்கள் என்று பலதரப்பட்ட மனிதர்கள் இங்கே அமைதியாக இளைப்பாறுகிறார்கள். இவர்களது இறப்பு நமக்கு தரக்கூடிய செய்தி என்ன? ஏழை, பணக்காரர், நீதியோடு வாழ்கிறவர், அநீதி செய்கிறவர், நல்லவர், கெட்டவர் என ஒருவர் எப்படி வாழ்ந்தாலும், என்றாவது ஒருநாள், இந்த பயணத்திற்கு ஒரு முடிவு வந்தே தீரும். அந்த முடிவு எப்போது வரும் என்று யாருக்குமே தெரியாது. இங்கே இருக்கிறவர்களில் யாராவது, நாம் இன்றைக்கு இறந்து விடுவோம் என்று நினைத்திருப்பார்களா? நிச்சயமாக இல்லை. ஒருவேளை அவர்கள் மருத்துவமனையில் கடினமான நோயினால் தாக்கப்பட்டு, சிகிச்சைபெற்றுக்கொண்டிருந்தாலும், மருத்துவர்களால் கைவிடப்பட்டிருந்தாலும், ஏதோ ஒரு நம்பிக்கையோடு தான், நாட்களை...

அனைத்துப் புனிதர்களின் விழா

புனிதம் என்பது திருச்சபையால் கொடுக்கப்படும் மிகப்பெரிய மணிமகுடம். நிறைவாழ்வை தங்கள் பலவீனங்களோடு, குறைகளோடு நிறைவாக வாழ முற்பட்டவர்களை, தாய்த்திருச்சபை புனிதர்கள் என்று, போற்றி பெருமைப்படுத்துகின்றது. திருச்சபையினால் அங்கீகரிக்ப்பட்ட புனிதர்கள், இன்னும் வெளிஉலகிற்கு தெரியாமல் புனித வாழ்க்கை வாழ்ந்தவர்களும், நிச்சயம் இந்த உலகத்தில் ஏராளமான பேர் இருப்பார்கள். அவர்களையெல்லாம் இந்த நாளிலே நாம் சிறப்பாக நினைவு கூற வேண்டும். இந்த விழாவானது, அனைத்து ஆன்மாக்கள் தினத்திற்கு முன்னதாக, நவம்பர் முதல் தேதியில் கொண்டாடப்படுகிறது. நான்காம் நூற்றாண்டில், கீழைத்திருச்சபையில் நினைவுகூர்ந்து சிறப்பிக்கப்பட்ட மறைசாட்சிகளின் நினைவுநாளே பிற்காலத்தில் அனைத்து புனிதர்களின் பெருவிழாவாக உருவாவதற்கு காரணமாக அமைந்தது. திருத்தந்தை மூன்றாம் கிரகோரி அவர்கள், புனித பேதுரு பேராலயத்தில் அனைத்து புனிதர்களையும் மறைசாட்சிகளையும் நினைவுகூறும் அடையாளமாக, சிற்றாலயம் ஒன்றை எழுப்பி, அவர்களை மாட்சிமைப்படுத்தினார். இதுவே நவம்பர் முதல் தேதியில் அனைத்து புனிதர்களின் தினமாக அனுசரிக்க, தூண்டுதலாக அமைந்தது. இடைக்காலத்தில் அனைத்து புனிதர்களின் விழாவிற்காக இரவு திருவிழிப்பு மற்றும் எட்டுநாள்...

சிறியவற்றில் நம்பிக்கை கொள்வோம் !

இறையாட்சியை இயேசு கடுகு விதைக்கும், புளிப்பு மாவுக்கும் ஒப்பிடுகிறார். கடுகு விதை மிகவும் சிறியது. ஆனால், வளர்ந்து வானத்துப் பறவைகளுக்கும் தங்குமிடமாகிறது. அதுபோல, புளிப்பு மாவும் சிறிய அளவானது பெரிய அளவு மாவையும் புளிப்பேற்றுகிறது. இறையாட்சியின் செயல்கள் மாபெரும் செயல்களில் அல்ல, சின்னஞ்சிறு செயல்கள் வழியாகப் பரவுகிறது என்கிறார் ஆண்டவர் இயேசு. இயேசுவின் குழந்தை தெரசாள் சிறிய வழி என்னும் சிறு செயல்கள் வழியாகவே பெரிய ஆற்றல்மிகு சாதனைகளைப் படைக்க முடியும் என்று வாழ்ந்து காட்டினார். எனவே, சிறிய செயல்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் நாம் கவனமாக இருப்போம். திருப்பாடல் 131 இந்த சிந்தனையை நன்கு வெளிப்படுத்துகிறது. ”ஆண்டவரே, என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை. என் பார்வையில் செருக்கு இல்லை. எனக்கு மிஞ்சின அரிய, பெரிய செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது. தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது” என்று அருமையாகப் பாடுகிறார்...

நீதி எங்கே? நியாயம் எங்கே?

இயேசு தொழுகைக்கூடத்தில் மக்களுக்குப் போதித்துக்கொண்டிருக்கிறார். போதனை என்பது வார்த்தையோடு நின்றுவிடுவது கிடையாது. வாழ்வைத் தொட வேண்டும். வாழ்வைத் தொடாத போதனையும், வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தாத போதனையும், வெறும் சடங்குதான். இயேசு தனது போதனை அவ்வாறு இருக்க விரும்பவில்லை. எனவே, அவர் போதித்துக்கொண்டிருக்கிறபோதே, மக்களுக்கு இறைவனுடைய அருளையும் பெற்றுத்தந்து கொண்டிருக்கிறார். அவர்களுக்கு சுகம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அவ்வாறு மக்களின் நோய்களைக் குணப்படுத்திக்கொண்டிருக்கிறபோது, தொழுகைக்கூடத்தலைவன் மக்களிடத்தில், தனது கோபத்தைக் காட்டுகிறான். ஓய்வுநாளில், இயேசு குணப்படுத்துவது அவனுக்குப்பிடிக்கவில்லை. ஏனென்றால், சட்டப்படி, அது ஓய்வுநாளை மீறிய செயலாகும். எனவே, தான் சொல்வது நியாயம் என்று நினைக்கிறான். ஆனால், இயேசுவிடம் சொல்லத்துணிவில்லாமல், சாதாரண பாமர மக்களிடத்தில் காட்டுகிறான். ஒருவேளை, அவன் இயேசுவிடம் சொல்லியிருந்தால், அவர் விளக்கம் சொல்லியிருப்பார். ஆனால், அவனோ, மக்களிடத்தில் தனது கோபத்தைக்காட்டுகிறான். அதனால், இயேசுவின் கோபத்திற்கு ஆளாகிறான். இன்றைக்கு, நாமும் இந்த தொழுகைக்கூடத்தலைவன் போலத்தான் இருக்கிறோம். நம்மைவிட கீழாக உள்ளவர்களிடம், நமது அதிகாரத்தையும், ஆணவத்தையும் காட்டுகிறோம். நம்மைவிட,...