சீடத்துவத்தின் சவால்கள்
இன்றைய நற்செய்தியில் (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 25-33) கோபுரம் என்று, இயேசு சொல்வது திராட்சைத் தோட்டத்தில் பாதுகாப்பிற்காக அமைக்கப்படும் கோபுரமாக இருக்கலாம். பொதுவாக, பாலஸ்தீனப்பகுதிகளில் திராட்சைத் தோட்டத்தைப் பாதுகாப்பதற்காக, உயர்ந்த கோபுரங்களை அமைப்பர். அந்த கோபுரம் தங்குமிடமாகவும், திருடர்களிடமிருந்து தோட்டத்தைப் பாதுகாப்பதற்கு வசதியாகவும் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு கோபுரத்தைக் கட்டி முடிக்காமல், இடையில் விட்டுவிடுவது, ஒருவருக்கு அவமானத்தை தருவிக்கக்கூடியது. அதே போல, இயேசுவைப் பின்தொடர்ந்து விட்டு, இடையில் செல்வது, நமக்கு மிகப்பெரிய அவமானம். இயேசுவைப் பின்தொடர்வதற்கு முன்னால், நமது பலவீனங்கள், பலம் அவற்றைக் கருத்தில்கொண்டு, நம்மையே தயார்நிலையில் உட்படுத்தி, அவரை பின்பற்ற வேண்டும். ஆனால், இயேசுவைப் பின்பற்ற ஆரம்பித்தபிறகு, எக்காரணத்தைக் கொண்டும், அதனால் ஏற்படும் சவால்களைக் கண்டு பயந்து ஓடக்கூடாது. இயேசு ஏன் தன்னை முழுமையாகப் பின்பற்ற நம்மைக் கேட்கிறார்? முழுவதுமாக இயேசுவைப் பின்பற்றுவது எளிதான காரியமா? சவால்களை எதிர்கொள்வது கடினமானது அல்லவா, அப்படியிருக்கிறபோது, அது நம்மால் முடியக்கூடிய காரியமா?...